Thursday, December 23, 2021

நான் பந்துவீச கஷ்டப்பட்ட இரண்டு வீரர்கள் – ஷதாப் கான்

 பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். தான் அறிமுகமான சமயத்திலிருந்தே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த ரி20 உலகக் கிண்ணத்  தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பாகிஸ்தான் அணியின் முதன்மை லெக் ஸ்பின்னரான இவர் துடுப்பாட்டத்திலும் அதிரடி காட்டும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 48 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பாகிஸ்தான் அணியின் துணை க‌ப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஒரு அணிக்கு க‌ப்டனாகவும் தலைமை தாங்கி வருகிறார்.

 சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியில்

 : நீங்கள் பந்துவீசியதிலேயே கடினமான பேஸ்மெண்ட் யார்? என்ற கேள்வியை எழுப்பினார்.

 அதற்கு பதிலளித்த ஷதாப் கான் : சற்றும் யோசிக்காமல் இந்திய அணியைச் சேர்ந்த துவக்க வீரர் ரோகித் சர்மா, அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் ஆகியோரின் பெயரையும் பதிவிட்டுள்ளார்.

 

No comments: