Saturday, May 28, 2022

என்ன செய்யப்போகிறார் ரணில்


 மே 9 க்குப்பின்னர் இலங்கையில் அரசியல் ஊஞ்சலாடுகிறது. பிர த ரணில்  பிரதமரானதும் வெளிநாட்டு உறவுகளை மீண்டும் நிறுவினார்.  பல நாடுகளிடம் கடன் பெறுவதற்கு முயற்சிக்கிறார்.  சில நாடுகள் சாதக சமிக்ஞை காட்டியுள்ளன.21 வது திருத்த வரைவு மூலம் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

எரிபொருள் விநியோகத்தை பிரதமர் உறுதிப்படுதியபோதும்  எரிபொருள் நிலைய வரிசை நீண்டுகொண்டிருக்கிறது.

தாராளமய பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு ஏறக்குறைய நிபந்தனையற்ற மூலதனத்தின் வழித்தடம் மேற்கு மற்றும் ஜப்பான் ஆகும், இதற்கு இரண்டு நிபந்தனைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும், முதலில், சட்டத்தின் ஆட்சி. இரண்டாவதாக மனித உரிமைகளை மதிக்க வேண்டும்.  மர் மஹிந்த ராஜப்க்ஷ இராஜினாமாச் செய்தபோது  புதிய பிரதமராக வருவதற்கு பலர் ஆசைப்பட்டார்கள். ஆனால்,  எஅவ்ரும் முன்னுக்கு வரவில்லை.  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்தார்.

நாட்டை நிர்வகிப்பதற்கான அமைச்சரவை மெது மெதுவாக பொறுப்பேற்றது. நிதி அமைச்சர் நிரப்பப்படாமல் இருந்தது. அதனையும்  ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார். முன்னொருகாலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யபடும்போதுதான் பொருட்களின் விலை உயரும். அத்தியாவசியப் பொருட்களின் விலை தினமும் உயர்கிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  அத்தியாவசியப் பொருகளின் விலை நியாயமான விலையில் தாராளமாகக் கிடைக்க வேண்டும்.  உற்பத்தித்திறன் அதிகரிக்கபப்ட வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.  ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன் அவரது மாமா ஜே.ஆர்.ஜெயவர்தன இதை வெற்றிகரமாகச் செய்தார். 

தற்போதைய பொருளாதார நெருக்கடி சமீபத்திய தோற்றம் அல்ல, ஆனால் தற்போதைய ஆட்சிதான் அதை மோசமாக்கியது. தற்போதைய குழப்பத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிதி இலாகாவை வகித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு பொறுப்பு கூற வேண்டும். வல்லுனர்களின் அறிவுரைகளுக்கு செவிசாய்க்காமல் செயற்பட்டனர். மத்திய வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் பொருளாதார நெருக்கடி குறித்து முன்கூட்டியே எச்சரித்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்தனர், ஆனால் அரசாங்கம் அவர்களின் எச்சரிக்கையைப் புறக்கணித்தது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

 உலக நாடுகள் பல இலங்கையைப் போன்ற நிலை ஏற்படக்கூடாது என எச்சரிகையாக இருகின்றன. கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை புதிய நிதி அமைச்சர்  ரணில்   தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டொலர் கேள்வி எழுந்துள்ளது. ஏறத்தாழ 7 பில்லியன் டொலர் கடன் தவணையை திருப்பி செலுத்த வேண்டியதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இதன் விபரீதம் இப்போதைக்கு வெளிபட வாய்ப்பில்லை. திரும்பச்ச் எலுத்தும் போது தொகை மேலும் அதிகரிக்கும். 

நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டொலராக  உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர 5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகிறது. இலங்கை போதுமான பெரும்பொருளாதார கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்தாதவரையில், புதிய நிதி உதவியோ, கடன்களோ வழங்க வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கைவிரித்துவிட்டது. இலங்கையில் நிலவுகிற எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு, எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர்  கடன் கோருவது என மந்திரிசபை கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்தியாவிடம் கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினைகளை நிதி மந்திரி பதவியை ஏற்றுள்ள பிரதமர் ரணில்   சமாளிப்பது மிகப்பெரிய சவால்களாக இருக்கும்.

No comments: