டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு 427 வீரர்களின் பெயரை அவுஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இம்முறை அவுஸ்திரேலிய பழங்குடி வீரர்கள் அதிகளவில் கலந்துகொள்கிறார்கள்.
ஆஷ் பார்ட்டி டென்னிஸில் போட்டியிடும் முதல் பழங்குடி வீரர்,துப்பாக்கி
சூட்டில் தோமஸ் கிரைஸ், டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு விளையாட்டு வீரர் உட்பட 16 பழங்குடி வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலியாவின் அணியில்
இடம் பிடித்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற் ஒலிம்பிக்கில் மிக அதிகளவிலான 482 வீரர்கள் கலந்துகொண்டார்கள்.
கராட்டி, அலைச்சறுக்கு,ஸ்கடோ போடிங்,கிளைம்பிங் உடபட 33 போட்டிகளில் அவுஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.
எட்டாவது ஒலிம்பிக்கில் பங்குபற்றும் குதிரையேற்ற வீரரான ஆண்ட்ரூ ஹோய் அவுஸ்திரேலியாவின் சார்பில் அதிக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ரிய வீரராவார். இன்னொரு குதிரையேற்ற வீரரான 66 வயதான மேரி ஹன்னா அவுஸ்திரேலியாவின் சார்பில் விளையாடும் அதிக வயதான வீரராவார்.
கடந்த ஒலிம்பிக்கில் 8 தங்கம், 11 சில்வர், 10 பிரவுண்ஸ் உட்பட 29 பதக்கங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா 10 ஆவது இடத்தைப் பிடித்தது.
No comments:
Post a Comment