Friday, July 9, 2021

ஆரவாரம் , ஆர்ப்பாட்டம் இல்லாத ஆரம்பவிழா

ஒலிம்பிக்  ஆரம்ப நாள்  மிகவும்  உணர்ச்சிமயமானது. ஆரம்ப  விழாவிலும்  இறுதி  நாளிலும்  பங்குபற்ற  வேண்டும் என்பது  பல  ரசிகர்களின்  விருப்பம். ஆரம்ப  நாளன்று  மைதானமே அதிரும்  கோஷங்கள் , வாழ்த்துகள், அரங்கம்  நிறைந்த ரசிகர்கள்  போன்ற  எதுவும்  இம்முறை  இல்லை. உலகை அச்சுறுத்தும் கொரோனா ஒலிம்பிக்கையும் அடக்கி  வைத்துள்ளது.

ஒலிம்பிக்  ஆரம்ப விழா நடைபெறும்  மைதானத்தில் 68,000 பார்வையாளர்கள்  அமரக்கூடிய வசததி  உள்ளது. சிறப்பு  விருந்தினர்கள், விளையாட்டு  அதிகாரிகள்அனுசரணையாளர்களுட்பட 10,000க்கும்  குறைவானவர்களே அனுமதிக்கபப்டுவார்கள்.வெளிநாட்டுப்  பார்வையாளர்களுக்கு  அனுமதி  வழங்கப்படவில்லை. ஆனால், ஜப்பானில் அதிகரித்ஹ்டுவரும் கொரோனா  தொற்றால் ஒலிம்பிக்  போட்டிகலைப்  பார்வையிடும்  மக்களின்  ஆர்வம்  குறைந்துள்ளது.

பல்லாயிரக்  கணக்கான  விளையாட்டு வீர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்  போன்றவர்களால்  கொரோனா  தொற்று  அபாயம் இருப்பதாக மருத்துடுவர்கள்  எச்சரித்துள்ளார்கள்.ஜப்பானில் 13.8% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 ..சி தலைவர் தாமஸ் பாக்   ஜப்பானிய அரசாங்கத்தையும், ஒலிம்பிக் அதிகாரிகளையும், பிரதமர் யோஷிஹைட் சுகாவையும்  சந்தித்து  ஒலிம்பிக்  போட்டிகலின்  ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசனை  செய்வார்.

ஒலிம்பிக் ரோச்  ஓட்டம் பொது  வீதிகளை  தவிர்த்து  மூடப்பட்ட சாலையூடாக செல்வதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.மேலும், மரதன் ஓட்டப்  போட்டியின் போது சாலையோர பார்வையாளர்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்க டோக்கியோ 2020 அமைப்பாளர்களிடம்  தீவின் மிகப்பெரிய நகரமான சப்போரோவில்போட்டிகள் நடைபெறும் போது ஓகஸ்ட் 5ஆம் 8 ஆம் திகதிகளில் இருந்து   கடுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு அதிகாரிகளை சுசுகி கேட்டுள்ளார் என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இரவு  9 மணிக்குப்  பின்னர் போட்டிகளைப்  பார்வையிட‌  ரசிகர்கள்  அனுமதிக்கப்பட  மாட்டார்கள் எனத்தெரிய  வருகிறது.

No comments: