டோக்கியோ
ஒலிம்பிக்கில் பங்குபற்ரும் நீச்சல் வீரர்கள் தலையில் அணியும் கறுப்பு நிற தொப்பிக்கு
தடை விதிக்கபப்ட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பிடிட்டன்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும்
முதல் கறுப்பின பெண் நீச்சல் வீரராக
திகழ்ந்த ஆலிஸ் டியரிங் உடன்
கூட்டு சேர்ந்துள்ள சோல் கேப் தயாரித்த
கறுப்பி நிற தொப்பிகளை
நிராகரிப்பதாக சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு
(ஃபைனா) அறிவித்துள்ளது. சோல் கப் எனப்படும் கறுப்பு நிற
தொப்பிகள் "தலையின் இயல்பான வடிவத்திற்கு"
பொருந்தாது என்றும், "சர்வதேச போட்டிகளில்
பங்குபற்ரும் விளையாட்டு வீரர்கள் ஒருபோதும் பயன்படுத்தவில்லை, தேவையில்லை என்றும்
ஃபைனா அறிவித்துள்ளது.
“இந்த அறிவிப்பு விளையாட்டைச் சுற்றியுள்ள உள்ளார்ந்த அமைப்பு மற்றும் நிறுவன ஏற்றத்தாழ்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது (விளையாட்டில்) பன்முகத்தன்மை இல்லாததை உறுதிப்படுத்துகிறது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பிளாக் நீச்சல் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர் டானியல் ஓபே தெரிவித்தார்.
No comments:
Post a Comment