நடப்பு சாம்பியனான இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
சர்வதேச
நாடுகளுக்கிடையே நடத்தப்படும் தோமஸ் கிண்ண பட்மிண்டன் தொடரில் முதல் முறையாக தங்கம்
வென்றது இந்திய அணி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கில் நடந்து வந்த போட்டியில், ஆண்களுக்கான அரைஇறுதியில் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு) , சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து , நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணிநடப்பு சம்பியன் இந்தோனேசியாவுடன் பலப்பரீட்சை செய்தது. நடப்பு சம்பியனான இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 73 ஆண்டுகால தோமஸ் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா தங்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளது. இந்தோனேசியா 11 முறை சம்ப்யனானது இரட்டையரில் சத்விக் சாய்ராஜ் , சிராஜ் ஷெட்டி இணை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
No comments:
Post a Comment