Wednesday, July 28, 2021

நீச்சலில் சாதித்த லிடியா ஜேகோபி


 டோக்கியோ  ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர் பிறெஸ்டோக் வை நீச்சல் போட்டி  நடைபெற்ற போது அனைவரின் கவனமும் அமெரிக்க  வீராங்கனையான லில்லி கிங்  மீது  இருந்தது. ஆனால், யாருமே  எதிர்பார்க்காத இன்னொரு  அமெரிக்க போட்டியாளரான 17 வயதான லிடியா கோபி தங்கம் வென்றார். லில்லி கிங்குக்கு  வெண்கலம் கிடைத்தது.

 நீச்சலில் இரன்டாவது தங்கத்தை  பெறுவார் என  எதிர்பார்க்கப்பட்ட லில்லி கிங் மூன்றமிடத்தை  பெற்றதை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.போட்டி  ஆரம்பமானபோது சற்று பின்தங்கிய லிடியா, கடைசி 50 மீற்றரில் வேகமெடுத்து , 1 நிமிடம் 4.95 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்று அசத்தினார். தென் ஆப்பிரிக்காவின் தத்யானா ஷூன்மாக்கர் என்ற வீராங்கனை வெள்ளி வென்றார் லில்லி கிங்குக்கு இது  மூன்றாவது  ஒலிம்பிக்  பதக்கமாகும்.

தங்கப் பதக்கம் பெற்ற லிடியா ஜோகோபி கருத்துத் தெரிவிக்கையில்  "நான் உண்மையில் பதக்கத்தை குறிவைத்தே எனது வேகத்தை கூட்டினேன். ஆனால் தங்கம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பெயர்ப்பட்டியலில் என்னுடைய பெயர் முதலில் இருந்ததை பார்த்த போது, என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.

 வெண்கலம் வென்ற லில்லி கூறுகையில், "நான் ஆச்சரியப்படுகிறேன். என் செயல்பாட்டை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். லிடியா போன்ற எதிர்கால வீராங்கனைகள் உருவாதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார். 

No comments: