அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் ஏடிபி கிண்ண செர்பிய அணியில் ஜொபொகோவிச் இடம்பிடித்துள்ளார், ஒரு வாரத்திற்குப் பிறகு நடைபெறும் அவுஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் விளையாடலாம் என்பதற்கான அறிகுறியாகும்.கொரோனா தடுப்பு ஊசி ஏற்றாதவர்கள் அவுஸ்திரேலியா விசா கொடுக்காது என்பதால் ஜோகோவிச்சின் அவுஸ்திரேலிய பயணம் சந்தேகமாக இருந்தது.
ஏடிபிகிண்ண
போட்டிக்கு
ஒரே
மாதிரியான
நுழைவு
அளவுகோல்
இல்லை
என்றாலும்,
ஏடிபி
அணியில் அவர் இருப்பதால் இப்போது மெல்போர்ன்
பூங்காவில்
10வது
பட்டத்தையும்,
21வது
கிராண்ட்ஸ்லாம்
ஒற்றையர்
பட்டத்தையும் நோக்கி விளையாடுவார்.
சிட்னியில் தடுப்பூசி
போடாமல்
விளையாட,
நியூ
சவுத்
வேல்ஸ்
மாநில
அரசாங்கம்
ஜோகோவிச்சிற்கு
விலக்கு
அளிக்க
விண்ணப்பிக்க
வேண்டும்,
மேலும்
34 வயதான
அவர்
வந்தவுடன்
14 நாட்கள்
தனிமைப்படுத்தப்பட
வேண்டும்.
நடப்பு சாம்பியனான
ரஷ்யா,
இத்தாலி,
ஆஸ்திரியாவின்
வலுவான
அணிகளுடன்
அவுஸ்திரேலியா
B குழுவில்
சேர்க்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய
அணிக்கு
அலெக்ஸ்
டி
மினார்
தலைமை
தாங்குகிறார்.
கடந்த வாரம்
டேவிஸ்
கோப்பையை
வென்ற
ரஷ்ய
அணிக்கு
உலகின்
2-ம்
நிலை
வீரரான
டேனியல்
மெட்வடேவ்
மற்றும்
ஆண்ட்ரே
ரூப்லெவ்,
அஸ்லான்
கரட்சேவ்,
ரோமன்
சஃபியுலின்,
எவ்ஜெனி
டான்ஸ்காய்
ஆகியோர்
முன்னிலை
வகிக்கின்றனர்.
நார்வே, சிலி, ஸ்பெயின்
இடம்பெறும்
குரூப்
ஏ
பிரிவில்
செர்பியா
உள்ளது
உலகின்
6ம்
நிலை
வீரரான
நடால்
ஸ்பெயின்
அணியில்
இடம்
பெறவில்லை.
ஜேர்மனி, கனடா,
பிரிட்டன்,
அமெரிக்கா
ஆகிய
அணிகள்
‘சி’
பிரிவில்
இடம்பெற்றுள்ளன.
கிரீஸ், போலந்து
ஆர்ஜென்ரீனா,
ஜார்ஜியா
ஆகிய
அணிகள்
‘டி’
பிரிவிலுள்ளன.
ஏடிபி கோப்பை
சிட்னியில்
கென்
ரோஸ்வால்
அரங்கிலும்,
சிட்னி
ஒலிம்பிக்
பூங்காவில்
உள்ள
டென்னிஸ்
மைதானத்திலும்
நடைபெறும்.
அவுஸ்திரேலிய ஓபன் ஜனவரி 17ஆம் திகதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment