Saturday, July 24, 2021

நூற்றாண்டைக் கடந்த ஒலிம்பிக் சம்பியனான ஜிம்னாஸ்டிக் ராணி


 ஒலிம்பிக்  போட்டிகளில் பதக்கங்கள்  பல  பெற்றவர்களில் நூறு வயதைத்  தாண்டி இன்றும்  வாழ்ந்துகொண்டிருப்பவர் ஏக்னஸ்  கெலடி. ஹங்கேரியைச் சேர்ந்தகெலடி  கடந்த ஜனவரி மாதம்  9 ஆம் திகதி தனது  நூற்றாண்டு விழாவைக்  கொண்டாடினார். டோக்கியோ ஒலிம்பிக்கில்  சாதிக்கக்  காத்திருக்கும் வீரர்களுக்கு தனது  வாழ்த்தைத்  தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியில், புடாபஸ்ரியில் 1921 ஆம்  ஆண்டு  ஜனவரி  9ஆம் திகதி பிறந்த ஏக்னஸ் கெலடி நூற்றாண்டின் போது  ஒலிம்பிக்  நடப்பது சிறப்பம்சமாகும்.  சோகம்,பின்னடைவு, துபுறுத்தல் ,படுகொலை  முயற்சி, மரணவதை  முகாம்  போன்றபல  தடைகளைத்  தாண்டியே கெலடி கெலடியால் சாதிக்க முடிந்தது.

ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து  விளங்கிய ஏக்னஸ்  கெலடி, 16 ஆவது  வயதில் ஹாங்கேரியில் நடந்த  தேசிய போட்டியில்  முதலாவது  தங்கத்தை  வென்றார். ஒலிம்பிக்கில் 5 தங்கம் [1952 ஆம்  ஆண்டு ஒன்று, , 1954 ஆம்  ஆண்டு  நான்கு], 3 வெள்ளி [ 1952  ஆம்  ஆண்டு ஒன்று,195 ஆம்  ஆண்டு இரண்டு], 2  பித்தளை  [ 1956 ஆம்  ஆண்டு இரண்டு] பதக்கங்களையும், உலக  சம்பியன்  போட்டிகளில் 1954  ஆம்  ஆண்டு தலா ஒரு ங்கம்,வெள்ளி, பித்தளை  பதக்கங்களைப்  பெற்றார். 16  வயதி  தொடங்கிய  பதக்க  வேட்டை 35 வயது  வரை  தொடர்ந்தது

கெலடியின் யூத பின்னணி காரணமாக  1940 ஆம்  ஆண்டு விளையாட்டில்  இருந்து  கெலடி  தடை  செய்யப்பட்டார்.இரண்டாவது  உலக  மகா யுத்தம்  கெலடியின் வாழ்க்கையில்  விளையாடியது.1944  ஆம் ஆண்டு மார்ச்  மாதம் ஹிட்லரின் படைகள் கேரியைக்  கைப்பற்றியது. தவறான ஆவணங்களைப் பெற்று ஒரு வேலைக்காரி பெண் பிரோஸ்கா ஜுஹாஸின் அடையாளத்தை எடுத்துக் கொண்டு மரண முகாமுக்கு நாடு கடத்தப்பட்டார். "நான் உயிருடன் இருந்தேன். பைரோஸ்காவிடம் நான் உடைகள் மற்றும் காகிதங்களை மட்டுமல்லாமல், அவள் பேசிய விதத்தையும் மாற்றிக்கொண்டேன், ”என்று கெலெட்டி கூறினார்.  நாஜிப்  ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ வதை முகாமில்  கெலடியின் தகப்பனும்  உறவினர்களும்  கொல்லப்பட்டனர்.

தோல்வியுற்ற சோவியத் எதிர்ப்பு எழுச்சிக்கு ஒரு வருடம் கழித்து 1957 ஆம் ஆண்டில் கெலடி அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். 1959 ஆம் ஆண்டில் ஒரு ஹங்கேரிய விளையாட்டு ஆசிரியரான ராபர்ட் பீரோவை மணந்தார், அவருக்கு இரண்டு குழந்தைகள்  பிறந்தன. அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார், மேலும் இஸ்ரேலிய தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக  கடமையாற்றினார்.


கெலடியின்  நூற்றாண்டு பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டஜிம்னாஸ்டிக்ஸ் ராணி, ஆக்னஸ் கெலெட்டியின் 100 ஆண்டுகள்என்ற என்ற புத்தகம்  வெளியிடப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் பிறந்த அவர், மொத்தத்தில் 10 ஜிம்னாஸ்டிக் பதக்கங்களை வென்றார்.

No comments: