Monday, July 19, 2021

கொங்குநாடு கோஷம் தமிழகத்தை பிரிக்கும் முயற்சியா?


 தமிழகத்தில்  சூடு  பிடிக்கும் விவகாரமாக  கொங்குநாடு எனும் சொல்  மேலெழுந்துள்ளது. இந்தியப்  பிரதமரின் அமைச்சரவை விரிவாக்கம் ஜுன் மாதம் 8 ஆம்  திகதி நடந்தது.    மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கான அறிமுக விவரக் குறிப்பில்கொங்கு நாடுஎன்று இடம்பெற்றது. அதனை  மேற்கோள் காட்டி தமிழகப் பத்திரிகை  ஒன்று, "கொங்குநாடு" உருவாகப் போகிறது என கட்டுரை ஒன்றை  பிரசுரித்தது. அதன்  பின்னர்  கொங்குநாடு ஊடக விவாதமானது.

இந்திய  மத்திய  அரசு என்ற  சொற்பதமே  இதுவரை வழக்கத்தில் இருந்தது. தமிழக முதல்வராக ஸ்டாலின்  பதவி  ஏற்றதும்,மத்திய அரசு என்று  சொல்லாமல் ஒன்றிய  அரசு என்றார். ஒன்றிய  அரசு என்ற சொல் பாரதீய ஜனதா கட்சியை உசுப்பிவிட்டது.ஸ்டாலினுக்குப்  பதிலடி கொடுக்கக் காத்திருந்த  பாரதீய ஜனதாக் கட்சி, எல். முருகனின் பெயருக்கு முன்னால் கொங்குநாடு எனக்  குறிப்பிட்டு சீண்டியது.,ஒரத்தநாடு,வல்லநாடு,வருசநாடு, கொங்குநாடு   என்பன தமிழகத்தில்  பேச்சு வழக்கில்  உள்ளவை. கொங்குநாட்டை  கொங்கு  மண்டலம் எனவும் அழைப்பர்.

இந்திய மாநிலங்களில்  பலமுடன் உள்ள  கட்சிகளைப் பிரித்து ஆட்சியைப்  பிடித்த  பாரதீய  ஜனதாவால் தமிழகத்தில்  கால்  பதிக்க  முடியவில்லை. அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தமிழகத்தில்  ஆட்சியில் இருந்தபோது பாரதீய ஜனதாவின் கை ஓங்கி  இருந்தது. ஸ்டாலின்  முதல்வரானதும் எதிர்க் கட்சிகளின் கை ஒடுக்கப்பட்டது.

இந்தியாவில்  இருந்து  பிரிந்து செல்ல நடந்த  போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. மாநிலத்தைப்  பிரிக்க வேண்டும் என்ற  கோஷங்களும்  முளையிலேயே கிள்ளப்பட்டன. ஆனால், இந்திய  மத்திய  அரசே  இல்லாத  ஒரு  நாட்டை  உருவாக்கி  இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

எம்.ஜி.ஆர்  காலத்தில் இருந்தே கொங்குமன்டலம்  அண்ணா திராவிட முன்னேற்றக்  ழகத்தின்  கோட்டை. தேர்தல்கலின் போது  கொங்குமன்டலம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்குக்  கைகொடுத்தது. கே.பி. முனுசாமியைத் தவிர அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்கள் யாரும் இதனைப் பெரிதாக எடுக்கவில்லை. சின்னச்  சின்னப்  பிரச்சினைகளுக்கு டுவிட்டரில்  பதிலளிக்கும் எடப்பாடியும், பன்னீரும்  மெளனமாக இருக்கின்றனர்.

திராவிட  முன்னேற்றக் கழகத்துக்கு கொங்கு  மண்டலத்தில்  பலமான  தலைவர்கள்  யாரும்  இல்லை. அதற்காகவே கமலின் சகாவான  மகேந்திரனை கட்சியில்  சேர்த்துள்ளது. மகேந்திரனின்  செல்வாக்கினால் கொங்கு  மன்டலத்தில்  பலமாகக் கால் பதிக்கலாம் என  ஸ்டாலின்  நினைக்கிறார்.

கோவையில் அத்வானி  கலந்துகொண்ட  கூட்டத்தில்   நடைபெற்ற  குண்டு  வெடிப்பின்  பின்னர் பாரதீய  ஜனதாக் கட்சி அங்கு தனது பிரசாரத்தைத் தீவிரமாக்கியது. குண்டு  வெடிப்பின்  வருடாந்த  நினைவு நாளை நடத்தி தனது  இருப்பை பலப்  படுத்திஉள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், .பி.முருகானந்தம், கனகசபாபதி என பலருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியில் மிக்கிய   பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும், அண்ணாமலை மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொங்கு  மண்டலத்தை  வளைக்கும் அரசியலை பாரதீய  ஜனதா வலுப்  படுத்தத்  தொடங்கி  உள்ளது.

