ஜிம்னாஸ்டிக்கின்
முடிசூடா ராணி, அமெரிக்காவின்
சூப்பர் ஸ்டார்
என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிமோன் பைல்ஸ்
அமெரிக்க மகளில்
ஜிம்னாஸ்டிக் குழுவில்
இருந்து வெறியேறியதால்
ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகளிருக்கான
ஜிம்னாஸ்டிப் போட்டி ஆரம்பமானபோது
அமெரிக்க மகளிர்
குழுத் தலைவரான சிமோன் பைல்ஸ்
புதிதாக சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு
எழுந்தது. ரசிகர்கள் எதிர் பார்த்த அந்த நேரம் வந்தது.
உலகெங்கும் உள்ள
சிமோன் பைல்ஸுடைய ஆதர்வாளர்களின்
கண்கள் தொலைக் காட்சியை உற்று நோக்கின.
உடம்பை வில்லாக வளைத்து,
அந்தரத்தில் பறந்து மாயாஜாலம் காட்டும் பைல்ஸ் பதற்றப்படுவதைக் கண்டு
ரசிகர்கள் கலங்கினர். பைல்ஸின் முகத்தில் வழமையான பிரகாசம் இல்லை.
அவருடைய அசைவுகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன.
அரியேக் ஜிம்னாஸ்டிக்ஸ் மையத்தில் சிமோன் பயிற்சி செய்தபோது அவரால் சரிவர துல்லியமாக தனது இலக்கைஅடைய முடியயாது தடுமாறினார். போட்டியின் போதும் இந்த தவறு எதிரொலித்தது. அவர் வெறும் 13.733 எனும் புள்ளைகளை மட்டுமே பெற்றார். சோபை இழந்த பைல்ஸ், போட்டி முடிந்து வெளியேறிய போது சக போட்டியாளர்களும்,, பயிற்சியாளரும் ஆறுதல்படுத்தினார்கள்.
ஏழு தேசிய சாம்பியன்ஷிப் பதக்கங்கள்,
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற 19 பதக்கங்கள்,நான்கு தங்கம் உட்பட
ஐந்து ஒலிம்பிக்
பதக்கங்கள் பைல்ஸுடம் இருக்கின்றன.
4 அடி
8 அங்குலம் உயரம் மட்டுமே கொண்ட
இந்த தங்க மகள் அமெரிக்காவில்
உள்ள டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர். 24 வயதாகும் இவர்தான் இப்போதைய ஜிம்னாஸ்டிக் உலகின் தன்னிகரற்ற சாம்பியன்.
2013-ம் ஆண்டு ஜிம்னாஸ்டிக் போட்டியில்
அறிமுகமானார். உலக
சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் 25 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் ஏதாவது புதுவிதமான நகர்வை (ஜிம்னாஸ்டிக்கில்) செய்தால் அதற்கு அந்த வீரரின் பெயரே சூட்டப்படும். இதுவொரு கௌரவம். இப்படி பைல்ஸ் பெயரில் நான்கு ஜிம்னாஸ்டிக் திறன்கள் இருக்கிறது. ஐந்தாவதாக ஒன்றை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்துவதற்கு தயாராக இருக்கிறார். புவுயீர்ப்பு விசையை தோற்கடித்து செய்யும் இந்த வித்தையை இதுவரை ஒலிம்பிக் போட்டியில் ஆண் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள்
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லேரி நாசரால் தானும்
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என்ற அதிர்ச்சியான செய்தியை
2018ம் ஆண்டு உலகுக்கு தெரிவித்தார்
சிமோன் பைல்ஸ். ஏற்கனவே நூற்றுக்கணக்கான
வீரர்கள் நாசர் மீது புகார்
தெரிவித்திருந்தனர்.
பைல்ஸ்
தனது பயிற்சியாளர் சிசிலி லாண்டி, அமெரிக்க
ஜிம்னாஸ்டிக்ஸ் தடகள பயிற்சியாளருடன் பைல்ஸ் ஆலோசனை
செய்த பின்னர் இறுதியில் அவர்
போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
"சிமோன்
ஒரு மருத்துவ பிரச்சினை காரணமாக இறுதி போட்டியில்
இருந்து விலகியுள்ளார். எதிர்வரும் காலக்கட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான மருத்துவ அனுமதியை பெற, அவர் தினமும்
ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்" என்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க பயிற்சியாளரின் கருத்துக்களின்படி, "பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறுவது உடல் காயத்தினால் அல்ல. அவரது மனநல பிரச்சினையே காரணம்" என்று கூறியதாக என்.பி.சி செய்தி வெளியிட்டது. டோக்கியோவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அமெரிக்க அணி தகுதிப் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே பைல்ஸ் தான். பெரும் இழப்பு அவர் மீது வைக்கப்படும் அளவுக்கதிகமான பிரஷரே அவரது பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறி இருப்பது அமெரிக்க அணியின் மிகப்பெரிய இழப்பாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க
மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ்
அணி அதன் தலைவரான சூப்பர்
ஸ்டார் சிமோன் பைல்ஸ் இல்லாமல்
போட்டியில் கலந்துகொண்டது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலிருந்து சீமொன்
பைல்ஸ் விலகிய பின்னர் சுனிசா லீ, கிரேஸ்
மெக்கல்லம், ஜோர்டான் சிலிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணி அணி 169.529 மதிப்பெண்களுடன் தங்கம் வென்றது, அமெரிக்க மகளிர் அணி மொத்தம் 166.096 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது..இங்கிலாந்து 164.096 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பதினொரு ஆண்டுகளில் அமெரிக்க பெண்கள் ஒரு பெரிய சர்வதேச போட்டியில் அணி தங்கம் வெல்லாதது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment