Tuesday, December 28, 2021

அரசியலால் அல்லல்படும் பாதீடு

 பாதீடு வெற்றி, பாதீடு தோல்வி என்ற செய்தி ஊடகங்களில் அடிக்கடி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. பாதீடு வெற்றி பெற்றால் நன்மையடைவது யார்? பாதீடு தோல்வியடைந்தால் யாருக்கு பாதிப்பு? பாதீடு வெற்றி பெற்றால் நன்மையடைவது மக்கள். தோல்வியடைந்தா அதனால் பாதிக்கபடுவதும் மக்கள்தான். பாதீடின் வேற்ரியும் தோல்வியும் தவிசாளரை, மேயரை பாதிக்கும்  என்பதைக் கருத்தில் கொண்டே வெற்ரி , தோல்வி நிர்ணயிக்கப்படுகின்றன.

தனது க்ட்சியைச் சேர்ந்தவரின் தவிசாளர் பதவியைப் பறிப்பதற்கு பாதீடு தொற்கடிக்கப்படுகிறது. பாதீடு இரண்டு முறை தோல்வியடைந்தால் தவிசாளர் அல்லது மேயர் பதவி இழப்பர்

பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை ஆகியவற்றின் வருமானத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவளிப்பதே பாதிடு.

மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரி, சசபையின் எல்லைக்குட்பட்ட சந்தகள், கடைகள் போன்ற நானாவித வருமானம்,நீதிமன்றத்தால் விதிக்கப்படும் தண்டப்பணத்தின் ஒரு பகுதி என்பனவற்றின் வருமானம் கோடிகளைத் தொட்டுவிடும். கொரோனா காலத்திலேயே  சுமாரான  பிரதேசசபையின் வருமானம் சுமார் 20 கோடியாக  இருக்கும். அதுவே சகல வளங்களும் உள்ள்ள மாநகரசபையானால் இன்னமும் அதிக  வருமானம் கிடைக்கும்.

தேர்தல் காலத்தில் பல கட்சிகளும் சியேட்சைக் குழுக்களும் பல வாக்குறுதிகளுடன் போட்டியிட்டன. கோட்டை எனக் கருதப்பட்ட சில சபைகள் கைவிட்டுப் போயின. ஆட்சியப் பிடிப்பதற்கான குதிரை பேரம் நடந்தது. தமிழ்க் கட்சிகள் திசைக்கொரு பக்கம் நின்றதால்  சில சபைகள் கைவிட்டுப்பொயின.  அரசியல் தலைவர்களின் சதிராட்டத்தில் சில உறுப்பினர்கள் சிக்குவதால் ஆட்சிமாற்றம் பெறுகிறது.

சபைகளுக்குக் கிடைக்கும் வருமானம் மூலம் எல்லைக்குட்பட்ட மக்களின் அடிப்படைத் தெவைகள் நிறை வேற்றப் படுகின்றன. குடிநீர் விநியோகம், விதியெங்கும் மின் விளக்கு பொருத்துதல். வீதி அபிவிருத்தி, குப்பை அகற்றல் போன்ற வேலைத்  திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணம்  செலவிடப்படுகிறது.

இது மக்களின் பணம் மக்களுக்கான சேவை என்ற மனநிலையில் இருந்து சிலர் விலகுவதால் பாதீடு  தோற்கடிக்கப்படுகிறது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் அங்கத்தவர்களைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் சில கட்சிகள்  உள்ளன.

உறுப்பினர்களின்    வேண்டுகோளின் பிரகாரம் அபிவிருத்திகள்  முன்னெடுக்கபப்டும்.  தான் சார்ந்த பகுதிக்கு அதிக தொகைஅயில் வேலைத்திட்டம்  சமர்ப்பித்து முடிப்பதிலேதான் அனைவரும் குறியாக உள்ளனர். இது அடுத்த தேர்தலில் வெற்ரி பெறுவதற்குடிய முன்னேற்படாகும். இதனால் சில முக்கையமான  வேலைத்திட்டங்கள் முடிக்கப்படுவதென்னவோ உணமைதான்.ஒரே கசியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமகுள்  குடுமிச்சண்டை  பிடிப்பதும் உண்டு. இவர்களின் அடுத்த குறி மாகாண சபைத் தேர்தல். அங்கும் வெற்றி பெற்றால் பாராளுமன்ற கதிரைக்கு ஆசைப்படுவார்கள்.

வல்வெட்டித்துறை நகரசபைத்   தலைவர் மரணமானதல்புதிய தலைவர் மரணமானதால் புதிய தலைவரைத் தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சமர்ப்பித்த பாதீடு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதால் பதவி இழந்தார்.  இரண்டாஅவ்து முறையகவும் அவரே  தலைவரனார். கடந்த மாதம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டவர் இம்மாதம் வெற்றி பெற்றர். மக்களுன் ந்லனுக்காக அவர் தேர்ந்தெடுக்கபப்ட்டதாக அறிக்கை சொல்கிறது. ஆனால், கனவான் ஒப்பந்தம் பற்றி மக்களுக்கு விளங்கபப்டுத்தபடவில்லை.

கூட்டமைப்பின் வசம்  இருந்த  யழ்ப்பாண மேயர் பதவி மணிவண்ணனின் கைக்குச் சென்றுள்ளது. கூட்டமைப்புக்கு மாற்றீடு எனச் சொல்லிக்கொண்டு களம் இறங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற 13 பேரில் மணிவண்ணனும் ஒருவர். அவர்களில் மணிவணன் உட்பட 10  பேரை கட்சி வெளியேற்றி  விட்டது. மூவர் மாத்திரம் தான் கட்சியின் பெயரில் இருக்கிரார்கள். யாழ்ப்பாண மேயரான மணி வண்ணனின் செயர்பாடு ஓரளவு திருப்தியாக இருக்கிறது.

மக்களிடம் இருந்து அறவிடபப்டும் பணம் மக்களுக்குப்ப் போய்ச்சேர வேண்டும். கல்வி,தர்மான போக்குவரத்து, வசதி, அச்சமின்றிய நடமாட்டம்,, சுகாதர மேம்பாடு,  வசதியான பொதுச் சந்தை, தரமான வாசிகசாலைகள் போன்ரவற்றை மக்களுக்கு வழங்க வேண்டிய கடப்பாடு ட்சையவர்கள் பதவிக்காக முட்டி மோதுவது மக்களுக்காக அல்ல என்பது வெளிப்படை.

 தூரநோக்குடன் மக்களுக்கான சேவைகளச் செய்பவர்களே மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்கள்.

No comments: