இந்தியாவில் எதிர்வரும்
ஏப்ரல்
மாதம்
துவங்கவுள்ள
15-வது
ஐபிஎல்
தொடருக்கு
முன்னர்
வீரர்களின்
மெகா
ஏலம்
நடைபெற
வேண்டியுள்ளது.
ஏற்கனவே
அறிவிக்கப்பட்டபடி
எட்டு
அணிகளும்
தங்கள்
அணியில்
தக்க
வைக்கப்பட்ட
வீரர்களின்
பட்டியலை
அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டுள்ள
வேளையில்
புதிதாக
இணைந்திருக்கும்
லக்னோ,
அகமதாபாத்
அணிகளும்
கிட்டத்தட்ட
தங்களது
அணிகளில்
மெகா
ஏலத்திற்கு
முன்பாக
வாங்கப்போகும்
மூன்று
வீரர்கள்
குறித்த
இறுதியான
முடிவை
எடுத்து
விட்டதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த
தொடருக்கான
மெகா
ஏலம்
நடைபெற்றால்
மட்டுமே
அனைத்து
அணிகளும்
தங்கள்
அணிகளில்
சேர்க்க
வேண்டிய
வீரர்களை
தேர்வு
செய்து
எதிர்வரும்
ஐபிஎல்
தொடருக்காக
ஆயுத்தமாக
முடியும்.
இப்படி
ஒரு
சூழலில்
இதுவரை
அடுத்த
சீசனுக்கான
ஐ.பி.எல்
தொடரின்
மெகா
ஏலம்
நடைபெறவில்லை.
ஏற்கனவே
வெளியான
ஒரு
தகவலின்
படி
ஜனவரி
மாதம்
மெகா
ஏலம்
நடைபெறும்
என்று
கூறப்பட்டிருந்தது.
ஆனால்
தற்போது
அதிலும்
ஒரு
சிறிய
மாற்றம்
நடைபெற்றுள்ளதாக
உறுதியான
தகவல்
வெளியாகியுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனுக்கான
மெகா
ஏலம்
ஜனவரி
மாதம்
நடைபெறாது
என்று
கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மெகா ஏலம் நடைபெறும் என்று உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களை வைத்தே அனைத்து அணிகளும் தங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது
No comments:
Post a Comment