இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் 2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு
ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது.
இந்த நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் மெர்போர்னில்
தொடங்கியது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நான்கு
மாற்றங்களுடன் இங்கிலாந்து களம் இறங்கியது. என்றாலும் பலன் அளிக்கவில்லை.
தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹசீப் ஹமீத் டக்அவுட் ஆனது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 50-வது டக்அவுட் இதுவாகும்.
No comments:
Post a Comment