Tuesday, May 24, 2022

அற்புதம்மாளின் அறவளிப் போராட்டம்


 தனது மகனை மீட்க 1991-ம் ஆண்டு தொடங்கிய அற்புதம்மாளின் போராட்டம்   முடிவுக்கு வந்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மகன் பேரறிவாளனை, தனது 31 ஆண்டுகால நீதிப் போராட்டத்தால் அற்புதம்மாள் மீட்டுள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தன் வாழ்க்கையைசிறைக் கூடமாக்கும் என அறிவு என அறியப்படும் பேரறிவாளன்   நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

பேரறிவாளனின் வீட்டுக்குள்  புகுந்த பொலிஸார் அவரை விசாரித்துவிட்டு     விடுவித்துவிடுவோம்  எனக் கூறி கூட்டிச் சென்றனர்.   19 வயது இளைஞனான பேரறிவாளன் 31 வருடங்கள் சிறையில்  வாடினார். அவருடன் சேர்த்து  ஏழு பேர் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்.  ராஜீவ் காந்தியின் கொலையால்  இந்திய அரசியலில் அதிர்ச்சி ஏற்பட்டது, கொலைகாரர்களைக் கண்டு பிடித்து  நீதிமன்றத்தில் நிறுத்த   வேண்டிய  நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது. இலங்கையில் இந்திய  இரானுவம் செய்த அத்துமீறலுக்காக  விடுதலைப் புலிகள்  ராஜீவை கொன்ற கோணத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடர்ந்தது. அது உண்மையாக  இருக்கும் என  உலகம் நம்பியது.

நேரு குடும்பத்தின் வாரிசு, இந்தியாவின்  அடுத்த தலைவர் போன்ற  புகழுகுரிய ராஜீவின் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால், நேர்மையாக விசாரணை நடைபெறவில்லை என   நடுநிலையாளர்கள் கூறிய எவையும்  கருத்தில் எடுக்கப்படவில்லை துரிதமாக விசாரணை  நடைபெற்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதுடன் பொலிஸாரினதும், குற்றப் புலனாய்வாளர்களினதும் கடமை முடிந்துவிட்டது.

 தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21ம் திகதி நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்; இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்கு, மனிதவெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ் கொண்ட இரண்டு பேபற்றி வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். ‘சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ல் பேரறிவாளனுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந் திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர், முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது

ராஜீவ்வை கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையின் பின்னணியில்  அரசியல் உள்ளது.  அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் , பின்னர் ஆட்சி பீடம் ஏறிய பாரதீய ஜனதாக் கட்சியும் தம்து அதிகாரத்தை தமிழகத்தின் மீது திணித்தன. தமிழக ஆளுநரின் மூலம் ஏழு பேரின் விடுதலைக்கு தடை விதித்தன. தமிழக அரசியல் எதிரிகளான திராவிட முன்னேர்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஏழு பேரின் விடுதலையில் ஒருமித்துக் குரல் கொடுத்தன.

ஆளுநர் என்பவர்  தமிழக அரசின்  தீர்மானங்களில்  தலையிட முடியாது எனப்பதை நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது.

 ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய குண்டுக்கு  பற்றி  வாங்கி கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவனான பேரறிவாளனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தொடங்கியது தான் அற்புதம்மாளின் சட்ட போராட்டம். அப்போது அற்புதம்மாளுக்கு 43 வயது.

பேரறிவாளன் சிறையில் இருக்க கணவர் குயில்தாசன் அன்பு, அருள் என்ற இரு பெண்களுடன் ஜோலாபேட்டையில் வசித்து வந்தார் அற்புதம்மாள். பேரறிவாளன் மரண தண்டனையை எதிர்நோக்கி 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று காத்திருந்து பார்க்க வேண்டும். இதற்காக அவர் நூற்றுக்கணக்கான 200 கிலோ மீட்டர் பயணங்களை மேற்கொண்டுள்ளார். பல நாட்கள் தனது மகனை சந்திக்காமலே திரும்பியிருக்கிறார்.

தனது மகனின் விடுதலைக்காக    தமிழகம் முழுவது அற்புதம்மாள்  அலைந்து திரிந்தார்.  அவர் கலந்துகொண்ட போராட்டங்கள் எண்ணிடங்காதவை. தமிழக முதலமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  களைத்துபோன முகமும்,தோள்பட்டையில் பை, நரைத்த முடி, ரப்பர் செருப்பு என வலம் வந்த அற்புதம்மாளின் விடா முயற்சிக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு பிறந்திருக்கிறது.

  பேரறிவாளன் நிரபராதி, அவருடைய வாக்குமூலத்தை நான் தவறாக பதிவிட்டுவிட்டேன் என 2013 ஆம் ஆண்டு தியாகராஜன் ஐபிஎஸ் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். இதேபோல் விசாரணை செய்த அதிகாரிகள் ஓய்வு  பெற்ற பின்னர்   குழறுபடிகளை வெளிப்படுத்தினர்.

இப்போது பேரறிவளன் விடுதலையாகி விட்டார். அவருடைய இளமையை மீண்டும் கொடுக்க யாராலும் முடியாது.

31 ஆண்டுகளுக்கு பிறகான பேரறிவாளன் விடுதலைக்கும், 161 சட்டப்பிரிவு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கும் முக்கிய காரணகர்த்தா பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என கூறினால் மிகையாகாது.  .

2011- ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறித்ததை தொடர்ந்து, செங்கொடி என்ற 21 வயதான பெண், தீக்குளித்து மாண்டு போனார். மேலும் கலங்கி போனார் அற்புதம்மாள். மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்பு தீவிரமடைந்து சட்டப் போராட்டம் மூலம் அவர்கள் தூக்கில் போடப்படுவது தடுக்கப்பட்டது. அற்புதம்மாளின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்பது முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன் மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரு தவறு தான்.

தியாகராஜனின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இது பேரறிவாளன் வழக்கில் மிகப்பெரிய அணுகுமுறை மாற்றத்தை அளித்தது.

பின்னர் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என அற்புதம்மாள் போகாத இடம் இல்லை. அதிமுகவோ, திமுகவோ மாநிலத்தில் ஆளும் கட்சி எதுவாகினும் பேரறிவாளனின் விடுதலையை நோக்கியே அரசின் சட்ட நகர்வுகள் இருந்தன. இதற்கு முழு காரணம் அற்புதம்மாளின் அணுகுமுறை என கூறலாம். தூக்கு தண்டனை குறைப்பு, 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற ஜாமின், தற்போது விடுதலை என தனது மகனின் ஒவ்வொரு வெற்றிக்கும் பெரும் பின்புலமாக இருந்தது அற்புதம்மாளின் ஓயாத உழைப்பு தான். .

நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 வருடங்களுக்கு முன் என்னிடமிருந்து பறிக்கப்பட்டான். அப்போது அவருக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவர் பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடுகிறேன் என ட்விட்டரில் பயோ வைத்துள்ள அற்புதம்மாள் இனி அதனை மாற்றிக்கொள்வார் என தெரிகிறது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மூவர் தூக்கு தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர் துறந்த னர். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவரது விடுதலைக்காக தனது உயிரையே நீத்த செங்கோடியின் தியாகத்தை பலரும் போற்றி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த செங்கொடி (21) மக்கள் மன்றம் என்ற அமைப்புடன் இணைந்து சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக போராடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என சமூகம் சார்ந்து அவர் இயங்கிவந்தார்.

 , கடந்த 2011ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலால் நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி மூவரையும் தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது.  இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட செங்கொடி அதை தொடர்ந்து, மூவர் விடுதலையை வலியுறுத்தி  ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இது தொடர்பாக செங்கொடி எழுதியிருந்த கடிதத்தில், “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து மூவர்  மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்பு தீவிரமடைந்து சட்டப் போராட்டம் மூலம் அவர்கள் தூக்கில் போடப்படுவது தடுக்கப்பட்டது. செங்கொடியின் மரணத்துக்கு பின்னர் எழுவர் விடுதலை விவகாரம் பலதரப்பு மக்களையும் வேகமாக சென்றடைந்து.

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகியுள்ள பேரறிவாளன்  செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசின் ஆதரவையும் மக்கள் ஆதரவையும் எனக்கு கிடைக்க செய்தது தங்கை செங்கொடியின் தியாகம்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்

பெரறிவாளனின் விடுதலையில் தமிழக அரசியல் கட்சிகல்ளனைத்தும் ஒருமித்துக் குரல் கொடுத்தன. மாநில அரசின் குரலை அடக்குவதர்கு ஆளுநரை மத்திய அரசு  கையாளாக வைத்திருப்பது வழமை. ஆளுநர்  என்பவரிஅன் அதிகாரம் என்ன என்பதை நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. பேரறிவாளனின் விடுதலை ஆனைய ஆறுவரின் விடுதலையின் ஆரம்பப் புள்ளியாக உள்ளது.


  1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது

1998 ஜன.,28: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி

1999 மே 11: மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது. மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

1999 அக்டோபர் 8: தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

1999, அக்டோபர் 17: தமிழக கவர்னருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

2000, ஏப்ரல் 25: பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த கவர்னர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்

2000, ஏப்ரல் 26: ஜனாதிபதிக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

2011, ஆகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2016: கருணை மனுவை ஜனாதிபதி தாமதமாக நிராகரித்ததாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு

2022 மே 18: பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறையிலிருந்தபடி பி.சி.ஏ., எம்.சி.ஏ முடித்த பேரறிவாளன் ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். l டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் எழுதிய, ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலில், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை தர்க்கங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் இளமை முழுவதையும் சிறையில் கழிக்க நேர்ந்த பேரறிவாளன் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளானார்

 

No comments: