இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இது வரை காலமும் இரத்தம் சிந்தி விளையாடிய பல வீரர்கள் கைவிடப்பட்டுள்ளனர். கைவிடப்பட்ட வீரர்களை பெரிய தொகைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல்,ரஷீட்கான் ஆகிய இருவரும் தம்மை தக்கவைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பவார்ககள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லக்னோ, அஹமதாபாத் அணிகள் மெகா
ஏலத்திற்கு முன்பாகவே இரண்டு இந்திய வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் நேரடியாக
தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டுக்கான 15-வது
ஐபிஎல் ரி20 சீசனுக்கு 8 அணிகளும் சேர்ந்து 27 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. இதற்காக
ரூ.269 கோடி செலவிட்டுள்ளன. நட்சத்திர வீரர்கள் பலரை அணிகள் கழற்றிவிட்டு ஏலத்தில்
எடுக்க உள்ளன.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள்
பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.
புதிதாக வரும் அகமதாபாத்,
லக்னோ அணிகள் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு உள்நாட்டு வீரருக்கு அதிகமாக தக்கவைக்க முடியாது.
இந்த இரு அணிகளும் இந்த மாதம் 30ம் திகதிக்குள் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம்
வழங்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் கழற்றிவிட்ட வீரர்களைக்கூட தேர்வு செய்து
தக்கவைக்க முடியும்.
ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும்
அதிகபட்சமாக 3 உள்நாட்டு வீரர்கள், அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம்
4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இந்த 4 வீரர்களுக்காக ரூ.42 கோடி செலவிடலாம்.
முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3-வது வீரருக்கு
ரூ.8 கோடி, 4-வது வீரருக்கு ரூ.6 கோடி என ரூ.42 கோடி செலவிடலாம். 4 வீரர்களுக்கு குறைவாகவும்
தக்கவைக்கலாம்.
சென்னை அணியின் கப்டன் டோனி , தன்னை முதல் வீரராகதக்க வைக்க வேண்டாம். எனக்கு
அவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க வேண்டாம் என்று நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தார்.
அதன்படி தற்போது சிஎஸ்கே அணியின் அடுத்த கப்டனாக பார்க்கப்படும் ஜடேஜாவை முதல் வீரராக
சென்னை அணி தக்க வைத்தது. அவரைத் தொடர்ந்து டோனி இரண்டாவது வீரராக தக்க வைக்கப்பட்டார்.
கொல்கத்தா அணி தங்களது அணியில்
தக்க வைக்கும் 4 வீரர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கடந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா
அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை 10 ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்த 10 போட்டிகளிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை துடுப்பாட்டம்,பந்துவீச்சு என இரண்டிலும்
வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும்
கிடைத்தது. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ரி20 தொடரில்
இடம் பெற்றிருந்த அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு
இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்து உள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக
விளையாடாமல் இருக்கும் ஒரு வீரரை அணியில் தக்கவைக்கும் போது அவருக்கு அதிகபட்சம் 4
கோடி வரை மட்டுமே கிடைத்திருக்கும்.
ஆனால், அவர் அண்மையில் இந்திய
அணிக்காக அறிமுகமாகி இருந்ததால் அவர் தற்போது 8 கோடிக்கு கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வருண் சக்கரவர்த்தி , வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தக்கவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில்
யார் யார் தக்கவைக்கப்பட்டனர் என்ற பட்டியல்
வெளியானது . அதில் மூன்று வீரர்கள் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டனர் .
