Sunday, May 22, 2022

விட்டு விடுதலையாகி சுதந்திரப் பறவையான பேரறிவாளன்


 

  இந்தியாவின் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவின் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான அரசியலால் சிரவாசம் அனுபவித்துவந்த பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்து அரசியவாதிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் ,பாரதீய ஜனதா ஆகியவற்றின் அரசியல் சதுரங்கத்தால் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனின் விடுதலை மற்றைய அறுவ‌ரின் விடுதலைக்கும்  வழிவகுக்கும். ஆளுந எனும் நந்தியின் அரசியகுக்கு நீதிமன்ற‌ம் சாட்டையடி கொடுத்துள்ளது. 

 161வது சட்டப்பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கும் 142வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை நீதிபதிகள் விடுதலை செய்தனர். 

இந்த வழக்கில்ஆளுநர் மீது கடும் அதிருப்தி அடைந்திருந்த நிலையிலேயேதாங்களே விடுதலை உத்தரவைப் பிறப்பிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின் போதுதமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததுஆளுநர் ஒவ்வொரு கோப்பையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளதுமாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநரின் முடிவு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள்இந்த விவகாரத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறதுவிரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனதுஎன கேள்வி எழுப்பினர்மத்திய அரசு ஆளுநர் என்பவர் மாநில அரசின் தலைவர்அப்படி இருக்கும்போது அவருக்காக மத்திய அரசு ஆஜராவது ஏன்ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லைஎல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் மத்திய அரசின் வாதம் உள்ளது.

14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72ன் படி குடியரசுத் தலைவரும், 161ன் படி ஆளுநரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதுஇந்த வழக்கில் ஆளுநர் ஏன் முடிவு எடுக்க முடியாதுஎன நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்  மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறதுஅரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லைஆளுநர் காலதாமதம் செய்தது தவறுஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறுஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை பெறத் தேவையில்லைமுழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதுமாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லைபேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லைபேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


  இந்த வழக்கில்ஆளுநர் விடுதலை செய்யவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கக்கூடும்ஆனால்ஆளுநரின் கால தாமதத்தால் கடுமையாக அதிருப்தி அடைந்ததன் காரணமாகவேஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்காமல்உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துள்ளதுஇதன்மூலம்இது தொடர்பான வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தின் இந்த விடுதலை தீர்ப்பு முன்னுதாரணமாக காட்டப்படும் நிலையும் உருவாகியுள்ளதுஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தால் ஆளுநர் முடிவு எடுப்பதே முன்னுதாரணமாகியிருக்கும்ஒருவகையில்பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றமே விடுதலை அளித்துள்ள அதிரடி தீர்ப்புக்கு ஆளுநரே காரணமாகியுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் தாமதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுஸ்டாலுக்கு முட்டுக்கட்டை போர மேகாலயாவில் இருந்து  இறகுமதி செய்யப்பட்ட ஆளுநர் ரவுக்கு நீதிமன்ர குட்டு வைத்ததால்  மோடியும்அமித் ஷாவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21‍ம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்இந்தச் சம்பவம் தொடர்பாக பேரறிவாளன்நளினிமுருகன் உட்பட 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்குமனிதவெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ் கொண்ட இரண்டு பற்றிகள்  வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். ‘சிறு விசாரணைக்காக’ அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ல் பேரறிவாளனுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில்அது தள்ளிவைக்கப்பட்டது

 முருகன்பேரறிவாளன்சாந்தன்நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும்ஜெயக்குமார்ராபர்ட் பயஸ்ரவிச்சந் திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டதுபின்னர்முருகன்பேரறிவாளன்சாந்தன்நளினி ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது 

தமிழகச் சட்டப்பேரவையில் 30-8 -2011 அன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில்கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற,   ஆளுநர்   21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார்.   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன்பேரறிவாளன்முருகன்நளினி என்ற நால்வரில்நளினிக்கு தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.முகழக அரசு செய்தது - 

பேர்றிவாளன் கைது செய்யப்படும்போது அவருக்கு 29 வயது. 31 வருடங்களின்  பின்னர் ஆவர் விடுதலை செய்யப்பட்டார்மகனின் விருதலைக்காக தாயாரான அற்புதம்மாள் பட்ட துயரங்கள்   வார்த்தைகளில் அடங்காதவை . தமிழக முதலர்கள்அரசியல்வாதிகள்சமூக ஆர்வலர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்தார்அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளை வீழ்த்திய அற்புதம்மாள் ஒரு அற்புதமான‌ தாய் என்பதை நிரூபித்துள்ளார்.

No comments: