ஆண்களுக்கான 61 கிலோ பளுதூக்கும் போட்டியில் சீன வீரர் ஃபேபின் லீக்கும் இந்தோனேஷிய வீரர் எகோ யூலிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. அப்போது யாரும் எதிர் பாராத வகையில் . தன்னுடைய உடல் எடையை விட மூன்று மடங்கு எடையை (166கிலோ) தூக்கிய ஃபேபின், ஒற்றைக் காலில் நின்றபடி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
இறுதியில்
மொத்தம் 313 கிலோ எடை தூக்கி
தங்கப்பதக்கத்தை தனதாக்கினார் ஃபேபின். பளுதூக்கும் போட்டியில் சீனா வாங்கும் இரண்டாவது
தங்கம் இது. இந்தோனேஷிய வீரர் 302 கிலோ
எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப்
பிடித்தார்.
இதை 'ஃப்ளமிங்கோ மூவ்' என ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஃப்ளமிங்கோ (செங்கால் நாரை) பறவை இப்படித்தான் ஒற்றைக் காலில் நின்று இரை தேடுமாம். இது போன்று செய்ய வேண்டாம் என ஃபேபின் எச்சரித்துள்ளார்.2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒற்றைக் காலில் நின்றபடி எடை தூக்கி ஆச்சரியப்படுத்தினார்.61 கி.கி எடை வகுப்பில் அறிமுகமானபோது இரண்டு ஒலிம்பிக் சாதனைகளை முறியடித்தார்.
No comments:
Post a Comment