Tuesday, May 3, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 16

 மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தனக்காக பாலுவைப் பின்னணிப்பாடகராக தேர்ந்தெடுத்ததே தனிக்கதை. ஒருமுறை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் பிரேக்கில்காற்றுவாங்க மரத்தடியில் உட்கார்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர். பக்கத்திலிருந்த ரெக்கார்டிங்ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர் படமொன்றின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாராம்எஸ்.பி.பி. அந்த வித்தியாசமான குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர் தன் உதவியாளரை அழைத்து, ''பையன்யார்னு விசாரிங்க!'' என்று சொல்லியிருக்கிறார்.

 பாலுவின் வீட்டுக்கு கார் அனுப்பி ராமாபுரம்தோட்டத்துக்கே வரவழைத்து, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் அறிமுகப்படுத்தி  வீட்டிலேயே கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்குபி.சுசீலாவோடு  பாடவைத்தார். எல்லாமே கனவுபோல்  இருந்தது."அடுத்தவாரம் ஜெய்ப்பூர் ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டை ரெண்டுநாள்ல முடிச்சிடு... நல்லாபாடு சரியா?" என எம்.ஜி.ஆர் சொன்னதும் தலையாட்டிவிட்டு உற்சாகமாக வீட்டுக்குப்போனார்  பாலு. ஆனால், மறுநாள் பாலுவுக்கு டைஃபாய்டுகாய்ச்சல் வந்து சேர்ந்தது. ஒருவாரம் கழித்து, சரியானவர் அவசர அவசரமாக கே.வி.மகாதேவனைப்போய் பார்க்க, '' 'ஆயிரம் நிலவே வா' பாட்டுதானே... மெதுவா பாடிக்கலாம். சின்னவரே சொல்லிட்டாரு''என்று எம்.ஜி.ஆர் காத்திருந்ததைச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் படத்தில்பாடப்போகிறேன் என  எலோருக்கும் சொல்லியிருப்பாய்  அந்தஆசை தடைப்படக்கூடாது என சின்னவர் விரும்புகிறார்.என விளக்கமளித்தார். பாலுவுக்கு நிம்மதி பிறந்தது. தமிழில் அவர் பாடிய முதல் பாடல் 'சாந்தி நிலையம்' படத்துக்காக 'இயற்கை எனும் இளையக்கன்னி' என்ற பாடல்தான். ஆனால், 1969-ல் ரிலீஸில் வெளியானஅடிமைப்பெண்  முந்திக்கொண்டது.முந்திக்கொண்டது   'ஆயிரம்நிலவே வா!' எனும் அப்பாடல் இன்றைக்கு கெட்டாலும்  புதியதுபோல்இருக்கிறது.

எஸ்.பி.பியின் பாடல்களைக்கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பார்களா என்று தெரியாது. புதிதாய் அரும்பிய காதலுக்கு, 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...', காதலை ஏற்பாளா என்ற தவிப்புக்கு, 'சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்?' என்றும், பிரிவில் வாடும்போது, 'காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே' என்றும்எல்லா எக்ஸ்ட்ரீம்களிலும் வெரைட்டியாக ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஆயிரம் பாடல்களாவது பாடியிருப்பார். அந்த வகையில் எஸ்.பி.பி மென்உணர்ச்சிகளுக்கான ஓர் ஆவணம்!ஆனால்,இது பற்றியெல்லாம் எந்தவொரு கர்வத்தையும் அவர் தன் தலைக்குள் ஏற்றிக் கொண்டதே இல்லை. "எல்லாமே இறைவன் கொடுத்தது. நான் அப்படி என்ன சாதிச்சிட்டேன்!" என உளப்பூர்வமாகப் பேசுவார். 

