Monday, July 26, 2021

ஒலிம்பிக் ரசிகனுக்கு வில்லனான கொரோனா


  விளையாட்டின் மீது  தீராக் காதல்  கொண்ட ஜப்பானிய தொழிலதிபர் கசுனோரி தகிஷிமா, கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு கோடை மற்றும் குளிர்கால விளையாட்டுக்களை கண்டு ரசித்துள்ளார். ஜப்பானில்  ஒலிம்பிக்  நடைபெறும் என  அறிவிக்கப்பட்டதால் அவருடைய  மகிழ்ச்சி  இரட்டிப்பானது.

தாய் நாட்டில்  ஒலிம்பிக்  நடைபெறுவதால்  தனது  நிறுவனங்களில்  பணி  புரியும்  ஊழியர்களும் அதனைப்  பார்க்க  வேண்டும் என  விரும்பி 48,000 டொலருக்கு 197  ரிக்கெற்கள்  வாங்கினார் தகிஷிமா. ஒலிம்பிக்  போட்டியைக்  காண்பதற்கு  ஆர்வமாக  இருந்த தகிஷிமாவுக்கு  கொரோனா எனும்  கொடிய  தொற்று  வில்லனாகியது. கடந்த  ஆண்டு   நடைபெற  திட்டமிடப்பட்ட  ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறும்  என  அறிவிக்கப்பட்டதால்  தகிஷிமா அதிர்ச்சியடைந்தார்.

டோக்கியோ  ஒலிம்பிக்  ஆரம்பநாளன்று மைதானத்துக்கு வெளியே தனது  கைத்தொலைபேசியில்  ஆரம்பவிழாவக் கண்ணீருடன் பார்த்தார். மைதானத்திற்கு மேலே பட்டாசு வெடித்ததும், வெளியே இருந்த மக்கள் ஆரவாரம் செய்து, கைதட்டினார்கள்.அப்போது  தகிஷிமா கண்களில் இருந்து கண்ணீர்  சொரிந்தது. 2005 ஆம் ஆண்டுல் ஜப்பானில் நடந்த ஒரு ஃபிகர்-ஸ்கேட்டிங்  போட்டியை  தகிஷிமா முதன்  முதலில்  பார்த்தார். அதன்  பின்னர்  விளையாட்டுப்  போட்டிகலைப்  பார்ப்பதில்  ஆர்வம்  உண்டானது.

 2006 ஆம்  ஆண்டு  இத்தாலியில்  டொரினோ நகரில் நடைபெற்ற  ஒலிம்பிக்கை தகிஷிமா  முதன்  முதலில்  பார்த்தார். அங்கு ஜப்பானிய ஸ்கேட்டர் ஷிசுகா அரகாவா,   தங்கப் பதக்கம்  பெற்றதும்  உணர்வு பூரமாக  வாழ்த்தினார். போட்டியாளர்கள்  வெற்ரி  பெறும்போதும் பதக்கம்  அணியப்படும்போது  எழுந்து நின்று  கைதட்டி  வாழ்த்துவார்.

 டோக்கியோ ஒலிம்பிக்கில்  28 போட்டிகளிப்  பார்வையிட  தக்ஷிமா திட்டமிட்டிருந்தார்.ஒலிம்பிக்  ரசிகர்  ஒருவர் 128அமர்வுகளைப்  பார்வையிட்ட  சாதனையை  முறியடித்து 134  அமர்வுகளைப்  பார்த்து  புதிய  சாதனையை  ஏற்படுத்தும்  தகிஷிமாவின் திட்டத்துக்கு கொரோனா தடை போட்டது.

பார்வையாளர்களை பாதுகாப்பாக  அனுமதிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக அமைப்பாளர்கள் மீதும், அரசாங்கத்தின் மீது தான் கோபப்படுவதாக தகிஷிமா கூறினார்,

"மற்ற   நகரங்களில் வசிப்பவர்களால் நான் எப்போதும் வரவேற்கப்படுபவனாக இருந்தேன். இப்போது, அவர்களை வரவேற்பது என் முறைதான் . இது மிகவும் வருத்தமாக இருக்கிறது, எனவும் தகிஷிமா தெரிவித்தார்.

ஒலிம்பிக்  ரிக்கெற்றுகளுக்காக  தகிஷிமா செலவளித்த  48,000 டொலர்  அவருக்குத்  திரும்ப  வழங்கப்படும். அனால், அவருக்கு  ஏற்பட்ட இழப்பை யாராலும்  ஈடு  செய்ய  முடியாது.

No comments: