இத்தாலிக்கு எதிரான யூரோ2021 கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பெனால்ரியில் தோல்வியடைந்ததற்கு இங்கிலாந்து அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்தான் என இங்கிலாந்தி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹரி கேன், ஹேரி மேகுவர் இருவரும் கோல் அடித்தனர். மார்க்கஸ் ராஷ்ஃபோர்டு, ஜேடன் சாஞ்சோ, புக்காயோ சாகோ ஆகிய மூவரும் கோல் அடிக்கவில்லை. ''வந்தேறிகளால்தான் இங்கிலாந்து தோற்றது'' என இந்த வீரர்களின் நிறம் மற்றும் பிறப்பிடும் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்துவருகிறார்கள் சில இங்கிலாந்து ரசிகர்கள்.
இங்கிலாந்தின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் இத்தாலி ரசிகர்கள் மீதும், இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
மார்க்கஸ் ராஷ்ஃபோர்டின் குடும்பம் கரிபீயன் தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. புக்காயோ சாகா நைஜீரிய பின்னணி கொண்டவர். ஜேடன் சாஞ்சோவின் பெற்றோர் மேற்கு.இந்தியத்தீவுகளில் இருந்து இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்கள். ‘’வெளிநாட்டில் இருந்த வந்த வீரர்களால்தான் நாம் தோற்றோம். பூர்வீக இங்கிலாந்து வீரர்கள் இருவரும் சரியாக கோல் அடித்து விட்டார்கள்’’ எனத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் இனவெறி ரசிகர்கள்.இறுதிப் போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறிய இத்தாலிய ரசிகர்களை தேடித்தேடி தாக்கினார்கள் இங்கிலாந்து ரசிகர்கள்.
‘இனவெறித் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது’ என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டித்தும் லட்சணக்கணக்கான இனவெறி ட்வீட்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment