Wednesday, December 15, 2021

யுவராஜ் சிங்கின் அதிர்ஷ்ட இலக்கம்


  இந்திய அணிக்காக யுவராஜ் சிங் விளையாடியபோது அவர் அணிந்திருந்த சீருடைஅவர் பிறந்த தினம் 12, மாதமும் 12. அதாவது டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அவருடைய பிறந்தநாள். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், யுவராஜ் சிங் பிறந்த நேரமும் பிற்பகல் 12. அவர் பிறந்த மருத்துவமனை அமைந்திருந்த இடமும் சண்டிகரில 12வது வீதியில் இருந்துள்ளது. 

கிரிக்கெட் வீரராக உருவெடுப்பதற்கு முன் பள்ளியில் ஸ்கேட்டிங் வீர ராக இருந்துள்ளார் யுவராஜ் சிங். 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்ப்யன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். அவருடைய அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப கிரிக்கெட் விளையாடிய அவர், அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தேர்வானார். யுவராஜ் சிங்கிற்கு பிடித்த மற்றொரு விளையாட்டு டென்னிஸ்.

யுவராஜ் சிங்கின் அப்பா யோகராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், புகழ்பெற்ற பஞ்சாபி நடிகர். இதனால், யுவராஜ் சிங் குழந்தையாக இருந்தபோது ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற கவுன்டி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான யாக்ஷைர் அணிக்காக, இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர். ஒருவர் சச்சின், மற்றொருவர் யுவராஜ் சிங். விளையாட்டு பொழுபோக்குகளை கடந்து சமூக அக்கறை கொண்ட யுவராஜ் சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர். அதன்பிறகு " "YOU WE CAN'  என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அவரைப்போல் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

No comments: