அப்பாவிப் பொது
மக்களின்
வயிற்றில்
அடித்துள்ளது. என்ன தான் தலை போற பிரச்சினையாக இருந்தாலும் சாப்பாடு
முக்கியம்.
முன்னொரு
காலத்திலே வரவு செலவுத் திட்டம்
சமர்ப்பிக்கப்படும்போதுதான்
பொருட்கலின்
விலை
அதிகரிக்கும். இன்று என்ன பொருளின்
விலை
எப்போது
அதிகரிகும்
எனச்
சொல
முடியாத
நிலை
உள்ளது.
இதுவரைகாலமும்
இரண்டொரு
பொருட்களின்
விலைதான்
உயர்ந்தது.
இப்போது
அனைத்துப்
பொருட்களின்
விலையும்
தறிகெட்டு
உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயுப்
பிரச்சினை
மேல்தட்டு
மக்களையும்
அடித்தட்டு
மக்களையும் ஒரு சேரப் பாதித்துள்ளது.
தட்டுப்பாடு
என்றால்
நிலமை
சீரானதும்
கிடைக்கும்.
சமையல்
எரிவாயுவை
வாங்குவதர்கு
மக்கள்
அச்சப்படுகிறர்கள்.
பெரு
நகரங்களில்
மாற்று
வழி
இல்லை.
புதிதாக
மண்ணெண்ணெய்
அடுப்பு
வாங்க
வேண்டிய
நிலைக்கு
மக்கள்
தள்ளப்பட்டுள்ளார்கள்.
கிராமத்து
மக்கள்
விறகு
அடுப்பை
நாடத்தொடங்கி
விட்டார்கள்.
விறகுச்
சமையலும்,
மண்சட்டி
சாப்பாடும்
சுவையும்
ஆரோக்கியமானதும்
என புகழ்கிறார்கள்.
எரிவாயுத் தட்டுப்பாடு,
பொருட்களின்
விலை
உயர்வு
காரணமாக சுமார் 3,500 பேகரிகளும்,
12 ஆயிரம்
கோட்டல்களும்
மூடப்பட்டதாக
செய்தி
வெளியாகி
உள்ளது.
கோட்டல்களும்
பேக்கரிகளும் மூடப்பட்டால் நகரத்தில்
தங்கி
வேலை
செய்பவர்கள்
சாப்பட்டுக்கு
என்ன்ன
செய்வார்கள்?
குடும்பம் இன்றி தனி ஆளாக
கடைச்
சாப்பாட்டை
நம்பி
இருப்பவர்களின்
நிலை
மோசமாக
உள்ளது. கொரோனா மூர்க்கமாக இருந்த
காலத்திலும்
நகரங்களில்
வேலை
செய்தவர்கள்
சாப்பாடு
கிடைக்காமையால் தமது ஊருகுச் சென்றனர்.
பெற்றோல்,டீசல்
விலையர்வு,
பேக்கரிப்
பொருட்களின்
விலை
உயர்வு,
முட்டை,கோழி
விலை
உயர்வு,
மீன்
விலை
உயர்வு,
மரக்கரிவகைகள்
விலை
உயர்வு
என
காலையில்
வெளியாகும்
செய்திகளில்
விலை
உயர்வே
முதலிடம்
பிடிக்கிறது.
பாண்,
பணிஸ்
போன்றவையே
அன்றாடம்
அதிகமாக
விற்பனையாகும்
உணவுப்
பண்டங்களாகும்.
அவறின்
விலையும்
சடுதியாக
அதிகரித்துள்ளது.வருமானம்
குறைந்த
மக்கள்
வாங்கும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தமையால் அரசின்
மீது
எதிர்ப்பலை
ஆரம்பித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களால்
அதிகம்
பேசப்படுகிறது. உலகமே ப்ருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அற்கு இலங்கை விதிவிலக்கல்ல உலகச் சந்தையில் டொலரின்
பெறுமதி
அதிகரித்தமை,
ரூபாயின்
பெறுமதி
வீழ்ச்சியடைந்தமை,
ஏற்றுமதி,
இறக்குமதி
வரையறுக்கப்பட்டமை,
கொரோனா
தொற்றினால்
நாட்டின்
பொருளாதாரத்தில்
ஏற்பட்ட
வீழ்ச்சி
போன்றவையே
அத்தியாவசியப்
பொருட்களின்
விலை
ஏற்றத்துக்குக்
காரணம்
என்று
அரசாங்கம்
என்பது
அரசாங்கத்தின்
வாதம்
மக்களின் அன்றாடத்தேவையான பால்மா,சீனி,எரிவாயு,மண்ணெண்ணெய் பொன்ற அத்தியாவசியப் பொருட்களின்
விலை
உயர்வை
சமாளிக்க
முடியாதுள்ளது.
மருந்துகள்,
கட்டட
நிர்மானப்
பொருட்கள் என்பனவற்றின் விலை அதிகரித்துள்ளது. மருந்துகளின்
விலையும்
அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை
ஏற்றத்தால்
பாடசாலை
சேவை
வாகனங்களின்
கட்டணம்
உயரப்
போகிறது.
அத்தியாவசியப் பொருட்களுடன்
சுமார்
ஆயிரம்
கொள்கலன்கள் கொழும்பு துறமுகத்தி
தேங்கியுள்ளதாக
இறக்குமதியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.டொலர்
பற்றாக்குறையால்
கொள்கலன்களை
துறைமுகத்துகு
வெளியே
கொண்டு
வர
முடியாத
நிலை
உள்ளது.கொள்கலன்களுக்கு
செலுத்த
வேன்டிய
டொலரைப்
பெறுவதற்காக
உயர்
மட்ட
குழுவுடன்
நடத்திய
பேச்சு
வார்த்தை
யில்
முன்னேற்றம்
ஏற்படவில்லை.
இந்த
நிலை
நீடிக்குமானால்
ஜ்னவரியில்
அத்தியாவசியப்
பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்.
இலங்கையின் பொருளாதாரத்தில்
சுற்றுலா
மிக
முக்கிய
பங்கு
வகிக்கிறது.
தற்போது
கொரோனா
காலகட்டம்
என்பதால், சுற்றூலாத்துறையின் வருமான
வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் ரூபாய்
மதிப்பும்
தொடர்ந்து
குறைந்துகொண்டே
வருகிறது.
தொடர்ந்து
இலங்கையின்
அந்நிய
செலவாணியும்
கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக
உணவு
உள்ளிட்ட
அத்தியாவசியப்
பொருட்களை
இறக்குமதி
செய்வதில்
கடும்
சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
உணவுப்
பொருட்கள்
இறக்குமதி
குறைந்ததன்
காரணமாக
இலங்கையில்
உணவுப்
பொருட்களின்
விலை
கிடுகிடுவென
அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய
வங்கிகளின்
தரவுகளின்
படி
2019-ம்
ஆண்டு
இலங்கையின்
அன்னிய
செலவாணி
கையிருப்பு
7.5 பில்லியன்
டொலராக
இருந்தது.
கடந்த
ஜூலை
மாத
நிலையில்
இந்த
கையிருப்பு
வெறும்
2.8 பில்லியன்
டொலர்
என்ற
அளவுக்குக்
குறைந்துள்ளது.
இந்த
ஆண்டில்
மட்டும்
அமெரிக்க
டொலருக்கு
நிகரான
இலங்கை
ரூபாயின்
மதிப்பு
7.5 சதவிகிதம்
என்ற
அளவுக்கு
குறைந்துள்ளது.
குறைந்து
வரும்
இலங்கை
ரூபாயின்
மதிப்பை
அதிகரிக்க,
இலங்கை
மத்திய
வங்கி
வட்டி
விகிதத்தை
உயர்த்தியதுடன்,
வராக்கடனை
வசூல்
செய்வதில்
தீவிரம்
காட்டிவருகிறது.
இந்த
ஆண்டு
தொடக்கத்திலேயே
குறைந்து
வரும்
அந்நிய
செலவாணி
கையிருப்பைச்
சேமிக்க,
பல்வேறு
பொருட்களை
இறக்குமதி
செய்யத்
தடை
விதித்திருந்தது.
இருந்தபோதிலும் நிலைமை சீராகவில்லை.
பாஸ்போட் பெறுபவர்களின்
தொகை
சடுதியாக
அதிகரித்துள்ளது.
வெளிநட்டில்
வேலை
பெறுவதற்காகவும்,
வெளிநாட்டில்
குடியேறுவதற்காகவும் பாஸ் போட் பெறுபவர்களின்
தொகை அதிகரித்துள்ளது.
பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்கவும், பொருட்களின் விலையை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment