Monday, May 23, 2022

நீலத்துக்கு மாறிய பெங்களூர்


 ஐபிஎல் 2022 தொடரில் ஒரு அணிக்கு எதிரணியை சேர்ந்த வீரர்களும் ரசிகர்களும் நிர்வாகமும் முழு ஆதரவை கொடுக்கும் என்று யாருமே ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-ஆவது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும் அந்த அணி வென்றால் மட்டுமே தாங்கள் நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சேர்ந்த அத்தனை பேரும் மும்பை வெற்றி பெற வேண்டும் என்று வெளிப்படையாக ஆதரவு கொடுத்தனர்.

ந்த அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் நட்சத்திரம் விராட் கோலி போன்ற வீரர்கள் வெளிப்படையாக மும்பைக்கு ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்த நிலையில் ஒருபடி மேலே சென்று அந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தின் புகைப்படத்தை வழக்கமான சிவப்பு நிறத்திற்கு பதில் நீல நிறமாக மாற்றியது.

ரசிகர்களும் மும்பையை தங்களது அணியைப் போல தலையில் வைத்து சமூக வலைதளங்களில் கொண்டாடி நிலையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே டெல்லியை தோற்கடித்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் ஆகிய பெங்களூர் நட்சத்திரங்கள் மும்பை அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவு தருகிறோம் எப்படியாவது வெற்றி பெற்று விடுங்கள் என்று தமக்கு மெசேஜ் செய்ததாக இப்போட்டியில் 34 ரன்கள் விளாசி வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்ட டேவிட் போட்டி முடிந்த பின் தெரிவித்தார்.

இதுபற்றி கலகலப்புடன் அவர் பேசியது பின்வருமாறு. “இன்று காலை டு பிளேஸிஸிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதில் டுப்லஸ்ஸிஸ் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் மும்பை ஜெர்சியை அணிந்திருந்தனர், அதை பின்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர் செய்வேன்என்று கூறினார்.

அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் அசத்திய இவரை கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூர் அணி நிர்வாகம் முதல் போட்டியில் வாய்ப்பளித்து  ஒரு ஓட்டத்துட பென்சில் அமர வைத்து பின்னர் கழற்றிவிட்டது.

  விராட் கோலி போன்ற வீரர்களுடன் நண்பர்களாக தொடர்பில் இருக்கும் தம்மிடம் அவர்கள் மும்பை ஜெர்சி அணிந்து கேட்டுக் கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்கு பங்காற்றியதாக டிம் டேவிட் தெரிவித்தார். மேலும் அவரை பாராட்டி பெங்களூர் அணி நிர்வாகமும் டிம் டேவிட் பெங்களூரு சீருடை அணிந்த புகைப்படத்தை பதிவேற்றி நன்றி தெரிவித்தது.

No comments: