சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தோமஸ் பாக் கடந்த வாரம் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தை சென்றடைந்தார். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஜப்பானிய அரசுடனும், ஜப்பான் ஒலிம்பிக் குழுவிடனும் ஆலோசனை செய்கிறார்.
ஜப்பானிய
ஏற்பாட்டுக் குழுவின் கூற்றுப்படி, பாக் தனது ஹோட்டலில்
மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு டோக்கியோவின் ஹரூமி
வாட்டர்ஃபிரண்ட் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள்
கிராமத்தைப் பார்வையிட்டார்.
தோமஸ்
குக் ஜப்பானுக்கு
விஜயம் செய்த காலப் பகுதியில்
அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
ஏற்பாடுகளில் சில மாற்றங்கள்
செய்ய வேண்டிய நிலை
உள்ளது. ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான சீகோ ஹாஷிமோடோ
மற்றும் டோக்கியோ கோவ் யூரிகோ கொய்கே
உள்ளிட்ட ஜப்பானிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பாக் ஒரு சந்திப்பை
நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை
ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடன்படுத்தப்பட்டுள்ளதால்
பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் இறுதி
நாட்களில் அணு குண்டுவெடிப்பால் பேரழிவிற்குள்ளான
ஹிரோஷிமாவை பார்வையிட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.முன்னதாக டோக்கியோவுக்கு சென்ற சர்வதேச ஒலிபிக் துணைத் தலைவர்
ஜான் கோட்ஸ்ஸும் உட்டன் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரிப்பதால் அவசரகாலநிலை
அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலநிலை அமுலில் இருந்தாலும்,
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உலகின் முன்னணி நாடுகள் கடுமையாகப்
போட்டியிடுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் வாக்களிப்பதன்
மூலமே ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு தெரிவு செய்யப்படுகிறது.ஒலிம்பிக்கை நடத்துவதற்கு பெரும் தொகைப்பணம் செலவு செய்யப்படுகிறது.
வெளிநாட்டு ரசிகர்களும்,
உல்லாசப் பயணிகளும்
விஜயம் செய்வதால்
ஒலிம்பிக்குக்காக செலவு
செய்த பணத்தில் ஒரு தொகைப் பணத்தை மீளப்
பெற சந்தர்ப்பம் உள்ளது.
ரசிகர்கள்
இல்லாமல் ஒலிபம்பிக் போட்டிகள்
நடைபெற உள்ளதால் ஜப்பானுகு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பு ஜப்பானின்
பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வதற்கு
ஜப்பான் என்ன செய்யப்போகிறதெனத் தெரியவில்லை.
No comments:
Post a Comment