ஆண்களுக்கான
200 மீ நீச்சல்
போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற
பிரிட்டன் வீரரான டாம் டீன்,
நான்கு மாதங்களில்
இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்.
கொரோனாவால்
நுரையீரலும், இதயமும் பாதிக்கப்பட்ட எனது கழுத்தில்
ஒலிம்பிக் தங்கம் இருப்பதை
என்னால் நம்ப முடியவில்லை என
தெரிவித்தார்.
நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜனவரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாம் டீன், நீச்சல் சாத்தியமாகும் என்று உறுதியாக நம்பவில்லை. அவரது இருதய அமைப்பு பாதிக்கப்பட்டது, அவரது நுரையீரல் காயமடைந்தது, இருமலை நிறுத்த முடியவில்லை, அவர் தனது குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். பயிற்சி இல்லாமல் துவண்டு போனார். ஏப்ரலில் கொரோனாவால் பாதிக்கபட்டபோது, "ஒலிம்பிக் தங்கம் ஒரு மில்லியன் மைல் தொலைவில் இருந்தது," என்று அவர் கூறினார்.
1908 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த
ஒலிம்பிக்கின் பின்னர் ஆண்கள் தனி
நபர் நீச்சலில் இங்கிலாந்துக்கு தங்கம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து,
ஒலிம்பிக்20, டோக்கியோ, தமிழன், ஜப்பான்
No comments:
Post a Comment