Monday, May 16, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 18


நடிகர்,நடிகை,இயக்குநர்   போன்றவர்களுக்காக திரைப்படங்கள்  ஓகோ என உச்சக் கட்டத்தில் இருந்தபோது 1980 இன் பின்னர் சில்க்ஸ்மிதா எனும் கவர்ச்சிக் கன்னிக்காக தமிழ் சினிமா  இடம் ஒதுக்கியது சில்க்கின்  நடனம் இல்லாத படம் ஓடது  என்ற கருத்து மேலோங்கியது. எவளவு செலவானாலும் சில்க்கின் திகதி கேட்டு காத்திருக்கும் தயாரிப்பாளர்களின்  பட்டியல் நீண்டது.

சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் ஆந்திர பிரதேஷத்தின் ஏலூரு எனும் இடத்தில் ஓர் ஏழை தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு பெற்றார் சில்க் ஸ்மிதா. அதன் பிறகு குடும்பத்தின் ஏழ்மை காரணத்தால் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்.   இளம் வயதிலேயே சில்க் ஸ்மிதாவிற்கு திருமணம் ஆனது என்று, அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் நிறைய கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகின்றன. தொந்தரவு, சித்திரவதை தாங்க முடியாமல், சென்னைக்கு சென்றார்  சில்க் ஸ்மிதா.

சென்னையில் அத்தை வீட்டில் தங்கி வேலை தேடி வந்த போது தான், ஒரு மேக்கப் கலைஞர் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.  இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச் சக்கரம் எனும் படத்துல் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார்.அப்போது  ஸ்மிதா  எனும் பெயருடன் அறிமுகமானார்.  வண்டிச் சக்கரம் படத்தின் சில்க்  பத்திரத்தில் நடித்ததால் சில்க் ஸ்மிதா எனும் பெயர் பிரபலமடையத் தொடங்கியது.

சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி மற்றும் தைரியம் அவரோடு போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வைத்தது. இதனால், ஒருக்கட்டத்தில் சில்க் ஸ்மிதா வெறும் கவர்ச்சிக்காக நடிகை எனும் நிலை உண்டானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக திகழ்ந்தார்.

 சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்த்தார் சில்க் ஸ்மிதா. ஆனால், அப்படியான வாய்ப்புகள் அவருக்கு விரல் விட்டு என்னும் எண்ணிக்கையில் தான் கிடைத்தன. அதிலும்,தனது திறமையை நிரூபித்தார்.   மூன்று முகம், மூன்றாம் பிறை, தங்க மதன், பாயும் புலி, சிவப்பு சூரியன், அலைகள்     ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். "லயனம்" என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்டதால் சிமிதா கவர்ச்சிப்பவையக  உருவகப்படுத்தப்பட்டார்.

கமல்,ரஜினி ,வியஜகாந்த், பிரபு போன்ற அன்றைய பிரபல நாயகர்களின் படங்களில்  ஸ்மிதாவின் நடனம் கட்டாயம்  இருக்க வேண்டும் என்பது எழுதாத நடைமுறையாக  இருந்தது. 80. 90 களில் சில்க் இல்லாத படங்களே இல்லை. சுமார் 450 படங்களில் ஸ்மிதா நடித்துள்ளார்.

வாழ்க்கை" எனும் படத்தில் சரணம் இல்லாத ஒரு பாடலை இளையராஜா  உருவாக்கி இருந்தார். "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் உன் வேலையைக் காட்டு" எனும் அந்தப்  பாடல் வாகினி ஸ்ரூடியோவில் படமாக்கப்பட்டது.

 நடிகர் ரவீந்தரும் சில்க்ஸ்மிதாவும் நடனமாடினார்கள். சில்க்கைத் தூக்கிக்கொண்டு நடனமாடிய ரவீந்த காட்சி முடிந்ததும்  நிலை தடுமாறி அவரை பொத்தெனப் போட்டார். அதனால் கோபமடைந்த சில்க்   ரவீந்தருடன் நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு படப்பிடிபுத் தளத்தை விட்டு வெளியேறினார். படத்தின் தயாரிப்பாளர்களான சித்ரா ராமுவும், சித்ரா  லட்சுமணனும்  மண் வாசனை பட நூற்றண்டு விழாவுக்காக கோயம்புத்தூர் சென்றுவிட்டனர்

சில்க் கோபித்துக்கொண்டு சென்றதைக் கேள்விப்பட்ட சித்ரா லட்சுமணன  உடனடிய்க சென்னைக்குத் திரும்பி சில்க்கைச் சந்தித்தார். சில்க்கை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதாலும், அவரின் பிறந்த நாள் கேக்கை வாழ்க்கை படப்பிடிப்புத்தளத்தில் கொண்டாடியதாலும் சித்ரா லட்சுமணன் மீது  அவருக்கு மதிப்பு இருந்தது. அவரின் வேண்டு கோளுக்கிணங்க  மீண்டும் அந்தப் பாடலுக்கு ரவீந்தருடன் நடனமாடினார் சில்க்.  ரவீந்தர் மீதான் கோபம் சில்க்குக்கு மாறவில்லை.  "வீட்டுக்கு ஒரு கண்ணகி" எனும் படத்தில் ரவீந்தருடன் நடிக்க ஒப்புக்கொண்ட சில்க்  தான் வாங்கிய முற்பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

"சட்டத்தைத் திருத்துங்கள்" எனும் படத்தில்  சில்க் ஸ்மிதாவுடன் சத்தியராஜ் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது. நடனமாடும்போது சில்க்கின் காலை சத்தியராஜ் மிதித்துவிட்டார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஸ்மிதா இந்த ஆளுடன் நடனமாட மாட்டேன்  எனக்கூறிவிட்டு ஓரமாகப் பொய் அமர்ந்துவிட்டார். சத்தியராஜ் அப்போது சின்னச் சின்னப்பாத்திரங்களில் நடித்தார்.சத்தியராஜ் ஜமீந்தார் வீட்டுப்பிள்ளை சினிமா ஆசையால் சின்னச் சின்னப் பாத்திரங்களில் நடிக்கிறார் அவருக்கு நடமாடத் தெரியாது. என அங்கிருந்தவர்கள்  கூறியதால் மீண்டும் சத்தியராஜுடன் நடனமாடினார்.

"ஜீவா" படத்தில் சத்தியராஜ் கதாநாயகனாக நடிக்கும்போது தான் பட்ட கஷ்டங்கள், அவமனங்கள் எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டார்.

கமர்சியல் மசாலா திரைப்படங்கள் என்றால் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா மட்டுமே அதிகம் தேவைப்பட்டார். இவர் நடித்த பல பாடல் காட்சிகள் இன்று வரை பிரபலம். கமலஹாசனுடன் ஆடிய நேத்து ராத்திரி எம்மா, தியாகராஜனுடன் அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடி, போன்ற பல பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவிடம் நீங்கள் நல்ல ஆர்ட்டிஸ்ட், நல்ல குணசித்ர நடிகையாக பல படங்களில் நடிக்கலாமே எனத் தெரிவித்தார். சில்க்கின் கவர்ச்சிதா முதலீடு என  தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். சில்க் ஸ்மிதாவுக்கும் காசு தேவைப்பட்டது. எஅடிப்பு தொலைந்து கவர்ச்சி  முதலிடம்  பெற்றது.

கமர்சியல் மசாலா திரைப்படங்கள் என்றால் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா மட்டுமே அதிகம் தேவைப்பட்டார். இவர் நடித்த பல பாடல் காட்சிகள் இன்று வரை பிரபலம். கமலஹாசனுடன் ஆடிய நேத்து ராத்திரி எம்மா, தியாகராஜனுடன் அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடி, ’பொன்மேனி உருகுதே,  போன்ற பல பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை. போதை ஏறிய கண்களுடன் "வா மச்சான் வா" என்று பாடவும்.. அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசிவரை அப்படியேதான் அவரை பார்க்க விரும்பினர். ஒரு படத்தில் ஹீரோ இருப்பதுபோலதான் சில்க்கும் அன்றைய காலகட்ட படங்களில் நிறைந்திருந்தார்... ஒரு பாட்டுக்குத்தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மை பார்த்து கொண்டு சிரிப்பார்.. அந்த அளவுக்கு ஒரு ஆளுமை இருந்தது சில்க்கிடம்.

பெட்டியில் தூங்கி கொண்டிருந்த பல படங்களில் இவரது ஒரே ஒரு பாட்டை இணைத்து காசை அள்ளிய கூட்டமும் அதிசயமும் அன்று நடந்தது.. தவிர்க்கவே முடியாத தேவையானார் சில்க் ஸ்மிதா. கடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு முதல், சில்க் உட்கார்ந்த கதிரை வரை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோயின. சில்கின் படத்தை அட்டிப்படமாக பிரசுரித்து வைத்து எத்தனையோ வார பத்திரிகைகள் பிழைத்தன.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவிடம் நீங்கள் நல்ல ஆர்ட்டிஸ்ட், நல்ல குணசித்ர நடிகையாக பல படங்களில் நடிக்கலாமே எனத் தெரிவித்தார். சில்க்கின் கவர்ச்சிதா முதலீடு என  தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். சில்க் ஸ்மிதாவுக்கும் காசு தேவைப்பட்டது. நடிப்பு தொலைந்து கவர்ச்சி  முதலிடம்  பெற்றது.

அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினாலும் தங்கள் வீட்டு பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந்தது.. சில்க்கை தவிர வேறு எந்த கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது!! ஒருமுறை "நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க" என்று கேள்வி கேட்டதற்கு, "நக்சலைட் ஆகியிருப்பேன்" என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. அந்த அளவுக்கு முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்தவர் சில்க்.

No comments: