Wednesday, December 1, 2021

டோனியை விட ஜடேஜாவுக்கு அதிக விலை கொடுத்த சிஎஸ்கே


 

ஐபிஎல் போட்டியில்  ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. அதன்படி சிஎஸ்கே தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

15வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில்,அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புது அணிகள் இடம்பெறவுள்ளது. எனவே, வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது.  அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் ஆட்சி மன்ற குழு அனுமதி வழங்கியது. 

இந்த 4 வீரர்களில் அதிகபட்சம் 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம்.  வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 2-ஐ தாண்டக்கூடாது.  வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வீதம் என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும் அணி நிர்வாகம் ஒதுக்க வேண்டும் .தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

தக்கவைக்கப்படும் வீரர்களின் விபரம்

ரவீந்திர ஜடேஜா - ரூ. 16 கோடி

எம்எஸ் டோனி - ரூ. 12 கோடி

மொயீன் அலி - ரூ. 8 கோடி

ருதுராஜ் கெய்க்வாட் - ரூ. 6 கோடி

                               மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா - ரூ. 16 கோடி

ஜாஸ்பிரீத் பும்ரா -  ரூ. 12 கோடி

சூர்யகுமார் யாதவ் - ரூ. 8 கோடி

கைரன் பொலார்ட் - ரூ. 6 கோடி

                    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி - ரூ. 15 கோடி

கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 11 கோடி

முகமது சிராஜ் - ரூ. 7 கோடி

                             டெல்லி கேபிடல்ஸ்:

ரிஷப் பந்த் - ரூ. 16 கோடி

அக்சர் படேல் - ரூ. 9 கோடி

பிரித்வி ஷா - ரூ. 7.50 கோடி

அன்ரிச் நோர்க்கியா - ரூ. 6.50 கோடி

                       கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் - ரூ. 12 கோடி

வருண் சக்ரவர்த்தி - ரூ. 8 கோடி

வெங்கடேஷ் ஐயர் - ரூ. 8 கோடி

சுனில் நரைன் - ரூ. 6 கோடி

                                  பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் - ரூ. 12 கோடி

அர்ஷ்தீப் சிங் - ரூ. 4 கோடி


                      சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் - ரூ. 14 கோடி

அப்துல் சமத் - ரூ. 4 கோடி

உம்ரான் மாலிக் - ரூ. 4 கோடி


                        ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் - ரூ. 14 கோடி

ஜாஸ் பட்லர் - ரூ. 10 கோடி

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ. 4 கோடி

No comments: