Sunday, May 29, 2022

சம்பியனானது குஜராத்

   .பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத் சம்பியனானதுமுதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது.11 பந்துகள்  மீதமிருக்கையில் 3 விக்கெட்களை இழந்த குஜராத 133 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற  ராஜஸ்தான் ப்டன் சஞ்சு சாம்சன்   பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர். 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வழக்கமாக அதிரடியாக ஆடும் பட்லர்  தடுமாறினார். ஜெய்ஸ்வாலைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 2இரண்டுகளில் ஆட்டமிழந்தார்.   ஜாஸ் பட்லரும் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 12 ஓவரில் 79 ஓட்டங்களுக்கு ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதனையடுத்து, ஆட்டம் மொத்தமாக குஜராத் அணியின் கட்டுக்குள் சென்றது. குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 130 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

131 ஓட்ட வெற்றி இலக்குடன்  களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமிறங்கினர். சஹா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 8 ஓடங்களில் ஆட்டமிழந்தார். 23 ஓட்டங்களுக்கு குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.


 ஷப்மன் கில், ஹர்திக் பாண்டியா இணை நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தது. பாண்டியா 34 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர், ஷப்மன் கில் இணை நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

 அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற பெருமையை குஜராத் அணி பெற்றுள்ளது.

 

No comments: