Monday, May 9, 2022

99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வீரர்கள்

ஐபிஎல் போட்டியில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்ட  வீரர்கள் வரிசையில் ருதுராஜ்  கெய்க்வாட்  இணைந்துள்ளார்.

  90 ஓட்டங்களை கூட அவர்கள் எளிதாக அடித்து விடுவார்கள். ஆனால் 90 என்ற இலக்கைத்  தொட்டதும் அடுத்த 10 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் இயற்கையாகவே தோன்றும் பதற்றத்தால் கைகால் நடுங்குவதை போன்றதொரு உணர்வை பெற்று தடுமாறுவார்கள். –

99 ஓட்டங்களை தொட்டு விட்டால் சச்சின் போன்ற எந்த ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தாலும் ஒரு நிமிடம் பதற்றம் அடையாமல் இருக்க முடியாது. அந்த பதற்றத்தை தாண்டி விட்டால் அது சாதனையாகும். ஆனால் அந்த சமயத்தில் அதிர்ஷ்டமும் சற்று கைகொடுக்க தவறினால் அதுவே வேதனையாக மாறிவிடும்.  ஐபிஎல் வரலாற்றில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியல்,

                                                        1. விராட் கோலி:

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலி கடந்த 2013இல் பெங்களூருவின் ப்டனாக பதவியேற்ற போது டெல்லிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  தனது அணிக்கு அற்புதமாக விளையாடிய அவர் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் சதத்தை நெருங்கி 99 (58) ஓட்டங் கள் எடுத்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 99 ஓட்டங்களில் ரன் அவுட்டான முதல் வீரர் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பரிதாபத்துடன் பெவிலியன் திரும்பினாலும் அவரின் 99 ஓட்டங்களால் பெங்களூரு 183/4 ஓட்டங்கள் சேர்த்து பின்னர் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

                                             2. பிரிதிவி ஷா:

குட்டி சேவாக் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் வீரர் பிரித்வி ஷா கடந்த 2019இல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 186 ஓட்டங்கள் இலக்கை துரத்திய போது தொடக்க வீரராக களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்தார். ஆனால் இளம் வீரரான அவர் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 99 (55) ஓட்டங்கள் எடுத்திருந்த போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துவெளியேறினார். இறுதியில் அந்த பரபரப்பான போட்டி டையில் முடிவடைந்தாலும் சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. ஆனால் அன்றைய நாளில் துரதிஸ்டவசமாக சதத்தை தவறவிட்ட பிரிதிவி ஷா அதன்பின் இதுவரை முதல் சதத்தை பதிவு செய்யவில்லை என்பது அவருக்கு நிச்சயம் இன்றும் உறுத்தலை கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  3. இஷான் கிசான்:

2019 ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 202 ஓட்டங் கள் இலக்கை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கி பட்டாசாக வெடித்து வெறும் 2 பவுண்டரி 9 மெகா சிக்சர் உட்பட 99 (58) எடுத்து சதத்தை எட்ட  முயற்சித்த போது இளம் வீரர் இஷான் கிசான்  ஆட்டமிழந்தார். அந்த போட்டியும் டையில் முடிவடைய பெங்களூரு சூப்பர் ஓவரில் வென்றது. பிரிதிவி ஷா போலவே அன்றைய நாளில் சதத்தை கோட்டைவிட்ட இஷான் கிசான் இன்றுவரை முதல் சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.


                                                      4. கிறிஸ் கெயில்:

 ஐபிஎல் வரலாற்றில் 6 சதங்களை அசால்ட்டாக அடித்து அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த சூறாவளி புயல் கிறிஸ் கெயிலையும் இந்த 99 என்ற பதற்றம் விட்டு வைக்கவில்லை. ஆம் 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்க்கு 3-வது வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் வழக்கம்போல 6 பவுண்டரி 8 சிக்சருடன் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 (63) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி கோபத்துடன் பேட்டை வீசி எறிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதன்காரணமாக இப்பட்டியலில் கிரிஸ் கெயிலும் இடம்பெற நேர்ந்தது.

                                           5. ருதுராஜ் கைக்வாட்:

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த போட்டியில் டேவோன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த இளம் சென்னையின் தொடக்க வீரர் ருதுராஜ் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 99 (57) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பவுண்டரி அடிக்க முயன்று துரதிர்ஷ்டவசமாக தமிழக வீரர் நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து   வெளியேறினார். இருப்பினும் கான்வேயுடன் 182 ஓட்டங்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற வரலாற்றை படைத்து சென்னையின் வெற்றிக்கும் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

No comments: