Monday, May 16, 2022

முதல் போட்டியிலேயே வித்தியாசமான சாதனை


 ஐபிஎல் 2022 தொடரில் மே 15-ஆம் திகதி 62-வது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை, குஜராத் ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனதால்  ஜெகதீசன், பிரசாந்த் சோலங்கி, மதீஸா பதிரன ஆகிய 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார் சென்னை கப்டன் எம்எஸ் டோனி. 

காயமடைந்த நியூசிலாந்து பந்துவீசாளர் ஆடம் மில்னேவுக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் இலங்கை பந்துவீச்சாளர் பேபி மலிங்க என அழைக்கபடும்  மதீஸா பதிரனா தனது வித்தியாசமான பந்துவீச்சால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

 இலங்கையின் யோர்கர் கிங் , ஜாம்பவான் லசித் மலிங்காவை போலவே சிலிங்கா வகையான பந்துவீச்சு ஆக்சனை பயன்படுத்தி மிரட்டலாக பந்துவீசிய அவர் நேற்றைய அறிமுக போட்டியிலேயே 3.1 ஓவரில் 24 ரன்களை 7.58 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரின் பந்து வீச்சை பார்த்த பல ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு அடுத்த பேபி மலிங்கா கிடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பாராட்டினார்கள்.

முதல் போட்டியின் முதல் பந்திலேயே இந்திய வீரர் சுப்மன் கில்லை 18 (17) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ செய்து மிரட்டினார். ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கிய முதல் அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 9-வது பவுலர் என்ற வித்தியாச சாதனையும் படைத்துள்ளார்.

 1. இஷாந்த் சர்மா – ராகுல் டிராவிட், 2008

2. வில்கின் மோட்டா – சுரேஷ் ரெய்னா, 2008

3. ஷேன் ஹார்வுட் – அசார் பிளாகியா, 2009

4. அமித் சிங் – சன்னி சோஹல், 2009

5. சார்ல் லங்வேள்ட்ட் – ராப் குய்னே, 2009

 6. அலி முர்தசா – நமன் ஓஜா, 2010

 7. டிபி சுதீந்திரா – பப் டு பிளேஸிஸ், 2012

8. அல்சாரி ஜோசப் – டேவிட் வார்னர், 2019

9. மதீஸா பதிரன– சுப்மன் கில், 2022*

No comments: