Tuesday, May 10, 2022

அவமானப்படுத்திய ஐபிஎல் அணி -கெய்ல்ஸ்

ஐபிஎல் 2022 தொடர் கடந்த மார்ச் 26-ஆம் திகதியன்று கோலாகலமாக துவங்கி கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் ரன் மழை பொழிந்து தங்களது அபார ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்த வருகின்றனர்ஏபி டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா போன்ற காலம் காலமாக கொண்டாடப்பட்ட ஒருசில முக்கிய நட்சத்திரங்கள் இந்த வருடம் பல்வேறு காரணங்களுக்காக பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.   நட்சத்திர அதிரடி சரவெடி வீரர் கிறிஸ் கெயில் இந்த வருட ஏலத்தில் கூட பங்கேற்காதது ரசிகர்களுக்கு வியப்பைக் கொடுத்தது.

  2008 முதல் கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் போன்ற அணிகளுக்காக விளையாடி வந்த அவர் தனது சூறாவளியாக ஆட்டத்தால் சிக்ஸர் மழை பொழிந்து காலம் காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

 6 சதங்கள், மறக்கமுடியாத 175* ரன்கள் என ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், அதிக சிக்சர்கள் உட்பட ஏராளமான சாதனைகளை அசால்டாக படைத்த அவர் வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். ஆனாலும் தற்போது 42 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் ஓய்வு பெறும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக அனைவரும் கருதினார்கள். கடைசியாக கடந்த 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவர் 10 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற நிலையில் பாதியிலேயே வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தன்னை தரக்குறைவாக மரியாதையின்றி நடத்தியதாலேயே பாதியில் வெளியேறியதாக கிறிஸ் கெயில் முதல் முறையாக தற்போது மனம் திறந்துள்ளார்.

 இது பற்றி இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாளிதழில் அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு,

 “கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் என்னை மரியாதையாக நடத்தப்படவில்லை என்று உணர்ந்தேன். ஐபிஎல் மற்றும் விளையாட்டில் நான் அத்தனை பங்காற்றிய பின்பும் கூட எனக்கு மரியாதை கிடைக்காதது ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் சரி பரவாயில்லை என்று போனேன். அதன் காரணமாகவே பரவாயில்லை ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுத்தேன். கிரிக்கெட்டையும் தாண்டி வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. எனவே அதற்கேற்றார் போல் என்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன்

கடந்த 2008 முதல் கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகளில் விளையாடிய கிறிஸ் கெய்ல் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணிகளை பிரித்து மேய்ந்து சக்கை போடு போட்டு சிக்சர் மழை பொழிந்தார்.

 கிறிஸ் கெயில் என்றால் ஒரு மிகச்சிறந்த தொடக்க வீரர் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் 2018இல் பெங்களூர் அணியில் இருந்த அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கி வாய்ப்பளித்தது. ஆனால் காலம் காலமாக தொடக்க வீரராக களமிறங்கி வந்த அவரை அந்த அணி நிர்வாகம் குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு பின்பு சிறப்பாக விளையாட தவறினார் என்பதற்காக 3-வது இடத்தில் களமிறக்கியது.

 2020, 2021 போன்ற சீசன்களில் ப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் கெயிலுக்கு ஆதரவு கொடுக்காமல் 3-வது இடத்திற்கு புறந்தள்ளிவிட்டு அவரின் இடத்தில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார். மேலும் அந்த சமயத்தில் 40 வயதை தொட்ட அவர்  பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்காததால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்காமல் ஒருசில போட்டிகள் பெஞ்சிலும் அமர வைக்கப்பட்டார்.

 2020 தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே அவருக்கு பஞ்சாப் வாய்ப்பு கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் அணிக்குள் அவருக்கு ஒரு லெஜன்ட் என்ற மரியாதை கொடுக்கலாம் அந்த அணி நிர்வாகம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. அதன் காரணமாகவே மரியாதை கொடுக்காத இடத்தில் இருக்கக் கூடாது என பாதியிலேயே வெளியேறியதாக கெயில் தெரிவித்துள்ளார்.   

 2023 சீசனில் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருவேன் என்றும் கெயில் மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை கொல்கத்தா, பெங்களூர் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளேன். அதில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்றில் விளையாடி கோப்பையை வெல்ல விரும்புகிறேன். குறிப்பாக பெங்களூரு அணியில் எனது ஐபிஎல் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. பஞ்சாப் அணியும் நன்றாகவே இருந்தது. எனவே சவால்களை மீண்டும் எதிர் கொள்ள விரும்புகிறேன். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்என்று கூறினார்.

No comments: