Thursday, July 1, 2021

டோக்யோ ஒலிம்பிக் 2020


 உலகின்  மிகப் பிரமாண்டமான விளையாட்டுகளில்  ஒலிம்பிக்  முதன்மையானது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து  பத்தாயிரத்துக்கும் ஆதிகமான  வீரர்கள் கலந்துகொள்ளும்  போட்டி ஒலிம்பிக்.  ஒலிம்பிக்கில்  கலந்துகொள்வது விளையாட்டு  வீரர்களின்  கனவுகளில் பிரதானமானது.

2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானிய தலைநகரான  டோக்யோவில்  ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளன .பாராலிம்பிக் விளையாட்டு 24 ஓகஸ்ட் முதல் செப்டம்பர் 5 வரை உள்ளது.

கொரோனா  காரணமாக  கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் இம்மாதம் நடைபெற உள்ளது.ஒலிம்பிக்கில் 42 இடங்களில் 339 போட்டிகளில் 33 விளையாட்டு இடம்பெறும். பாராலிம்பிக்கில் 21 இடங்களில் 539 போட்டிகளில் 22 விளையாட்டு இடம்பெறும்.

பெரும்பாலான போட்டிகள்  கிரேட்டர் டோக்கியோ பகுதியில் நடைபெறும்.

சில உதைபந்தாட்டம், மரதன் ஆகியவை ஹொக்கைடோவில் உள்ள சப்போரோவில் நடைபெற  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

  ஜப்பானுக்கு நுழைவதற்கு 159 நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

ஆகையால்  வெளிநாட்டு  ரசிகர்கள் நேரடியாகப்  பார்வையிட முடியாது. 10,000 ஜப்பானிய ரசிகர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.பார்வையாளர்களின் தொகை  50% ஐ தாண்டக்கூடாது. முகத்தில் மாக்ஸ்  அணிந்திருக்க  வேண்டும், சத்தமாகப்  பேசக்கூடாது போன்ற  கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. 

No comments: