Tuesday, May 10, 2022

சித்ராவின் தற்கொலையில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?

சின்னத்திரை ரசிகர்களின் கனவுக்கன்னியான  சித்ராவின் தற்கொலை    அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகிய வேலுநாச்சி சீரியலில் சித்ரா தனக்கென்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரில், முல்லையாக நடித்து ரசிகர்களின் ம்னதில் இடம் பிடித்தார்.இயற்பெயரான சித்ரா என்பதையே மறந்து செல்லுமிடமெல்லாம் முல்லை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கை கிடப்பில் போட்டனர். தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத், பொலிஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பு, பெரம்பலூரில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து கொடுத்த தொந்தரவின் காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

தற்போது ஆட்சி மாறியதால், முன்னாள் எம்எல்ஏவை விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய அரசு இந்த வழக்கை விசாரிக்க முழு சுதந்திரம் கொடுத்ததும் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி   சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள கோட்டலில்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை பொலிஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி  கைது செய்யப்பட்டார். 2021 மார்ச் 2-ம் திகதி பிணையில் வெளியே வந்தார்.

சித்ரா நடிப்பதைக் கணவர் விரும்பவில்லை என்பதால் இருவருகும் இடையிலான பிரச்சினையில் சித்ரா தர்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. கணவனின் கைது சந்தேகத்தை  உறுதிப் படுத்தியது. கணவர் பிணையில் விடுவிக்கப்பட்டதால் சித்ராவின் தற்கொலை விவகாரம் தேக்கமடைந்தது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நானும், என் மனைவி சித்ராவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். சித்ரா இறந்த உடனே நானும் இறந்துவிடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால், நான் நிரபராதி என்பதை நிரூபிக்கவே உயிரோடு இருக்கிறேன்.

 அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அவர்  புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது

  சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் புகாரினால்  அந்த முன்னாள் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில்,மறு விசாரணை நடத்த எந்த பிரச்னையும் இல்லை என்றும், மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை.குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்று   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்    தெரிவித்தார்.

  சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் புகாரினால்  அந்த முன்னாள் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில்,மறு விசாரணை நடத்த எந்த பிரச்னையும் இல்லை என்றும், மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை.குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்று   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுகாலத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் மீண்டும்  உயிர் பெற்றுள்ளன. அந்த வரிசையில் சித்ராவின் தற்கொலை வழக்கும்  மீண்டும்  உயிர் பெற்றுள்ளது. அரசியல்வாதி கொடுத்த நெருக்கடியே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்  என அவரது கணவர் உறுதியாக நம்புகிறார். அந்த உண்மை வெளிவந்தால் தனது உயிருக்கு ஆபத்து எனவும் பொலிஸில் புகார் செய்துள்ளார்.ஒரு சின்னப் பிரச்சினைகும் சட்டம்  ஒழுங்கு கெட்டுவிட்டது. சிபிஐ விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கும் எதிர்க் கட்சிப் பிரமுகர்கள்   கள்ள  மெளனம் காட்டுகிறார்கள்.

  2013ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா.   ஜீ தமிழ், ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில்  பணியாற்றியுள்ளார். சரவணன் மீனாட்சி, சீசன் 2 சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலும இவர் நடித்திருந்தார்.   சித்ரா viளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்  முல்லை பாத்திரம் மூலம்  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சித்ரா. சித்ரா என்ற பெயர் மறைந்து முல்லை எனும் பெயர் முன்னிலை வகித்தது. தொலைக் காட்சித் தொடரில் முல்லை அழுதால் ரசிகர்கள் அழுவார்கள். முல்லை சிரித்தால் ரசிகர்கள் சிரிப்பார்கள்.

அந்த முல்லையை பிடுங்கி எறிந்தவரை அடையாளம் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

No comments: