ரஷ்ய விளையாட்டு
வீரர்கள் ஊக்கமருந்து பாவித்தமை உறுதி
செய்யப்பட்டதால் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யாவுக்கு
தடை விதிக்கப்பட்டது.
ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பாவித்தமைக்கான சான்றுகள் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பின்னர், 2019 டிசம்பரில் ரஷ்யாவுக்கு சர்வதேச விளையாட்டிலிருந்து நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த தடை பின்னர் பாதியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து 2018 ஒலிம்பிக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டதைப் போலவே, டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட ஊக்கமருந்து பின்னணி இல்லாத சில ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் முறையாக தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள். 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக், 2018 பியோங்சாங் குளிர்கால விளையாட்டுக்களுக்கு குறைக்கப்பட்ட வீரர்களை அனுப்பியது. 330 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை ரஷ்யா டோக்கியோவுக்கு அனுப்புகிறது, ரோயிங் அணியைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையால் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 1991 இல் சோவியத் யூனியன் பிரிந்ததிலிருந்து இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். 16 வயதான ஜிம்னாஸ்ட் விக்டோரியா லிஸ்டுனோவாவும், 56 வயதான டிரஸ்ஸேஜ் ரைடர் இன்னெஸா மெர்குலோவாவும் இடம் பெற்றுள்ளனர்.
பதக்க
எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வழக்கமான வலுவான விளையாட்டுகளான ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல்,
மல்யுத்தம், ஃபென்சிங் , ஜூடோ போன்றவற்றில் தங்கப்
பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில வீரர்களின் சான்றிதழ்கள் இன்னமும்
கிடைக்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை தடகள சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே டோக்கியோவுக்கு
அனுப்பப்பட்டுள்ளனர்.
ரஷ்ய தேசியக்கொடியில் உள்ள நிறங்களுடனான சீருடைகளை ரஷ்ய வீரர்கள்
அணிவார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மேடையில் நிற்கும்போது அவர்களின் நாட்டு கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்படும்போது நெஞ்சை நிமிர்த்தி மரியாதை செய்யப்படுவது வழமையானது. அப்படியான சந்தர்ப்பத்தை இம்முறை ரஷ்ய அணி தவறவிடுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் போது ரஷ்ய தேசியகீதத்துக்குப் பதிலாக நாட்டின் ரஷ்ய இசையமைப்பாளர் சாய்கோவ்ஸ்கி இசை ஒலிக்கப்படும்.
ரஷ்ய விளையாட்டு
வீரர்கள் ஊக்கமருந்து பாவித்தமை உறுதி
செய்யப்பட்டதால் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யாவுக்கு
தடை விதிக்கப்பட்டது.
ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து
பாவித்தமைக்கான சான்றுகள்
2014 ஆம் ஆண்டு வெளிவந்த
பின்னர், 2019 டிசம்பரில் ரஷ்யாவுக்கு சர்வதேச விளையாட்டிலிருந்து நான்கு
ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும்
அந்த தடை பின்னர் பாதியாக
குறைக்கப்பட்டது. இதையடுத்து 2018 ஒலிம்பிக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டதைப் போலவே,
டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட ஊக்கமருந்து பின்னணி இல்லாத சில
ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால்
அவர்கள் முறையாக தங்கள் நாட்டை
பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள். 2016 ரியோ
டி ஜெனிரோ ஒலிம்பிக், 2018 பியோங்சாங்
குளிர்கால விளையாட்டுக்களுக்கு குறைக்கப்பட்ட வீரர்களை அனுப்பியது. 330 க்கும் மேற்பட்ட விளையாட்டு
வீரர்களை ரஷ்யா டோக்கியோவுக்கு அனுப்புகிறது,
ரோயிங் அணியைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற
தன்மையால் சரியான எண்ணிக்கை இன்னும்
தெளிவாகத் தெரியவில்லை. 1991 இல்
சோவியத் யூனியன் பிரிந்ததிலிருந்து இரண்டாவது
மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
16 வயதான ஜிம்னாஸ்ட் விக்டோரியா லிஸ்டுனோவாவும், 56 வயதான டிரஸ்ஸேஜ் ரைடர்
இன்னெஸா மெர்குலோவாவும் இடம் பெற்றுள்ளனர்.
பதக்க
எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வழக்கமான வலுவான விளையாட்டுகளான ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல்,
மல்யுத்தம், ஃபென்சிங் , ஜூடோ போன்றவற்றில் தங்கப்
பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில வீரர்களின் சான்றிதழ்கள் இன்னமும்
கிடைக்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை தடகள சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே டோக்கியோவுக்கு
அனுப்பப்பட்டுள்ளனர்.
ரஷ்ய தேசியக்கொடியில் உள்ள நிறங்களுடனான சீருடைகளை ரஷ்ய வீரர்கள்
அணிவார்கள்.
No comments:
Post a Comment