உதைபந்தாட்ட உலகின் வல்லரசன் மெஸ்ஸி ஏழாவது பலோன் டி ஒர் விருதை வென்றார்
உதைபந்தாட்டத்துக்கு வருடாந்தம்
வழங்கப்படும் உயரிய விருதான பலோன் டி ஓர் விருதை ஏழாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்
மெஸ்ஸி. ரொனால்டோவுடனான பலோன் டி ஓர் விருது போட்டியில் மெஸ்சி முன்னிலை
பெற்றுள்ளார். 34 வயதான மெஸ்ஸி, தனது நண்பர் லூயிஸ் சுரேஸிடம் இருந்து விருதைப் பெற்றார்.
2009 ஆம் ஆண்டு
முதன் முதலாக லியோனல் மெஸ்ஸி பலோன்
டி ஓர் விருதைப் பெற்றார். சிறந்த வீரருக்கான விருதை 2009, 2010, 2011, 2012,
2015, 2019 ஆம் ஆண்டுகளில் மெஸ்ஸி வென்றார்.
பலோன் டி ஓர் விருது பிரான்ஸ் உதைபந்தாட்ட சங்கத்தால் வருடா வருடம் கொடுக்கப்படும். இடையில் ஒருசில ஆண்டுகள் மட்டும் பீபாவுடன் இணைந்து கொடுக்கப்பட்டது. 'தங்கப்பந்து' என்பதுதான் இதன் அர்த்தம். இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இதிலும் கடும் போட்டி நிலவியது. 2008-ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவருமே ஒவ்வொரு முறையும் விருதை மாறி மாறி வென்றுகொண்டிருந்தனர். 2018-ல் மட்டும் குரேஏசிய வீரர் லூகா மோட்ரிச் இவ்விருதை வென்றிருந்தார். 2019-ல் மெஸ்ஸி மீண்டும் வென்று ரொனால்டோவை முந்தினார்.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான
ஆர்ஜென்ரீனா அணி இந்த ஆண்டு நடைபெற்ற கோபா
அமெரிக்கா போட்டியில் 28 ஆண்டுகளில் முதல்
முறையாக வென்று வரலாறு படைத்தது. வழிநடத்திச் சென்ற மெஸ்ஸி முதல் முறையாக கோப்பையைப்
பெற்றுக்கொடுத்தார். அந்த சீசனில் 613 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்ததையடுத்து,
அவருக்கு விருது வழங்கப்பட்டது.
ஆடவர் பிரிவில் 2-வது இடத்தை
வீரர் ரொபர்ட் லெவான்டோவ்ஸ்கி பெற்றார். 33 வயதான லாவான்டோவ்ஸ்கி ஒரே சீசனில் பண்டெஸ்லிகா
அணிக்காக 41 கோல்கள் அடித்தார். ஜேர்மனி ஜாம்பவான் ஜெர்ட் முல்லரின் சாதனையையும் லாவான்டோவ்ஸ்கி
முறியடித்தார். உதைபந்தாட்டப் போட்டியில் பல விருதுகளையும் சம்பியன் கிண்னங்களையும்
பெற்ற லெவான்டோவ்ஸ்கிக்கு பலோன் டி ஓர் விருது எட்டாகனியாக உள்ளது. படந்த ஆண்டு பலோன்
டி ஓர் விருதை லெவான்டோவ்ஸ்கி பெறுவார் என எதிர்பார்க்கப்படது கொரோனா காரணமாக விருது இரத்துச் செய்யப்பட்டது.
செல்ஸி அணியின் மத்தியகள் வீரர் ஜோர்ஹின்ஹோ 460 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். சம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் லண்டன் கிளப் அணியான செல்ஸி வெல்வதற்கு ஜோர்ஹின்ஹோ முக்கியக் காரணமாக அமைந்தார்.
பெண்களுக்கான பலோன் டி ஓர்
விருதை பார்சிலோனாவின் அலெக்சியா புதேயாஸ் வென்றார். கடந்த ஆண்டு பெண்களுக்கான லா லிகா,
சாம்பியன்ஸ் லீக் என இரு பெரும் கோப்பைகளையும் வென்று அசத்தியது பார்சிலோனா. அந்த அணியின்
சூப்பர் ஸ்டாரான புதேயாஸ் பெரிய போட்டி இல்லாமல் இவ்விருதை வென்றார்.
இளம் வீரர்களுக்கு வழங்கப்படும்
கோபா டிராபியை பார்சிலோனாவின் பெட்ரி வாங்கினார். பார்சிலோனா, ஸ்பெய்ன் (யூரோ), ஸ்பெய்ன் (ஒலிம்பிக்ஸ்) என 3 அணிகளுக்காக விளையாடினார்.
சிறந்த கோல்கீப்பருக்கான யாஷின் டிராபியை இத்தாலியின் கியான்லூயி டொன்னரும்மா பெற்றார்.
இந்த ஆண்டு புதிதாக இரண்டு விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறந்த ஸ்டிரைக்கருக்கான விருதை ராபர்ட் லெவண்டோஸ்கியும், சிறந்த கிளப்புக்கான விருதை ஐரோப்பிய சாம்பியன் செல்சீயும் வென்றன.
பலோன் டி'ஓர் - லியோனல் மெஸ்ஸி,
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், அர்ஜென்டினா
பெண்களுக்கான பலோன் டி'ஓர்
- அலெக்ஸியா புட்டெல்லாஸ், பார்சிலோனா, ஸ்பெயின்
இந்த ஆண்டின் சிறந்த ஸ்ட்ரைக்கர்
- ராபர் லெவன்டோவ்ஸ்கி, பேயர்ன் முனிச்சென், போலந்து
கோபா டிராபி - பெட்ரி (பெட்ரோ
கோன்சலஸ் லோபஸ்), பார்சிலோனா, ஸ்பெயின்
யாசின் டிராபி - ஜியான்லூகி
டோனாரும்மா, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், இத்தாலி
No comments:
Post a Comment