ஜடேஜா (சென்னை) , ரோகித் சர்மா (மும்பை) , ரிஷாப் பண்ட் (டெல்லி ) ஆகியோர் அதிகமான
தொகைக்கு (ரூ.16 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா நான்கு வீரர்களைத் தக்கவைத்துள்ளன. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகியன தலா மூன்று வீரர்களைத் தக்கவைத்துள்ளன.பஞ்சாப் கிங்ஸ் இரண்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
4 வீரர்களைத் தக்கவைக்க ரூ.42 கோடி செலவிட்டுள்ளது. அந்த அணியிடம் மீதம் ரூ.48 கோடி
கையிருப்பு இருக்கிறது. டூப்பிளசி்ஸ், துணைக் கப்டன் சுரேஷ் ரெய்னா, தீபக் சஹர் , பிராவோ கழற்றிவிடப்பட்டனர்
சென்னை அணியின் முன்னணி வீரரான
சுரேஷ் ரெய்னா அணியில் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி
உள்ளது. ஏனெனில் தல டோனிக்கு அடுத்து சின்ன தல ரெய்னா என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும்
ரெய்னா கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக முக்கிய நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி
வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட
தகராறு காரணமாக விளையாடாமல் இருந்த ரெய்னா கடந்த ஆண்டு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி
12 போட்டிகளில் விளையாடி 160 ஓட்டங்கள் மட்டுமே குவித்தார். இதன் காரணமாக அவர் ப்ளே
ஆப் சுற்றுக்கு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் அவரை சென்னை அணி
அணியிலிருந்தே நீக்கியுள்ளது ரசிகர்களிடையே
பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணி அவரை ஏலத்தில்
எடுக்கவும் விருப்பம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக லக்னோ
அணி அவரை அணியில் எடுத்து கப்டனாகவும் செயல்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
டெல்லி கப்பிட்டல்ஸ்
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி
4 வீரர்களைத் தக்கவைத்துள்ளது, இவர்களுக்காக ரூ.39 கோடி செலவிட்டுள்ளது, மீதம் ரூ.47.50
கோடி கையிருப்பு இருக்கிறது. அதேசமயம் ஸ்ரேயாஸ்
அய்யர், ரவிச்சந்திர அஸ்வின், ரபாடா, ஆவேஷ் கான், ஸ்டாய்னிஷ், ஸ்மித் , ஷிகர் தவண்
போன்ற வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். டெல்லி அணியின் பயிற்சியாளர் இளம் வீரர்களுக்கு
அதிகமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் மூத்த வீரர்களை வெளியேற்றி உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 உள்நாட்டு, 2 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்துள்ளது, இதற்காக ரூ.42 கோடி செலவிட்டுள்ளது, கையிருப்பாக ரூ.48 கோடி இருக்கிறது. ஆனால், ஷுப்மான் கில், கம்மின்ஸ், மோர்கன், தினேஷ் கார்த்திக்,லாக்கி பெர்குஷன் போன்ற பெரிய வீரர்களை கழற்றிவிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் ஒரு வெளிநாட்டு
வீரர், 3 உள்நாட்டு வீரர்களைத் தக்கவைத்துள்ளது. இதற்காக ரூ.42 கோடி செலவிட்டுள்ளது,கையிருப்பாக
ரூ.48 கோடி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, இஷான் கிஷன்,டிரன்ட் போல்ட்,
ராகுல் சஹர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
ஹர்திக் பாண்டியாவை நேரடியாக ஏலத்திற்கு முன்பே அணியில் எடுக்க அகமதாபாத் அணி ஆர்வம் காட்டுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிதாக வரவிருக்கும் அகமதாபாத் அணியை வலுப்படுத்த ஹார்டிக் பாண்டியா பெரிய தொகைக்கு அவர்கள் அணிக்கு விளையாட பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாண்டியா 12 கோடி முதல் 16 கோடி ரூபாய் வரை அகமதாபாத் அணிக்கு வருவார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி 2 உள்நாட்டு
வீர்ரகளை மட்டுமே தக்கவைத்துள்ளது. இதற்காக ரூ.16 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது கையிருப்பாக
அதிகபட்சமாக ரூ.72 கோடி வைத்துள்ளது. ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுக்கவும், அணியை
வலுவாகத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. கேஎல் ராகுல், ரவி பிஸ்னோய், நிகோலஸ் பூரன்
ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
பஞ்சாப் அணியின் கப்டனாக
இருந்த லோகேஷ் ராகுலை புதிய அணியான லக்னோ வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க அந்த அணி முயன்று வருகிறது.2018 ஐ.பி.எல். ஏலத்தில்
ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த 4 சீசனில் முறையே அவர்
659, 593, 670, 626 ஓட்ங்கள் எடுத்துள்ளார் என்பது
ராஜஸ்தான் ரோயல்ஸ்
ராஜஸ்தான் ரோயல்ஸ்ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. ரூ.28 கோடி செலவிட்டுள்ளது, கையிருப்பாக ரூ.62 கோடி வைத்துள்ளது.
கடந்தமுறை ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர். இளம் வீரர்கள் ரியான் பராக், திவேட்டியா ஆகியோரும் கழற்றிவிடப்பட்டனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. ரூ.22 கோடி செலவிட்டுள்ளது.கையிருப்பாக ரூ.68 கோடி
உள்ளது.
நட்சத்திர வீர்கள் டேவிட்
வார்னர், புவனேஷ்வர்குமார், ஜானி பேர்ஸ்டோ, ரிஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான்
ஆகியோர் நீக்கப்பட்டனர்.
ஆர்சிபி அணி
ஆர்சிபி அணி 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது இவர்களுக்காக ரூ.33 கோடி செலவிட்டுள்ளது. அந்த அணியின் கையிருப்பாக ரூ.57 கோடி இருக்கிறது. தேவ்தத் படிக்கல், யஜுவேந்திர சஹல், ஹர்சல் படேல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
No comments:
Post a Comment