Saturday, July 3, 2021

ஒலிம்பிக் பதக்கங்களின் கதை

 விளையாட்டு வீரர்களின் கனவுகளில் ஒலிம்பிக் பதக்கமும் ஒன்று. போட்டியில்  வெற்றி  பெற்றதும் நாட்டின்  தேசியகீதம் இசைக்க  தேசியக்கொடி உயரே பறக்க கழுத்திலே  அணியப்படும் வெற்றிப்  பதக்கத்தை முத்தமிடும் போது ஏற்படும் மகிழ்ச்சியும்  பெருமையும் காலத்தால் அழியாதது. அந்தப் பதக்கத்தைப்  பற்றிய  சில  சுவாரஸ்யத்த தகவல்கள்.

  கிரேக்கர்களின் வெற்றிக் கடவுளாக பார்க்கப்படும் நைக் என்ற பெண் கடவுளின் உருவம்,    ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பெயர் (XXXII Olympaid Tokyo 2020) ,   ஒலிம்பிக்கின் சின்னமான 5 வளையங்கள் ஆகியனஒலிம்பிக் பதக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.


பதக்கத்தின் விட்டம் 85 மி.மீ அளவில் இருக்கும். தடிமன்  குறைந்த பட்சம் 7.7மி.மீ ஆகவும், அதிகபட்சம் 12.1மி.மீ ஆகவும் இருக்கும். தங்கப்பதக்கம் 556 கிராம், வெள்ளி 550 கிராம், வெண்கலம் 450 கிராம் என்ற நிறையில் இருக்கும். தங்கப்பதக்கத்தில் 6 கிராம் அளவிற்கு தங்கமும், சுத்தமான வெள்ளியும் கொண்டு தயார் செய்யப்படுகிறது. வெள்ளிப்பதக்கத்தில் முற்றிலுமாக வெள்ளியை கொண்டே தயார் செய்யப்படுகிறது. வெண்கல பதக்கம் 95% காப்பர் மற்றும் 5 % சிங் என்ற இரசாயனக்கூறுகளால் உருவாக்கப்படுகிறது.

No comments: