Monday, December 20, 2021

யாழ்ப்பாணத்தில் கால் பதிக்க விரும்புகிறது சீனா

  இலங்கைக்கான  சீனத் தூதுவர் கீ செஜ் கொங்  யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட  சூறாவளிச் சுற்றுப் பயணம் சில சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இலங்கையின் தெற்கிலும், மேற்கிலும் ஆழமாகக் கால் பதித்த சீனா வடக்கை தெற்கிலும் கைநீட்டியுள்ளது. யாழ்ப்பாணத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு விரும்புகிறோம் என த்கூதுவர் கீ சென் கொங் தெரிவித்திருப்பதில் உள் நோக்கம் இருக்கக்கூடும்.

இந்திய சீன  பனிப்போரை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திய இலங்கையால்  சீனாவைத் தவிர்க்க முடியாத  நிலை உள்ளது இலங்கையின் அபிவிருத்திக்கும், உள்நாட்டு யுத்தத்துக்கும் அளவுகணக்கின்றி அள்ளிக் கொடுத்தது சீனா. சீனா எனும் துருப்புச் சீட்டைக் காட்டிக்காட்டி இந்தியாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றது  இலங்கை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு போட்டிபோட்டு உதவிய இந்தியாவும் சீனாவும் அபிவிருத்திக்கும் முட்டி மோதி உதவின. நாட்டுப் பிரச்சினை தீர்ந்து விட்டது. அபிவிருத்தியில் நாட்டை முன்னேற்றமுயற்சிகள் மேற்கொள்லப்பட்டபோது கடன் சுமை கழுத்தை இறுக்கியது.

தெற்கில் சீனாவும் வடக்கில் இந்தியாவும்  பங்கு போட்டு உதவி செய்யத் தொடங்கின. சீனாவின் உதவித்திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. எதிர்க் கட்சியாக இருக்கும் போது எதிர்த்த திட்டங்களுக்கு ஆளும் கட்சியான  பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.

வடமாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செ ஹொங்  தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீ,, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர்  மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது. வவுனுயவில் இருந்து யாழ்ப்பாண, மன்னார்  செல்லும் வரை பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.இந்த விஜயத்தில் சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

யாழ்ப்பாணத்கைக் குறிவைத்து இந்தியா உதவிகளை வழங்குகிறது. வடக்கில் கால் பதிக்க சீனா செய்த முயற்சிகள் அனைத்தும் திரை மறைவில் தடுக்கப்பட்டன.

வடமாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செ ஹொங்  தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாண, மன்னார்  செல்லும் வரை பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.இந்த விஜயத்தில் சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். ஒல்லாந்தர் கால கோட்டை, நூல் நிலையம், இலங்கை சீன கூட்டு முயற்சியான குயிலான் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணை, பருத்தித்த்றை துறமுகம்  ஆகிய இடங்களைப் பார்வையுட்டன் சீன தூதுக்குழு நல்லூர்  ஆலயத்தில் சிறபு வழிபாடு செய்தது.

யாழ்ப்பாண நூலகத்துக்கு நுல்கள் அன்பளிபுச் செய்த சீனத் தூதுவர், மடிக்கணனிகளையும் கொதுத்துதவினார். வட பகுதி மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் சீனத்தூதுவரால் வழங்கப்பட்டது. இலங்கைக் கடலில் மின் பிடிக்கு இந்திய  மினவர்களால் இலங்கை மீனவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதூ. அதற்கான சையான தீர்வு இன்னமும் காணபப்டவில்லை..இந்த நிலையில் சீனா மூக்கை  நுழைத்து வட பகுதி மீனவர்கலுக்கு உதவி செய்வதன் நோக்கம் என்ன வென்பதை நோக்க வேண்டி உள்ளது. வடக்கு மீன் பிடித்துறையை உகுவிக்க வேண்டும் என சீனத்தூதுவர் தெரிவித்துள்லார்.

பருத்தித்துறையில் இருந்து இந்தியா எவளவு தூரம் என்ற கீ செ கொங்கின் கேள்வியும் அங்கு நவீன ட்ரோன் கமரா மூலம் காணொலிகளை பதிவு செய்ததும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றது. வடபகுதித் தீவுகளில் மின்காற்றாலை ஆரம்பிப்பதற்கு சீனா முயற்சி செய்ததாக செய்தி வந்தது. சில அரசியல்காய் நகர்த்தல்களின் காரணமாக அத் திட்டம் கைவிடப்பட்டு மலெஷியாவுக்கு மாற்றப்பட்டது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இலங்கை இல்லை என்றால் தமக்கு இன்னொடு நாடு இருப்பதை  சினா அடையாளப்படுத்தியுள்ளது.

இலங்கையைத் தனது பிடியில்  வைத்திருக்க இந்தியா விரும்புகிறதுஅதற்கு பிடிகொடுக்காமல் இலங்கை சதுரங்கம்  ஆடுகிறது. பலாலி விமானநிலையத்தை இந்தியா புனரமைத்துநூல்நியத்துக்கு அருகில் கலாசாரநிலையம் ஒன்றை இந்திய நிர்மாணிக்கிறது. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நூல்நிலையம், நல்லூர்,கோட்டை ர்ன்பனவற்றைப் போன்று கலாசாரநிலையமும் அமையும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு.

மயிலிட்டியில் ஆழ்கடல்துறமுகம் அமைக்க வேண்டும் என்பது இலங்கையின் விருப்பம் இந்தியா அதற்கு உதவி செய்யலாம் எனும் நிலை உள்ளது. பருத்தித்துறையை  அபிவிருத்திசெய்ய  சீனா விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 ஏதோ ஒரு திட்டத்தை மையப்படுத்தி மன்னார்,யாழ்ப்பாணம்,முல்லைத்திவு,திருகோணமலை ஆகிய கடற்கரைகளில் சீன கால்பதிக்க விரும்புகிறது. இந்திய , சீன அரசியல் பனிப்போரில் இலங்கை ஏற்கெனவே சிக்கி உள்ளது. இந்தியவுக்குப்ன்போட்டியாக  சீனாவும் களம் இறாங்கினால் இலங்கைக்கு மேலும் நெருக்கடி ஏற்படலாம்

No comments: