டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் தமது நாடுகளில் இருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டு விட்டனர். விளையாடுகளில் தகப்பனைத் தொடர்ந்து மகன்,தாயைப் பின்பற்றி மகள் பங்குபற்றிய வரலாறுகள் உள்ளன. ஒரே போட்டியில் சகோதரர்கள் பங்குபற்றியமையையும் நாம் பார்த்திருக்கிறோம். பிரிட்டனின் ஒலிம்பிக் குழுவில் மூன்று இரட்டையர்கள் உட்பட 16 சகோதர சகோதரிகள் இடம் பிடித்துள்ளனர்.
ஜப்பானுக்கு
செல்லும் விமானத்தில் ஒன்பதாவது உடன்பிறப்புகளும் இருப்பார்கள், பெண்கள் ஹொக்கி வீராங்கனை ஹன்னா மார்ட்டினின் சகோதரர்
ஹாரி மார்ட்டின் ஆண்கள் அணியில் மேலதிக வீரராக இடம்
பிடித்துள்ளார்.
தடகளம்,படகுவலித்தல் குத்துச்சண்டை,நீச்சல்,ஜிம்னாஸ்டிக்,சைக்கிள் ஓட்டம் ஆகிய போட்டிகலில் பதக்கம் பெற இவர்கள் காத்திருக்கிறார்கள். முன்னதாக ஏழு உடன் பிறப்புகள் பிரிட்டனுக்காக பதகங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இரட்டையர்களான பாட், லூக் மெக்கார்மேக் [26] ஆகியோர் குத்துச் சண்டை போட்டியில்
பங்குபற்றுகின்றனர்.
டிஃப்பனி
போர்ட்டர், [ 33] அவரது இளைய சகோதரி சிண்டி
செம்பர், [26] ஹேடில்ஸில் பங்குபற்றுகின்றனர்.
இவர்கள் இருஅவ்ரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப்
போட்டியிடும் நிலை உள்ளது. 2016 ஆம் ஆண்டு ரியோவில் ஒலிம்பிக்கிலும் இவர்கள் கலந்துகொண்டார்கள்.
படகு வலித்தலில் அலிஸ்டர் ,ஜானி பிரவுன்லீ ஆகியோர் பல சாதனைகளைச் செய்துள்ளனர்.2012 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் இரண்டு தங்கப் பதக்கங்களை அலிஸ்டெய்ர் பெற்றுள்ளார், அதே நேரத்தில் அவரது தம்பி அதே விளையாட்டுகளில் வெண்கலமும் வெள்ளியும் பெற்றார்.
26 வயதான இரட்டையர்களான மெக்கார்மேக், லூக் ஆகியோர் பிரிட்டனின் அணியில் உள்ளனர்., ரியோவில் ஒலிம்பிக்கில் லூக் பங்குபற்றவில்லை. இந்த முறை அணியை உருவாக்கிய பிறகு ஒன்றாக ஒலிம்பிக்கிற்கு பயணம் செய்வார்கள்காமன்வெல்த் சாம்பியனான பாட், டோக்கியோவில் லூக்காவுடன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்: 'இது நம்பமுடியாதது - நான் கடைசியாக ரியோவுக்குச் சென்றேன், இரட்டையர்கள் டோக்கியோவைக் கைப்பற்ற வேண்டிய நேரம் இது.'இருவரும் ஒலிம்பிக்கிற்கு செல்வது நம்பமுடியாததாக இருக்கும். அவருடன் எங்களுடன் இருப்பது மிகவும் நல்லது - நாங்கள் உலகம் முழுவதும் ஒன்றாக போராடி வருகிறோம்.'நாங்கள் வேடிக்கையாக இருக்க விரும்புகிறோம் என்றார்.
அமெரிக்காவை
பிறப்பிடமாகக்கொண்ட உடன்பிறப்பு சகோதரிகள் டிஃப்பனி போர்ட்டர், [33,] சிண்டி செம்பர், [26,] ஆகியோர் 100 மீற்றர் தடை ஓட்டத்தில் ஒன்றாப்
பாங்குபற்றுகின்றனர். 2016 ஆம் ஆண்டு
ரியோ ஒலிம்பிக்கிலும் இவர்கள் போட்டியிட்டனர்.
ஜிம்னாஸ்ரிக்
டோக்கியோவில்
உள்ள ஜிம்னாஸ்டிக்கில் அய்லெஸ்பரி நகரைச் சேர்ந்த பதினாறு வயது இரட்டையர்களான ஜெசிகா,
ஜெனிபர் கதிரோவா ஆகியோர் சாதிக்கக் காத்திருக்கின்றனர்.
2019
ஆம் ஆண்டில் பாசலில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரிட்டனின் முதல் தங்கத்தை ஜெசிகா பெற்றுக்கொடுத்தார்.தனது
நாட்டிற்காக அறிமுகமான போட்டியில் மூன்று பதக்கங்களை
வென்றார்.இவர்கள் டப்ளினில் பிறந்தவர்கள், ஆனால் அஜர்பைஜான் பாரம்பரியம் கொண்டவர்கள். குழந்தைகளாக இருந்தபோது இங்கிலாந்து சென்றனர்.
தடகளம்
டோக்கியோவில் 200 , 400 போட்டிகளில் சகோதரிகளான ஹன்னா, [27], ஜோடி வில்லியம்ஸ்,[ 23], ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பிரிட்டனின் 200 மீற்றர் சம்பியனான ஹன்னா சகோதரியுடன் ஜப்பான் செல்வதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
நீச்சல்
மேக்ஸ்,
ஜோ லிட்ச்பீல்ட் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் மூன்றாவது ஜோடி உடன்பிறப்புகள். பிரிட்டனில் பல பதக்கங்க ளைப் பெற்ற இவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை
உள்ளது.
சைக்கிள்
ஓட்டம்
டோக்கியோ
விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டுதலில் இரட்டையர்கள் சைமன், அடம் யேட்ஸ் ஆகியோர் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். சாலை மற்றும் தட சைக்கிள் ஓட்டுதலில் சிறந்து விளங்குகிறார்கள்.
இவர்களின் தகப்பன் ஜானல் சைக்கிள் ஓட்டா வீரராக வலம் வந்தவர். விபத்தில்
காயமடைந்த பின்னர் தனது இரட்டைப் புதல்வர்களை அந்த வழியில் பயிற்சியளித்தார். சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது இருவரும் மகிழ்ச்சியாகக் கதைப்பதும், ஒருவருக்கொருவர் உணவூட்டுவதும் ரசிகர்களைக் கவர்ந்த
அம்சமாகும்.
படகு
வலித்தல்
சகோதரிகள் மதில்டா, [26,], சார்லோட் ஹோட்கின்ஸ்-பைர்ன்,[ 24,] ஆகிய இருவரும் படகு வலித்தல் போட்டியில் பங்கு பற்றுகிறார்க.. இளைய சகோதரி சார்லோட் இந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியில்நடந்த ஐரோப்பியப் போட்டியில்வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு பயிற்சி பெறத்தொடங்கியது.
படகு வலித்தல்
ஒலிம்பிக்
டாம், 29, அவரது சகோதரி 26 வயதான எமிலி ஃபோர்டு
ஆகியோர் பிரிட்டனின் சார்பில் படகு வலித்தல்
போட்டியில் பங்குபற்றும் இன்னொரு ஜோடியாகும். 13 வயதில் பயிற்சிய
அரம்பித்த இந்த ஜோடியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment