Wednesday, December 29, 2021

கோவாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை


கோவா தலைநகர் பனாஜியில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிறிக்கெற்றுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.  அதேவேளை உதைபந்தாட்டத்தி விரும்பும் ரசிகர்களும் வ் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளனர். பிறேஸில்,ஆட்ஜென்ரீனா,ஜேர்மனி,இத்தாலி ஆகிய நாடுகளையும்,, பீலே, மரடோனா, மெஸ்ஸி,ரொனால்டோ,நெய்மர்  போன்ற வீரர்களையும்  நேசிக்கும் ரசிகர்களும்  இந்தியாவில் உள்ளனர். உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி  ஆரம்பமாகையில் தமக்கு விருப்பமான நாட்டுக்கொடியை வீட்டு வாசலில் ஏற்றி வைபார்கள்.

உதை பந்தாட்ட உலகின் உட்சப்பட்ச வீரனான கிறிஸ்ரியானோ ரொனல்டோவுக்கு கோவாவில் சிலை  ஒன்று நிறுவபட்டுளது.

இது குறித்து கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை அமைச்சர்  மைக்கேல் லோபோ கூறுகையில்,

இளைஞர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்திலும் நாட்டிலும் உதைபந்தாட்டத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

எங்கள் குழந்தைகள் இந்த புகழ்பெற்ற   வீரரை போல் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அவர் கால்பந்து விளையாட்டில் ஒரு  உலக ஜாம்பவான்என அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக்   தொடரில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அவர் யூ எப் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 140 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 முறைபேலண்-டி-ஓர் விருதைவென்றுள்ளார். இந்த விருதை அதிக முறை பெற்றுள்ள ஐரோப்பாவை சேர்ந்த கால்பந்து வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

 சர்வதேச கால்பந்து போட்டிகளில் 115 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் 36 வயதான ரொனால்டோ, சிலை வைக்கும் அளவுக்கு முற்றிலும் தகுதியான நபர் ஆவார்.

No comments: