ஒலிம்பிக்கில் விளையாடுவது வீரர்களின் கனவு சில போட்டிகளில் இவர்தா தங்கம் பெறுவார் என ரசிகர்கள் எழுதி வைத்துவிடுவார்க. சில வேளை அரிதாக அந்த வீரர் தங்கத்தைத் தவற விடுவதுண்டு.
ஆண்களுக்கான
ரீகர்வ் அம்புவிடும் போட்டியில் மூன்று
முறை ஒலிம்பிக் சம்பியனான ஜின் ஹியெக்கை தோல்வியடையச் செய்து
நம்பிக்கையளித்துள்ளார் இந்திய வீரரான
அடானு தாஸ்.முதல் சுற்றில்
வெற்றிபெற்ற இந்திய வீரரான
அடானு தாஸ்[29 வயது] ,தென்.கொரிய வீரரான ஓ ஜின்-ஹியெக்
[ 39 வயது ]உடன் மோதினார்.போட்டி
அட்டவணை வெளியானது வெற்றி பெறும் வீரர் யார்
என்பதை ரசிகர்கள் கணித்துவிட்டனர்.
ஜின்-ஹியெக் இதுவரை மூன்று
ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கிறார். 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் தனிநபர்
பிரிவில் தங்கமும், அணிப் பிரிவில் வெண்கலமும்
வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில், சில தினங்களுக்கு முன்
நடந்த ரீகர்வ் அணிப் பிரிவிலும்
தங்கம் வென்றார்.
முதல் சுற்றில் 26 - 25 என வென்று 2 புள்ளிகள் பெற்றார் ஜின்-ஹியெக். இரண்டாவது, மூன்றாவது செற்களில் இரு வீரர்களும் 27 புள்ளிகளாக எடுக்க, 2 செட்களுமே டை ஆனது. அதனால், ஒவ்வொரு செட்டுக்கும் ஆளுக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. மூன்றாவது சுற்றின் முடிவில் 4-2 என முன்னிலையில் இருந்தார் ஜின்-ஹியெக்.நான்காவது செற்றிலும் ஐந்தாவதுசெற்றிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க நான்காவது செற் 4-4, எனவும், ஐந்தாவது செற் 5-5 எனவும் புள்ளிகள் பகிந்து கொடுக்கப்பட்டதால் போட்டி டை ஆனது.
இதனால்,
ஆட்டம் ஷூட் அவுட்டுக்குச் சென்றது.
இருவரும் ஒரேயொரு அம்பை எய்வார்கள்.
அதிக புள்ளிகள் பெறுபவர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இருவரும் ஒரே புள்ளி பெற்றால்,
யாரின் அம்பு மையப்புள்ளிக்கு மிக
அருகில் இருக்கிறதோ, அவருக்கே வெற்றி
பரபரப்பான ஷூட் அவுட். இலண்டன் ஒலிம்பிக் சாம்பியனை எதிர்கொள்கிறார் அடானு. முதலில் அம்பை எய்த ஜின்-ஹியெக் 9 புள்ளிகள் எடுத்தார். அடானுதாஸ் வெற்றி பெற வேன்டும் என இந்திய ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஒலிம்பிக் சம்பியன் மீது ஏனைய ரசிகர்க நம்பிக்கை வைத்தனர்.கடைசி நொடியில் நன்றாக நேரம் எடுத்து அடானு எய்த அம்பு, மையப்புள்ளிக்கு மிக அருகே பாய, 10 என்று நடுவர் அறிவிக்க, 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஒருவரை வென்று சரித்திரம் படைத்தார் அடானு தாஸ். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
பரபரப்பான
இந்தப் போட்டியை
நேரில் பார்த்துகொண்டிருந்த அடானு
தாஸின் மனைவியும், உலகின் நம்பர் 1 வீராங்கனையுமான
தீபிகா குமாரி தன் கணவருக்காக
கரகோஷம் எழுப்பி உற்சாகக் குரல் கொடுத்தார்.
இலண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதகமும் பெற்ற ஜப்பான் வீரர் டகரு புருகாவை 31 ஆம் திகதி சனிக்கிழமை அடானு தாஸ் எதிர்கொள்கிறார்.
No comments:
Post a Comment