 1981-ல்  பாலிவுட்டில்அவர் அறிமுகமானார்.   கே.பாலசந்தரின் 'ஏக் துஜே கேலியே'யில் கமல்ஹாசனுக்கு பின்னணி பாடினார். அங்கும் அவருக்கு  அதிர்ச்சிகாத்திருந்தது.  அப்படத்தின்இரட்டை இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் ஜோடி, 'மதராஸி குரல் பாலிவுட்டுக்கு செட்டாகாது!' என்று பாலுவை கடுமையாக நிராகரித்திருக்கிறார்கள்.''படத்தில் இந்தி அதிகம் தெரியாத கேரக்டரில் கமல் நடித்திருப்பதால் எஸ்.பி.பி பாடினால்நன்றாக இருக்கும்!'' என பிடிவாதமாகக் கேட்டுப்பாட வைத்தது கே.பாலசந்தர்தான். அப்படத்தில்லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி பாடிய'தேரே மேரே பீச் மெய்ன்' பாடல் அகில இந்திய அளவில் ஹிட்டாக, பாலிவுட்டிலும் அவருக்கு தனி  அடையாளத்தைஉருவாக்கியது.

அதேபோலஉழைப்பில் பெரிதென்ன சிறிதென்ன? துளி ஈகோ பார்க்காமல் ஓடி ஓடி வேலை செய்வார் பாலு. கமலின் படங்கள் தெலுங்கில் டப்பிங் வாய்ஸ் எப்போதுமே எஸ்.பி.பி தான்.ஆனால், தமிழில் 'இந்தியன்' படம் கமல் டப்பிங் பேசி முடித்தபிறகு ஓரிடத்தில் சின்னதாய் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது. கவுண்டமணியை மனீஷா கொய்ராலாவின் ஒட்டகம் கடித்தபிறகு கமல் பேசும் சின்ன டயலாக் அது. கமலை அந்த ஒரு வரிக்காக அழைக்க முடியவில்லை. வெளியிட்டுக்கு திகதியும் குறித்ததால் எஸ்.பி.பியை கடைசிநேரத்தில் அவசரமாக அழைக்க   "அதுக்கிட்டஏன்டா ஸ்டொமக்கைக் காட்டுனே?" என்ற அந்த 4 வார்த்தைகளைப் பேசிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

எந்தஎல்லைகளுக்குள்ளும் சிக்காத வித்தியாசமான குரல்வளமே எம்.ஜி.ஆர், சிவாஜி,என்.டி.ஆர், நாகேஸ்வரராவ்என இளம்வயதிலேயே எல்லைகள் தாண்டிப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்புக் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆரே ''எனக்குஇந்தப் பையன்தான் பாடணும்!'' எனக் காத்திருந்து 'அடிமைப் பெண்'ணில் பாட வைத்திருக்கிறார்.  அடுத்ததலை முறை நடிகர்களுக்கும் பலுவின் குரல் கனகச்சிதமாகப் பொருந்தியது.சுமதிஎன் சுந்தரியில் சிவாஜிக்காகப் பாடுவதற்கு தயங்கினாராம்,. சிவாஜி பயபடாம பாடு என உற்சாகப்படுத்தி சிவாஜியின் மனதிலும்இடம் பிடித்தார்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என எல்லா உணர்வுகளையும்உணர்ந்தார்கள். அது எஸ்.பி.பி  எனும் மூன்று எழுத்துமந்திரம்  .

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆருக்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல் பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கியது. ஆந்திராவில்பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேகமொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ளஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழிதிறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின்அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் வசப்படுத்தியவர். 

டிஎம்சௌந்தர்ராஜன் குரலை ஈடுசெய்ய இனி ஒரு பாடகர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது என்று பேசப்பட்ட காலகட்டத்தில் டிஎம்எஸ் பாடல்களைப் பாடி வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோ படிகளில் ஏறி இறங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம், ஆரம்ப கட்டத்தில்புறக்கணிக்கப்பட்டது அவருடைய மோசமான தமிழ் உச்சரிப்புக்காகத்தான். எம்எஸ் விஸ்வநாதனின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்ற எஸ்பிபி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.ஸ்பி பாலசுப்ரமணியம், பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ்சினிமாவின் வலுவாக பதித்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்துநடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமேதனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.   எம்எஸ்விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ் பி பாலசுப்ரமணியம் இளையராஜாஇசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர் ரஹ்மான்தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரைகடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசீகர்களை வசீகரித்தார். பாடகராகதமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய எஸ் பி பாலசுப்ரமணியம் தொலைக்காட்சித்தொடர்கள் தமிழகத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த தொடர்களின் தொடக்கப் பாடலை பாடி இல்லங்கள்தோறும் தனது குரல் தினமும் ஒலிப்பதை உறுதி செய்தார்.

No comments: