இந்தியா, தென்
ஆப்பிரிக்கா
அணிகளுக்கு
இடையிலான
மூன்று
போட்டிகள்
கொண்ட
டெஸ்ட்
தொடரின்
முதலாவது
போட்டி
தற்போது
செஞ்சூரியன்
மைதானத்தில்
நடைபெற்று
வருகிறது.
இந்த
போட்டியில்
நாணயச்சுழற்சியில்
வென்ற
இந்திய
அணி
முதலில்
துடுப்பெடுத்தாடுகிறது.
முதல் விக்கெட்டுக்கு
ராகுல்,
அகர்வால் ஜோடி 117 ஓட்டங்கள்
குவித்து
சிறப்பான
அடித்தளம்
அமைக்க
அடுத்து
வந்த
புஜாரா
சிறப்பாக
விளையாடுவார்
என்று
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்
மாயங்க்
அகர்வால்
ஆட்டமிழந்து
வெளியேறிய
அடுத்த
பந்திலேயே
புஜாரா
லுங்கி
நெகிடியின்
பந்துவீச்சில்
கோல்டன்
டக்
அவுட்டாகி
வெளியேறினார்.
இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இரண்டு முறை மட்டுமே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதாவது தான் சந்தித்த முதல் பந்திலேயே இருமுறை மட்டுமே அவர் ஆட்டம் இழந்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இந்த இருமுறையும் அவரை ஆட்டமிழக்க வைத்தது லுங்கி நெகிடி தான். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது லுங்கி நெகிடியால் ரன் அவுட் செய்யப்பட்டு புஜாரா முதன்முறை கோல்டன் டக் அவுட் ஆனார்.
No comments:
Post a Comment