தமிழகத்தில்  இருந்து  கொங்குநாடு பிரிக்கப்பட்டு ஜூனியன் பிரதேசமாக மாற்றும் திட்டத்தை  பாரதீய  ஜனதாக் கட்சி கையில் எடுத்துள்ளது  என்ற  விவாதம் வலுப்  பெறுவதால் தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் அதனை  மறுத்துரைக்கின்றனர்.

கொங்கு நாடுஎன்ற கோரிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால், ‘திராவிடநாடு’, ‘ஒன்றிய அரசு’ , தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பிரிவினை உள்நோக்கத்துடன் பேசி வருபவர்களுக்கு பதிலடியாககொங்கு நாடுகோரிக்கை இருக்கும். கொங்கு நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு என்பதெல்லாம் இந்தியாவில் இருந்தவை. இல்லாத திராவிட நாடு என்பதை சொல்லிக் கொள்ளும்போது, ஏற்கெனவே இருந்தகொங்கு நாடுஎன்று சொல்வதில் தவறு இல்லை. அவர்கள்திராவிட நாடுஎன்று சொல்லும் வரை, நாங்கள்கொங்கு நாடுஎன்று சொல்லிக் கொண்டே இருப்போம்   என்று யாதவ மகாசபை தேசியத் தலைவரும், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா அல்லது உத்தரகாண்ட் மாநிலங்கள் போல இல்லாமல், தமிழ்நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் தனி கொங்குநாடு பற்றி ஒருபோதும் கோரிக்கை அல்லது விவாதங்கள் இருந்ததில்லை. எனவே, விவாதத்தில் எந்த அரசியல் அல்லது சமூக பொருத்தங்களும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு என்பதை விட ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிற திமுகவின் உறுதியான நிலைப்பாடு.  மாநிலத்தை பிரிக்கும் எந்த நடவடிக்கையையும்  பாரதீய  ஜனதா மறுத்துள்ளது.

  கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், அமைப்பு என யாரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. போடோலாந்து, கூர்காலாந்து கேட்கிறார்கள் என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள். அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அப்படி ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. கொங்கு வேளாளர் ஒரு பகுதியினர் அங்கு இருக்கிறார்கள் என்றாலும் முக்குலத்தோர், ஒக்கலிகர், வன்னியர், நாடார் என எல்லோரும் கலந்த பகுதி. அதுமட்டுமல்ல, வட மாநிலத்தவர்களையும் உள்ளடக்கிய தொழில் நகரம்.

அரசியல்வாதிகள்  தம்  இஷ்டத்துக்கு கொங்குநாடு என  குறிப்பிட்டதை  ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. கொங்குநாடுஎன்ற கருத்தை ஆதரிப்பதாக சில பாஜக சமூக ஊடக பயனர்களிடம் காணப்பட்டதை அடுத்து, மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறித்து தமிழகத்தில் ஒரு விவாதம் நடைபெறுகிறது.

பாட்டாளி  மக்கள் கட்சியின்  நிறுவுனர் நன்னியர்  பகுதிய  தனியாகப்  பிரிக்க  வேண்டும் எனவும், நிறுவனர் ராமதாஸ், கொங்கு பகுதியா  தனியாகப்  பிரிக்க  வேண்டும் என ஈஸ்வரனும்  தொடர்ச்சியாகத்  தெரிவித்து  வருகின்றனர். தமிழக  முதல்வர்  திராவிடநாடு என்கிறார். இவற்றை  பாரதீய  ஜனதாவால்  சகிக்க  முடியவில்லை. பாநிலக்  கட்சிகலின்  துணை  இல்லாமல் பாரதீய ஜனதாவால் தமிழகத்தில்  வெற்றி  பெற முடியாது.

கொங்கு நாடு என்று எழுதிய எல்.முருகனே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகள் பேசவில்லை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. எந்தவித சட்டதிட்டத்துக்கும், வரன்முறைக்கும் ஒத்துவராத கோரிக்கை. அதை பாரதீய  ஜனதா ஏற்றுக்கொள்ளாது. அரசியல் தெளிவில்லாதவர்கள் வேண்டுமானால் இது குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். மற்றபடி கொங்கு நாடு என்ற பேச்சு அர்த்தமற்றது என்பதே  பெரும்பாலானோரின்   கருத்து.

No comments: