Friday, May 6, 2022

அரசியல்வாதிகளுக்கு எதிரான மக்களின் அற‌ப்போராட்டம்

மீரிஹானவில் ஆரம்பமான போராட்டம் கோல்பேஸில் நிலைகொண்டு  நாடெங்கும்  பரவி விட்டது. ஒரு மாதத்தை நெருங்கும் இந்தப் போராட்டம்  தினமும்  புது வடிவம் பெறுகிறது. அரசியல் கட்சிகள் நடத்திய போராங்கங்களில் மக்கள் கலந்துகொள்வதே இது வரை காலமும் நடைபெற்று வந்தது. அரசியல்வாதிகளை ஓரமாக ஒதுக்கி  வைத்து விட்டு மக்கள் நடத்தும் போராட்டம்  நாடெங்கும் வியாபித்துள்ளது.

அரசியலாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள்  இப்போ அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டங்களை அடக்குவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசாங்கம் முயற்சி செய்தது. அவை எல்லாவற்றையும் முறிடித்து போராட்டம் கனகச்சிதமாக நடைபெறுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவகத்தின் (IHP) ஆய்வு தெரிவிக்கிறது. கொள்கை பகுப்பாய்வு மையத்தின் (CPA) மற்றொரு தேசிய கணக்கெடுப்பு, பதிலளித்தவர்களில் 87% க்கும் அதிகமானோர்  ராஜபக்சே குடும்பமும் இலங்கை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இரண்டு கருத்துக் கணிப்புகளும் இராஜபக்ஷ எதிர்ப்புக் களமிறங்குவதற்குப் பொருளாதாரமே முக்கியக் காரணம் என தெரிவிக்கின்றன. CPA கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 90% பேர் தற்போதைய நெருக்கடியால் தங்களின் வருமானம் அல்லது உடனடி குடும்ப உறுப்பினரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். 9% மட்டுமே தற்போதைய பொருளாதார மோதலிலிருந்து விடுபடுகின்றனர். 88% பேர் தாங்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர் கடந்த மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் நிற்க வேண்டியிருந்தது என்று கூறுகிறார்கள். 4.4% மட்டுமே கோவிட் மற்றும் 2% தங்கள் பொருளாதார அவலத்திற்கு சர்வதேச பொருளாதாரத்தை குற்றம் சாட்டுகின்றனர். 62 வீதமானோர் கோட்டாபய அரசாங்கத்தின் பொருளாதார முறையற்ற நிர்வாகமே நாட்டிற்கும் அவர்களின் துன்பங்களுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையை மீட்க வந்த குடும்பம் என ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட குடும்பத்தை  இன்று அரசியலில் இருந்து விரட்டுவதற்காக ஒன்றுகூடியுள்ளனர். மஹிந்த குடும்பத்தை தலையில் வைத்து கொண்டாடியவர்கள் தான்  இன்று அவர்களை வெளியேற்றுவதற்கு வழி தேடுகின்றனர்தொடர் போராட்டங்களால் சலிப்படைந்து மக்கள்  வெறுப்படைவார்கள் என அரசாங்கம் நினைக்கிறது.

 மக்கள்  போராட்டங்கள்  ஒரு புறம் நடக்கையில் சுமார் 2000  தொழிற்சங்கங்கள்  போராட்டகளத்தில் கால் பதித்துள்ளன. போராட்டம் ஹர்தால் என்றாம் முணுமுணுப்புகள் எழுவது வழமை. இன்றைய போராட்டங்களுக்கும் மக்கள் எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு  மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது. எரிபொருளுக்காக மக்களும், வாகனங்களும்  போட்டி போட்டு வரிசை கட்டுகின்றன. சுமார் 10 மணித்தியால காத்திருப்பு அரசாங்கத்தின் மீதான  கோபத்தை அதிகரிக்கிறது.

  அன்று தமிழ் மக்கள் படும் பாரிய துன்பங்களை அவர்கள் புறக்கணித்ததைப் போன்று, தற்போது தமது சொந்த சிங்கள பௌத்த ஆதரவாளர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் பெருகிவரும் அவலநிலையை மழுங்கடிக்கின்றனர். ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈழப் போரில் வெற்றி பெறுவதே அவர்களின் ஒரே குறிக்கோளாக

இருந்ததைப் போல, இப்போது அவர்களின் ஒரே கவலை, அவர்களின் அடிப்படை உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் என்ன விலை கொடுத்தாலும் முடிந்தவரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

உள் நாட்டுப் போரின் போது அழிக்கப்படாது கட்டி எழுப்பப்பட்ட  இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருடங்கலில்  அரசாங்கத்தால் அழிக்கப்பட்டது.  2019 ஆம் ஆண்டு வரிக்குறைப்பு செய்யப்பட்டபோது பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்புள்ளி விபரங்களை வெளியிட்ட அரசாங்கம் அதனை மறுத்தது. மக்கள் அதனைப் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை.

இன்றைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பினால் அடுத்த அரசாங்கத்தைப் பொறுப்பெடுப்பது யார் என்பதில் குழப்பநிலை கானப்படுகிறது. இப்போதைக்கு அரசியல் ரீதியாக மஹிந்தவின் கை ஓங்கியுள்ளது.

 

 

No comments: