Saturday, April 21, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 29

சிநேகிதியின் காதலனைக் கரம் பிடித்து குடும்பம் நடத்திய ஒரு துரோகியின் கதைதான் காவலன். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜயைத் தூக்கி உயரத்தில் வைத்த படம்.
புகை வண்டியில் சிறுவன் பழைய டயரியைப் பார்ப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அடி, தடி, சண்டை சச்சரவுகளால் எதிரிகளை அடக்கி வைத்த ராஜ்கிரண் துரோகி ஒருவனைப் போட்டுத்தள்ள கிராமம் ஒன்றுக்குச் செல்கிறார். அப்போது பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணை வைத்தியசாலையில் சேர்க்கிறார். ஒரு உயிரைக் கொலை செய்த ராஜ்கிரண் இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிறார். அந்தக் குழந்தைக்கு பூமிநாதன் எனப் பெயரிடுகிறார்.
ராஜ்கிரனால் பெயரிடப்பட்ட பூமிநாதன் தான் விஜய். வன்முறையைக் கைவிட்டு ராஜ்கிரன் திருந்தி வாழும் போது அவரால் பெயரிடப்பட்ட விஜய் ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார். சண்டையில் வெற்றி பெறுவதற்காக வெளி நாட்டுக்கும் செல்கிறார். விஜயைத் திருத்த ராஜ்கிரனால் தான் முடியும் என நினைத்த பெற்றோர் ராஜ்கிரனுக்கு உயிராபத்து பொடிகாட் @தவைப் படுகிறது எனப் பொய் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
தனக்கு எந்த ஆபத்தும் இல்லை. தன் மகள் அசினுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று அசினுக்கு பொடிகாட்டாக விஜயை அனுப்புகிறார் ராஜ்கிரண். அசின் படிக்கும் கல்லூரியில் விஜயும் படிக்கிறார். அசின் மாணவன் அல்ல பொடிகாட் என்றே நினைக்கிறார். பொடிகாட் யூனிபோமோடு தான் கல்லூரிக்கு செல்கிறார். அசினின் தோழி மித்ராவும் அதே கல்லூரியில் படிக்கிறாள். அசின், மித்ரா, விஜய், வடிவேல், வடிவேலின் மனைவி ஆகியோர் ராஜ்கிரன் கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர். அசினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விடுகிறது. படிப்பு முடிந்ததும் இலண்டனில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
விஜயை ஏமாற்றுவதற்காக தொலைபேசியில் உருகி உருகி காதலிப்பதாக நடிக்கிறார் அசின். தொலைபேசி அழைப்புகளுக்கு முதலில் கரிசனை இல்லாது பதிலளித்த விஜய் அந்தக் குரலைக் காதலிக்கத் தொடங்குகிறார். விஜயை ஏமாற்றுவதற்காக காதலிப்பது போல் நடித்த அசின் விஜயை உண்மையாகவே விரும்புகிறார். இதை அறிந்த மித்ரா அசினை எச்சரிக்கை செய்கிறர். தன்னைக் காதலிப்பது அசின் தான் எனத் தெரியாது முகம் தெரியாத காதலியை உயிருக்குயிராக நேசிக்கிறார் விஜய்.
பெற்றோரின் திருமண நிச்சயதார்த்தத்தை விரும்பாத அசின் விஜயுடன் ஓடி விட முடிவெடுக்கிறார். அது தான் சரியென்று தோழி மித்ரா கூறுகிறாள். விஜயுடன் அசின் தொலைபேசியில் கதைப்பதைக் கேட்ட வடிவேலில் மனைவி அந்தச் செய்தியை ராஜ்கிரனின் மனைவிக்குக் கூறுகிறாள். இரவு புறப்படும் ரெயிலில் விஜய் இல்லையென்றால் அந்த ரயில் பயணமே தன் இறுதிப் பயணம் என்று எச்சரிக்கிறார். தன் காதலியைக் காண்பதற்காக ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்கும் போது அசினை யாரோ கடத்தி விட்டதாக வடிவேல் கூறுகிறார்.
அவரைக் கடத்திய ராஜ்கிரனின் அடியாட்களுடன் மோதுகிறார் விஜய். அப்போது அங்கு வந்த ராஜ்கிரனிடம் விஜய் தன் நிலைமையைக் கூறுகிறார். விஜய் ரயில் நிலையத்துக்குப் போகவில்லை என்றால் விஜயின் காதலி இறந்து விடுவாள். ஆகையால் விஜயை போக விடும்படி அசின் கெஞ்சுகிறாள். விஜயைப் போக அனுமதித்த ராஜ்கிரன் ரயில் நிலையத்தில் விஜயின் காதலி இல்லையென்றால் விஜயைக் கொலை செய்யும் படி தனது அடியாளை அனுப்புகிறார். ரயில் நிலையத்தில் தான் இல்லையென்றால் விஜயைக் கொலை செய்து விடுவார்கள் என்பதை அறிந்த அசின் தனது தோழி மித்ராவை ரயில் நிலையத்துக்கு அனுப்புகிறார்.
விஜயை காதலிப்பது அசின் தான் என்ற உண்மையைக் கூறச்சென்ற மித்ராவைக் கண்ட விஜய் ஆச்சரியப்படுகிறார். தன்னை உருக உருகக் காதலித்தது மித்ரா என்று நினைக்கிறார் விஜய். விஜயிடம் உண்மையைக் கூறச் சென்ற மித்ராவால் உண்மையைக் கூற முடியவில்லை. ராஜ்கிரனின் அடியாளைக் கண்டதும் செய்வதறியாது நிற்கிறாள் மித்ரா. விஜய் மித்ராவைக் கட்டிப்பிடிக்கிறார். அந்தக்கணத்தில் விஜயை விரும்புகிறாள் மித்ரா. இப்படி ஒருவரை அடைய நம்பிக்கைத் துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
மித்ராவின் மனச்சாட்சி துரோகத்தை ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையை எழுதி தனது மகன் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். மித்ரா இறந்ததும் அந்த டயரி மகனிடம் கிடைக்கிறது. மகனின் விருப்பத்துக்காக அசினின் வீட்டிற்கு மகனுடன் செல்கிறார் விஜய்.
விஜயுடன் மகனையும் கண்ட ராஜ் கிரண் அன்புடன் வரவேற்கிறார். அசின் திருமணம் செய்யவில்லை என்ற உண்மை விஜய்க்குத் தெரிகிறது. ஆனால் காரணம் தெரியவில்லை. அன்றி என்று அசினை மகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய். அசினை மம்மி என்று அழைக்கிறார் விஜயின் மகன். எங்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு வருவீர்களா மம்மி என்று விஜயின் மகன் கேட்டதும் தியேட்டர் நிசப்தமாகிறது. அந்த கேள்வி ரசிகர்களை உலுக்கி விட்டது.
மகனின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த விஜய் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறார். நான் கேட்க நினைத்ததைத் தான் உன் மகன் கேட்டான் என்று ராஜ்கிரன் கூறுகிறார். ராஜ்கிரனின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய் மறு பேச்சின்றி அசினையும் அழைத்துச் செல்கிறார். தான் உயிருக்குயிராகக் காதலித்த விஜயுடன் அசின் இணைகிறார். தன்னை தொலைபேசியில் உருகி உருகி காதலித்தது அசின் தான் என்று தெரியாது அசினை அழைத்துச் செல்கிறார் விஜய்.
அசினும் விஜயும் இணைந்த சந்தோஷத்தில் தாய் மித்ரா எழுதிய டயரியை புகையிரத மேடையின் குப்பைக் கூடைக்குள் போடுகிறான் மகன். அதனைக் கண்ட விஜய் அந்த டயரியை எடுத்துப் படிக்கிறார். அப்போது தான் தன்னை விரட்டி விரட்டி உருகி உருகிக் காதலித்தது அசின் என்பதை அறிகிறார் விஜய். தன் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே மித்ரா விஜயைத் திருமணம் செய்தார். தனக்குத் துரோகம் செய்யவில்லை. விஜயின் உயிரைக் காப்பாற்றினார் என்ற எண்ணமே அசினிடம் உள்ளது. மித்ரா தன்னுடன்பேசாமலிருந்ததை அசினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காவலன் படத்தில் விஜயின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது. ஹிந்தித்திரை பக்கம் எட்டிப்பார்த்த அசின் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் நடித்த படம் இது. அசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அசினின் தோழியாக நடித்த மித்ரா நடிப்பிலும் அழகிலும் சகலரையும் கவர்ந்து விட்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் படம் முடிந்த பின்னும் சிரிப்பை உண்டாக்கியது.
மலையாளத்தில் பொடிகாட் என்ற பெயரில் வெளியான படமே தமிழில் காவலன் என்ற பெயருடன் வெளியானது. இப்படத்துக்கு காவல்காரன் என்று பெயரிடவிரும்பினார்கள். எம்.ஜி.ஆர்.நடித்த காவல்காரன் திரைப்பட நிறுவன அனுமதி வழங்காததால் காவலன் என்று பெயரிட்டனர். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது. கதை, திரைக்கதை, இயக்கம் சித்திக்.
யாரது யாரது சொல்லாமல் என் நெஞ்சை, பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே, ஸ்டெப் எப் எப் ரெப்மினா, சட சட, விண்ணைக் காப்பான் ஒருவன் ஆகிய பாடல்கள் மனதை விட்டகலவில்லை. வித்யாசாகரின் இசை படத்துக்கு வலுவூட்டியது.
பழைய படங்களின் பெயரை வைப்பதில் தனுஷுக்கு அலாதிப் பிரியம். படிக்காதவன், மாப்பிள்ளை என்ற பெயர்களில் தனுஷின் படங்கள் வெளியாகின திருவிளையாடல் படத்தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் போர்க் கொடி உயர்த்தியதால் தனுஷின் திருவிளையாடல் எனப் பெயரிட்டார். விஜயும் வேட்டைக்காரன் பெயரில் படம் நடித்தார். சந்திரலேகா, உத்தமபுத்திரன் ஆகிய பழைய படங்களின் தலைப்புக்களில் புதிய படங்கள் வெளியாகின. பழைய படங்கள் தந்த வெற்றியைப் புதிய படங்கள் தரவில்லை.
ரமணிமித்திரன்29/04/12

Monday, April 16, 2012

திரைக்குவராதசங்கதி31

ஸ்ரீதரின்அழைப்பைஏற்றுசித்ராலயாஸ்ரூடியோவுக்குசென்றார்எஸ்.பி.அங்குஇசையமைப்பாளர்எம்.எஸ்.விஸ்வநாதனும்அவரதுவாத்தியக்குழுவும்இருந்தது.சுமார்50பேர்கொண்டஅக்குழுவைக்கண்டஎஸ்.பி.க்குமுதலில்கலக்கம்ஏற்பட்டது.எம்.எஸ்.விஸ்வநாதனுக்குஎஸ்.பி.யைஸ்ரீதர்அறிமுகப்படுத்தினார்.மெல்லிசைமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனின்வேண்டுகோளுக்குஇணங்கஹிந்திப்பாடல்ஒன்றைஎஸ்.பி.பாடினார்தமிழ்ப்பாடல்ஒன்றும்பாடும்படிமெல்லிசைமன்னர்கேட்டார்.தமிழ்ப்பாட்டுதன்னிடம்இல்லைஎன்றுஎஸ்.பி.கூறினார்.காதலிக்கநேரமில்லைபடத்தில்எம்.எஸ்.விஸ்வநாதன்இசையமைத்தநாளாம்நாளாம்திருநாளாம்என்றபாட்டைகொடுத்துபாடும்படிகேட்டார்மெல்லிசைமன்னர்.அந்தப்பாடலைதெலுங்கில்எழுதிப்பாடினார்.எஸ்.பி.யின்குரல்மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழை நன்றாக உச்சரிக்கப் பழகிக்கொண்டு வந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக்கிடைக்கவில்லைஎன்றகவலையை மறந்து, குரல் மெல்லிசைமன்னருக்குப்பிடித்து விட்டது. குரல் நன்றாக இருக்கிறது.தமிழைநன்றாகஉச்சரிக்கப்பழகிக்கொண்டுவந்துதன்னைசந்திக்கும்படிமெல்லிசைமன்னர்கூறினார்.வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற கவலையை மறந்து, குரல் மெல்லிசை மன்னருக்குப் பிடித்துள்ளது என்று எஸ்.பி. சந்தோசப்பட்டார்.சரியாகஒருவருடத்தின்பின்ற்செயலாகஎஸ்.பி.யைச்சந்தித்தார் மெல்லிசை மன்னர்.எஸ்.பி.யை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்த மெல்லிசைமன்னர்ஸ்ரீதரின்சித்திராலயாஅலுவலகத்தில்சந்தித்ததைவூட்டஏன்சந்திக்கவரவில்லைஎன்றுஅன்புடன்கேட்டார். .மெல்லிசைமன்னரின்சிபாரிசில்ஓட்டல் ரம்பா என்னும்படத்தில் பாடுவதற்குஎஸ்.பி. க்குசந்தர்ப்பம்கிடைத்தது.எஸ்.பி. யின்கெட்டகாலம்படம்வெளிவரவில்லை.எஸ்.பி.யின்குரலில்மயங்கிய மெல்லிசைமன்னர் சாந்தி நிலையம்படத்தில்எஸ்.பி.க்கசந்தர்ப்பம்கொடுத்தார்.இயற்கைஎன்னும்இளையகன்னிஎன்றஅப்பாடல்எஸ்.பி.யைதமிழுக்குஅறிமுகம்செய்தது.ரி.எம்.சௌந்தரராஜனின் தனி ஆதிக்கத்திஇருந்த தமிழ் சினிமா எஸ்.பி. யைநோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.எஸ்.பி. குரல் வளம் மக்கள் திலகத்தைக்கவர்ந்ததால் அடிமைப் பெண்படத்தில்எஸ்.பி.க்கு சந்தர்ப்பம் வழங்கினார். மக்கள்திலகத்துக்காக எஸ்.பி. பாடியஆயிரம்நிலவேவா...என்றபாடல்இன்றுகேட்டாலும்மனசுக்குஇதமாகஉள்ளது.ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர்,முத்துராமன்ஆகியோருக்கு எஸ்.பியின்குரல்பொருந்தியது.மக்கள்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.தொடர்ந்துபாடலானார்.அந்தநேரத்தில்தான்நடிகர்திலகத்துக்குபாடும்சந்தர்ப்பம்எஸ்.பிக்குக்கிடைத்தது."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தில்"பொட்டுவைத்தமுகமோ'என்றபாடலைப்பாடவேண்டியபாடகர்ஒத்துழைக்காததால்அந்தச்சந்தர்ப்பத்தைஎஸ்.பிக்குவழங்கினார்மெல்லிசைமன்னர்.சௌந்தர்ராஜனின்குரல்நடிகர்திலகம்தான்பாடுகிறார்என்றஉணர்வைரசிகர்கள்மத்தியில்ஏற்படுத்தியிருந்தது.தனதுமென்øமயானகுரலைரசிகர்கள்ஏற்பார்களோஎன்றசந்தேகத்துடன்ஒலிப்பதிவுக்குச்சென்றார்எஸ்.பி.பாடல்ஒலிப்பதின்போதுமக்கள்திலகம்அருகிலேயேஇருந்துகவனிப்பார்.அவர்இல்லாதவேளையில்பாடல்ஒலிப்பதிவுநடைபெற்றால்அவருடைய ஒப்புதலின் பின்னரே பாடல்திரைப்படத்தில்சேர்க்கப்படும்.ஆனால் நடிகர்திலகம்அப்படியல்ல.படப்பிடிப்புத்தளத்தில்பாடலைமுழுமையாகஒருமுறைகேட்டபின்னர்நடிக்கத்தொடங்கிவிடுவார்.அன்றையபாடல்ஒலிப்பதிவின்போதுநடிகர்திலகம்திரெனவந்ததுனைவரையும்னவரயும்ஆச்சரியப்படுத்தியது.எஸ்.பியைஒருஅறைக்குள்அழைத்துச்சென்றுஎனக்காகஉனதுஸ்டைலைமாற்றிவிடாதே.இங்கிருப்பவர்கள்சிலர்ஏதும்கூறுவார்கள்அதனையும்கவனத்தில் எடுக்காதே. நீ எப்படிப் பாடுவாயோ அப்படியேபாடு'' எனக் கூறி விட்டு மெல்லிசை மன்னருடனும்தனியாகக்கதைத்தபின்னர்சென்றுவிட்டார்."சுமதிஎன்சுந்தரி'என்றபடத்தைப்பார்த்தஎஸ்.பி. ஆச்சரியப்பட்டார். எஸ்.பி. யின் குரலுக்காக தனதுபாணியைமுற்றிலும்மாற்றிநடித்திருந்தார்நடிகர்திலகம்.அதன்பின்னர்நடிகர்திலகத்தின்படங்களிலும்எஸ்.பி.பாடினார்.கமல்இரட்டைவேடத்தில் நடித்தஇந்திரடுசந்திரடு'என்றதெலுங்குப்படத்தில்இரண்டுகமலுக்கும்எஸ்.பி.தான்பின்னணிப்பாடல்பாடினார்.வயதானகமல்குரலைமாற்றிப்பேசியிருந்தார்.அந்தகஸட்டைஎஸ்.பியிடம்கொடுத்தக‌மல்இந்தக்குரலுக்குஏற்றமாதிரிபாடும்படிகேட்டார்.கமலுக்காகஎஸ்.பி.பாடியபாடலைக்கேட்டகமலின்முன்னாள்மனைவிசரிகா,பிரமாதமாகப்பாடியிருக்கிறீர்கள்என்றுகமலைப்பாராட்டினார்.கமகூறியபின்னர்தான்அதைப்பாடியதுஎஸ்.பி.என்றுஅவருக்குத்தெரிந்தது.எஸ்.பி.சிறந்தபாடகர்மட்டுமல்லசிறந்தநடிகரும்என்பதைநிரூபித்துள்ளார்.அதேவேளைஅவர்இசைஅமைத்தபடப்பாடல்கபெருவெற்றி பெற்றன.எஸ்.பி. யின் சகோதரி சைலஜாவும் மிகச்சிறந்த பாடகி. அவருடைய கணவர் நல்லநடிகர். சலங்கை ஒலியில் ஜெயப்பிரதாவின்மகளாக சைலஜா நடித்தார். அவர் சிறந்தநடிகை எனப்பெயரெடுத்தார்.
ரமணி


மித்திரன்15/20/2006
90

Sunday, April 15, 2012

திரைக்குவராதசங்கதி30

பாக்கியராஜின் படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தவேளை அவரின்இயக்கத்தில்ஒருபடம்வெளியிடவேண்டும்என்றுஏ.வி.எம்.விரும்பியது.கதையைதயார்செய்துவிட்டுஹோட்டலில்வந்து கதையக்கேட்கும்படிபாக்கியராஜ்கூறினார்.அலுவலகஅறையில்அதைகேட்பதுதான்வழமைஎன்றுசரவணன்கூறினார்.நான்கதைகூறும்போதுஇடைஞ்சல்இருக்கக்கூடாதுஎன்றுபாக்கியராஜ்கூறினா.பாக்கியராஜின்விருப்பப்படிஏ.வி.எம்.சகோதரர்களஹோட்டலுக்குச்சென்றனர்.தனதுஉதவியாளர்களைவெளியேஅனுப்பிவிட்டுகதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.பேனை,பென்சில்,குறிப்பு,கடதசிஎதுவும்இல்லாமல்கதைகூறஆரம்பித்தார்பாக்கியராஜ்.திரைக்கதையைப்பிரித்துப்பிரித்துபாக்கியராஜ்கூறியதைக்கேட்டஏ.வி.எம்.சகோதரர்கள்திகைத்துப்போனார்கள்எத்தனையோபேரிடம்அவர்கள்கதைகேட்டிருந்தார்கள்.ஆனால்இப்படிஒருவரைஅவர்கள்இதுவரைண்டதில்லை.கதைபிடித்துவிட்டது.என்னபெயர்வைப்பதுஎன்றுகேட்டபோதுசின்னவீடுஎன்றுதான்இதற்குப்பெயர்வைததுள்ளன்என்றார் பாக்கியராஜ். அந்தப் பெயரில்ஏ.வி.எம். படம் தயாரிக்காது எனக் கூறியதும் முந்தானை முடிச்சு என்றுஇன்னொருகதைவைத்திருக்கிறேன்என்றார்பாக்கியராஜ்.பாக்கியராஜின்சின்ன வீடுஏ.வி.எம்.மின்முந்தானைமுடிச்சாகியது.முந்தானைமுடிச்சுஎன்றபெயரில்எட்டுஎழுத்துக்கள்உள்ளன.தமிழ்சினிமாசென்ரிமென்ரின்படிஎட்டுஎழுத்துகூடாதாம்.கையால்ஏ.வி.எம்.மின்டிசைனர்அர்ஜுன்என்பவர்மு'என்றஎழுத்தைபொதுவடக்குபெரியஎழுத்தாகஎழுதினார்.முந்தானைஎன்பதற்கும்முடிச்சுஎன்பதற்கும்ஒரேமுஎன்றஎழுத்துவரும்படிசெய்தார்.முந்தானைமுடிச்சுபடத்தைப்பார்த்பாக்கியராஜின்மனைவிபிரவீனாஇப்படம்நிச்சயம்சில்வர்ஜுபிலிகொண்டாடும்.ஆனால்100நாள்ஆவதற்கிடையில்உங்கள்அடுத்தபடமானதூங்காதேதம்பிதூங்காதேறிலீஸ்பண்ணிடுவீங்கறு சரவணனிடம் கூறினார்.அவரின் ஆதிக்கம் நியாயமானது தான்.முந்தானை முடிச்சு சிறந்த படம் என்பதில்சந்தேகமில்லை.ஏ.வி.எம்.மின்அடுத்தபடம்கமலைவைத்துபிரமாண்டமாகஉருவாகி வருகிறது.விசயத்தைப்புரிந்துகொண்டசரவணன்.""இல்லை.இந்தப்படம்நன்றாகஓடினால்அலங்காரில்தூங்காதேதம்பிதூங்காதேயைரிலீஸ்பண்ணமாட்டோம்.சத்தியம்தியேட்டரில்தான்அதனைரலீஸ்செய்வோம்''என்றார்.பாக்கியராஜின்மனைவிபிரவீணாவுக்குகொடுத்தவாக்குறுதியைசரவணன்காப்பாற்றிவிட்டார்.தூங்காதேதம்பிதூங்காதேசத்தியம்தியேட்டரில்திரையிடப்பட்டது.அலங்காரில் முந்தானை முடிச்சு வெள்ளி விழாகொண்டாடியது. அந்த விழாவைக் கண்டுரசித்த பிரவீணா உயிருடன் இல்லை என்றசோகம் சரவணனின் மனதை விரட்டியது.

பாடசாலைகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகளில் முதல் பரிசு பெறுவான் அந்தச் சிறுவன். சிறு வயது முதலே அவனது பாடலுக்குபலர்அடிமையானார்கள்.பின்னாரில்தான்ஒருசினிமாப் பின்னணிப் பாடகனாக பரிணமிக்கப்போவதை அச்சிறுவனானஎஸ்.பி. பாலசுப்பிரமணியம்நினைத்துப் பார்க்கவில்லை.தெலுங்கு சங்கம் ஒன்று நடத்தியபாட்டுப்போட்டியில்தொடர்ந்துமுதல் பரிசு பெற்றார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.மூன்றாதுமுறையும்முதல்பரிசுபெற்றால்மிகப்பெரியவெற்றிக்கோப்பைஅவருக்குகிடைக்கும்.எஸ்.பி.யின்குரல்இசையைக்கேட்டுமயக்கியரசிகர்கள் அந்தவெற்றிக்கோப்பைஅவருக்குத்தான்கிடைக்கும்என்றுஅடித்துக்கூறினார்கள்.ஆனால்விழாவைநடத்தியவர்களின்எண்ண‌ம்வேறுவிதமாகஇருந்தது.வெற்றிக்கோப்பையைஇழக்கவிழாநிர்வாகிகள்விரும்பவில்லை.ஆகையினால்அந்தவருடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குஇரண்டாமிடம்வழங்கப்பட்டது.அன்றுஅப்பாட்டுப்போட்டிக்குத்தலைமைதாங்கியவர்பிரபலபின்னணிப்பாடகிஎஸ்ஜானகி. ""இன்று இரண்டாவதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இளைஞர் மிகச் சிறப்பாகப் பாடினார். முதல் பரிசு அவருக்குத்தான்சேர வேண்டும்'' என்றார்.எஸ். ஜானகியின் கருத்தை மீறவிழாஏற்பாட்டுக்குழுவினரால்முடியவில்லை.வேண்டாவெறுப்பாகஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குமுதல்பரிசுஎனஅறிவித்துவெற்றிக்கோப்பையையும்பரிசளித்தார்கள்.அன்றுநடைபெறஇத சதி, ஜானகியின்முயற்சியினால் தவிடு பொடியானது.எதிர்காலத்திலேஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்தன்னுடன்இணைந்துசினிமாபாடல்களைப்பாடுவார்என்றுஎஸ்.ஜானகிநினைத்திருக்கமாட்டார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்பாட்டைக்கேட்டதெலுங்குஇசையமைப்பாளர்எஸ்.பி.கோதண்டபாணி,சினிமாவில்பாடும்படிஅவருக்குஆலோசனைகூறினார்.படஅதிபர்கள்பலரிடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசையமைப்பாளர் கோதண்டபாணி ழைத்துச்சென்றார்.எஸ்.பி.யின்குரலைஅனைவரும்ரசித்தனரேதவிரஅவருக்குவாய்ப்புக்கொடுக்கயாரும்முன்வரவில்லை1966 ஆம் ஆண்டுஸ்ரீஸ்ரீஸ்ரீமரயாதாராமண்ணாஎன்றதெலுங்குப்படத்துக்குஇசையமைத்தபோதுஎஸ்.பி.க்குசந்தர்ப்பம்கொடுத்தார்.சென்னையில்எஸ்.பி.படித்துக்கொண்டிருக்கும்போதுதியாகராஜர்கல்லூரியலமெல்லிசைப்போட்டிநடைபெற்றது.எஸ்.பி.அப்போட்டியில்கலந்துகொண்டார்.விளம்பரடிசைனர்பாணியின்அறிமுகம்எஸ்.பி.க்குபதியதொருபாதையைத்திறந்துவிட்டது.இருவரும்அன்றுமுதல்ந‌ண்பர்களானார்கள்.பரணியின் மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் எஸ்.பி. க்குக் கிடைத்தது.

ரமணி
மித்திரன்
08/10/2006
89


எதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றதனால் ஜெயலலிதாவின் பார்வை இந்திய நாடாளுமன்றம்நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியப் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு என்று சோ போன்ற அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருவதனால் இந்தியப் பிரதமர் ஆகும் ஆசை ஜெயலலிதாவின் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாரதீய ஜனதாக் கட்சியும் பெருமைப்படக் கூடிய வகையில் வெற்றிபெறவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டõல் அதில் ஜெயலலிதாவும் பிரதான பங்காளியாக இருப்பார். சுழற்சி முறையில் பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைக்கலாம். சுழற்சி முறையிலான பிரதமர் பதவியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தேர்தலின் பின்னரே தெரியவரும்.
தமிழக எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதிக தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணத்தை இழந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைகோவும் டாக்டர் ராமதாஸும் செல்வாக்கிழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் கண்டு தமிழகத்தின் பிரதான கட்சிகள் பயந்த காலம் மலையேறிவிட்டது. தனித்து நின்றால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை வைகோவும் டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளார்கள். எதிர்காலத்தில புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதற்கு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவு காரணமாக அமையும் என்பது வெளிப்படையானது.
வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆகையினால், அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கைகோர்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரின் உதவி இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தமிழக ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டே ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா மத்திய அரசில் புகுந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளõர். ஆகையினால் வைகோவையும் ராமதாஸையும் ஆதரிப்பøதத் தவிர, வேறு வழி கருணாநிதிக்கு இல்லை.
கூட இருந்@த விஜயகாந்துக்கு குழிபறித்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட அவலம் @பாதும் ஜெயலலிதாவுடன் இனியும் கூட்டணி தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஜயகாந்த். ஆகையினால், விஜயகாந்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏனைய கட்சித் தலைவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்குத்தான் அச்சுறுத்தலாக இருந்தது. தனது இராஜதந்திரத்தின் மூலம் அந்த அச்சுறுத்தலினால் தவிடு பொடியாக்கி விட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இடதுசாரிகளைக் கைவிட்டு விட்டனர். இடதுசாரிகள் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கில்லாத இடது சாரிகளால் எதுவித மதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவர்களைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.
உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை மன்னித்த ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. தமிழக முதல்வரை நம்பி தன் புருஷனை கைவிட்டுள்ள சசிகலா கணவன் சிறையிலே வாடிக் கொண்டிருக்க ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சசிகலா. சசிகலாவின் தன்னிலை விளக்க மன்னிப்பு அறிக்கையில் மனமிரங்கிய ஜெயலலிதா அவரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், பழைய அதிகாரங்களும் செல்வாக்கும் சசிகலாவுக்கு இருக்குமா என்பதுசந்தேகமே.
ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் சசிகலாவும் ஒருவர் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் ஜெயலலிதாவும் சசிகலாவும் என்@ற தமிழகத்தில் பலர் பதிலளிப்பார். ஆகையால், இவர்களின் பிரிவு நிரந்தரமானதல்ல விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். அது போன்றே ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் பிரிவும் இணைவும் கட்சிக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சசிகலாவை விரும்பாதவர்கள் அவரை அனுசரித்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா


சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/04/12

Saturday, April 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 28


உடல் வலிமைக்கும் தாம்பத்திய உறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்ற உண்மையைப் புரிய வைக்கும் கதை அம்சத்துடன் 1982ஆம் ஆண்டு வெளியான படம் வாலிபமே வாவா. தலைப்பிலேயே கிளுகிளுப்பை உண்டாக்கிய இப்படத்துக்கு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மண் வாசனைப் படங்களின் மூலம் இனிய தமிழ் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் விரும்பாததனால் படுதோல்வி அடைந்தது.
கார்த்திக்கும் ராதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இளம் காதலர்கள் அனுபவிக்கும் சகல சந்தோசங்களையும் கார்த்திக்கும் ராதாவும் அனுபவிக்கின்றனர். திருமணக் கனவில் இருவரும் திளைத்திருக்கும் போது ராதாவைவிட்டு கார்த்திக் மெதுவாகப் பிரியத் தொடங்குகிறார். கார்த்திக்கின் நடவடிக்கையில் மாறுதலைக் கண்ட ராதா கவலைப்படுகிறாள். கார்த்திக்கின் அன்பை மீண்டும் பெறுவதற்கு அவள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கார்த்திக் தன்னை வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள் ராதா. உண்மையை அறிந்த ராதா அதிர்ச்சியடைகிறாள்.
கார்த்திக்கின் நண்பன் ஒருவர் ஆஜானுபான உருவம் உடையவர். அவருக்குத் திருமணம் நடைபெறுகிறது. தாம்பத்திய வாழ்வில் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது தவிக்கிறான் கார்த்திக்கின் நண்பன். தன்னைவிடவலிமை உள்ளவனால்மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் மெலிந்த உருவம் உள்ளதனால் தனது மனைவியை எப்படித் திருப்திப்படுத்த முடியும் என்ற கவலையில்தான் கார்த்திக் தன்னை விட்டுப் பிரிந்த உண்மையை ராதா அறிகிறார்.
தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை என்று ராதா விளக்குகிறார். கார்த்திக் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல் வலிமை இல்லாதவனால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது என்று அடித்துக் கூறுகிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் மனதில் உண்டான உளவியல் ரீதியான அச்சத்தைத் தன்னால் மட்டும் தான் இல்லாமல் செய்ய முடியும் என்பதை உணர்க்கிறாள் ராதா. கார்த்திக்கின் அச்சத்தைப் போக்குவதற்காக தன்னை இழக்கிறாள். தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை. உள்ளத்தில் தான் என்பதைக் கார்த்திக் உணர்கிறார்.
பாரதிராஜாவின் கண்டு பிடிப்பான கார்த்திக்கும் ராதாவும் இளமை தவழக் காட்சிகளில் சிறப்பாக நடித்தனர். அண்மையில் காலமான ஜாம்பவான் கலைமணி கருத்தான வசனங்களை எழுதினார். இளைய ராஜாவின் இசை படத்துக்கு வலுச் சேர்த்தது.
ரமணி


மித்திரன்15/04//12

Tuesday, April 10, 2012

திரைக்குவராதசங்கதி 29


திரைப்படங்களைத்தயாரிப்பதில்ம‌ட்டுமல்ல,அவ‌ற்றுக்குப்பெயர்பதிலும்ஏ.வி.எம். நிறுவனம் பல புரட்சிகளைச் செய்துள்ளது.தமிழ்த் திரை உலகின்உயர்ந்த இடத்தில் இருப்பவர்நடிகர் திலகம். ஏ.வி.எம்.தயாரித்து, நடிகர் திலகம் நடித்த படத்தின்பெயர்உயர்ந்தமனிதன்.தமிழ்த்திரைஉலகின்உயர்ந்தமனிதன்நடிகர்லகம்தான்என்பதைசொல்லாமல்சொல்லியுள்ளது
அப்படம்.ஏ.வி.எம். மின் இன்னொரு படம் சகல கலாவல்லவன். இது படத்தின் கதைக்கானதலைப்பு அல்ல.கமலை மனதில் வைத்துஇப்பெயர் சூட்டப்பட்டது. அதுபோல் இன்றும் சகல கலாவல்லவனாகத் திகழ்கின்றார்கமல்.மனிதநேயம் மிக்க ரஜினியை மனதில்வைத்து மனிதன் என்று தலைப்பிட்டார்கள்மனிதன் என்ற ஒரு படம் வெளியாகி1953ஆம்வெளியாகி படுதோல்வியடைந்தது. இந்த மனிதனும் அப்படித் தோல்வியடையும். ஆகையால் பெயரைமாற்றும்படி ஒரு சிலர்அறிவுறுத்தினார்கள்.ஆனால்ரஜினியின்மனிதத்தன்மையைவெளிஉலகுக்குக் காட்டவேண்டும்என்பதில்பிடிவாதமாகஇருந்தஏ.வி.எம்.மனிதன்என்றுபடத்துக்கு பெயரிட்டது.உயர்ந்தமனிதன்,சகலகலாவல்லவன்,மனிதன்ஆகியமூன்றுபடங்களும் வெற்றிப் படங்கள்.அவை வெளியான காலங்களில் அவை வசூலிலும்சாதனை
செய்தன..

உத்தர புருஷ் என்ற வங்க மொழிப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவுசெய்தது
ஏ.வி.எம். அப்படத்தின் உரிமையை வாங்கிஜாவார்சீதாராமன்மூலம்திரைக்கதை
அமைத்து யாரை நடிக்க வைக்கலாம் என்றுவிவாதித்தார்கள்.ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் மகனானசரவணன் நடிகர் திலகத்தை நடிக்க வைத்தால்நன்றாக இருக்கும் என்றார். மறு பேச்சின்றி அவரதுதகப்பன்ஒப்புதல்அளித்தார்.ஏ.வி.எம். முக்கும் சிவாஜி கணேசனுக்கும்சிறிது மனக் கசப்பு இருந்தது. அதைஎல்லாம் மனதில் வைக்காமல் சரவணன்,குமரன், முருகன் ஆகிய மூவரும் நடிகர் தில
கத்தின் அன்னை இல்லத்துக்குச் சென்றனர்.உத்தர் புருஷ் படத்தைப் பார்த்த நடிகர் திலகம் இப்படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்குஎனக்குவிருப்பமில்லை. டாக்டர்வேடத்தில் நடிக்கிறேன். சின்ன வேடம்தான்.கெஸ்ட்டாக நடிக்கிறேன் என்றார்.சரவணன் விடவில்லை. நீங்கள் தான் கதாநாயகனாகநடிக்கவேண்டும் என வற்புறுத்தினார். வேண்டா வெறுப்பாகத்தான் அதில்நடித்தார்நடிகர்திலகம். உயர்ந்த மனிதன்வெள்ளி விழா கொண்டாடியது. நடிகர் திலகத்தின் நடிப்பு ரசிகர்களினால் வியந்துபோற்றப்பட்டது.



சுட்டாலுஉன்னாருஜாக்கிரதாஎன்றதெலுங்குப்படத்தின்உரிமையைவாங்கியஏ.வி.எம்அப்படத்தில் ரஜினியைநடிக்கவைக்கவிரும்பியது.இதுபற்றிரஜினியுடன்கதைத்தபோதுயையோ அந்தப்படத்தைநான்ஏற்கனவேபார்த்துட்டேன்அதுஎனக்குச்சரிப்பட்டுவராது.நீங்கள்கமலைவைத்துஎடுங்கள்என்றார்.சரவணன்விடவில்லைநீங்கள்தான்நடிக்கவேண்டும்எனவற்புறுத்தினார்.அப்படத்தைவிசுவுக்குப்போட்டுக் காட்டிஅதில்உள்ளநல்ல,யஅம்சங்களைஆராய்ந்தார்கள்.விசுவின்ஆலோசனைப்படி கதையில்மாற்றம் செய்யப்பட்டது.அப்படம்தான் ""போக்கிரிராஜா''என்றபெயரில் வெளியாகி 100 நாள் ஓடியது. ப்படத்தில்நவரசத்திலகம்முத்துராமன்வில்லனாக நடித்தார். படப்பிடிபின் இடையில்அவர் மரணமானார்.இராம ரங்கண்ணரோடும் இன்னும் இருவருடனும் இணைந்து ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்தயாரித்த படம் பச்சைவிளக்கு. புகை வண்டி சாரதியாக சிவாஜியும் அவரது நண்பராக நாகேஷும் என்றஅடிப்படையில் ஒரு கதையை உருவாக்கிபடப் பிடிப்பை நடத்தினார்கள். படம்பாதிமுடிந்துவிட்டதுஆனால்அதற்குபெயர்வைக்கவில்லை.
சரவணன் ஸ்டூடி÷யாவுக்குச் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் ருந்தது. அதன்அருகே மூன்று கட்அவுட்களை வாடகைக்குவாங்கி ""சிவாஜி நடிக்கும் எனஎழுதிபச்சைவிளக்குபடம்வரைந்துஅதன்கீழேவருகிறதுஎனவிளம்பரப்படுத்தினார்.
ஏ.வி.எம். தயாரிக்கும் படம். சிவாஜி நடிக்கும் படம். றெயின் சம்பந்தப்பட்ட படம்என்று பலரும் பேசிக் கொண்டார்கள். படத்தின்பெயர் என்ன என்ற விவாதம் வந்தபோது பல பெயர்களைக் கூறினார்கள்பச்சை விளக்கைப் போட்டு வருகிறது எனவிளம்பரப்படுத்தியுள்ளீர்களே பச்சை விளக்கு தான் படத்தின் பெயர் என்று இயக்குனர்பீம் சிங்கும் வேறு சிலரும் கூறினார்கள். மக்களின் விருப்பப்படியே அப்படத்துக்குபச்சை விளக்கு எனப் பெயர் வைக்கப்பட்டது.பாதிப் படம் முடிந்த நிலையில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் படத்தைப் பார்த்தார்.அவருக்கு பிடிக்கவில்லை. வேறு கதைதயார்படுத்தும்படி கூறினார். அதன் பின்னர்தான் ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா ஆகியோரின் பாத்திரங்கள் சேர்க்கப்பட்டன.
ரமணி
மித்திரன்
08/10/2006
88



Sunday, April 8, 2012

திரைக்குவராதசங்கதி 28


சத்யா ஸ்ரூடியோவில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரின் "மீனவ நண்பன்' படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்புநடைபெற்றுகொண்டிருந்ததுகவிஞர்முத்துலிங்கம்மக்கள்திலகத்தைசந்திப்பதற்காக சத்யா ஸ்ரூடியோவுக்குச்சென்றார். முத்துலிங்கத்தைக் கண்ட எம்ஜி.ஆர். அவரை அன்புடன் வரவேற்று ""இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எதுஎன்றுகேட்டார்.""நான்எழுதவில்லை'என்று ஒரு வரியில்பதிலளித்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியாக இருந்தது"ஏன் எழுதவில்லை' என்று எம்.ஜி.ஆர்கேட்ட போது"என்னையாரும்கேட்கவில்லலைஎன்றார்முத்துலிங்கம்.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் எல்லாம் மிகப் பிரபல்யமான வேளையில் தனதுபடத்தில்அவரைபாட்டெழுதயாரும்கேட்கவில்லைஎன்பதைஅறிந்தஎம்.ஜிஆருக்குகோபம்அதிகமாகியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்ற புரொடக்ஷன் மனேஜரைக் கூப்பிட்டு ""முத்துலிங்கத்தை வைத்துபாட்டு எழுத சொன்னேன். ஏன்அவரைக்கேட்கவில்லைஎன்றுகோபத்துடன்கேட்டார்.""நாங்கள் தேடும் போது அவர் இல்லை''என்று புரொடக்ஷன் மனேஜர் கூறினார்""இப்போது வந்து விட்டாரே. இவரைவைத்து ஒரு பாடலை எழுதுங்கள்'' என்றுசற்றும்தாமதியாதுகூறினார்எம்.ஜி.ஆர்.
"மீனவ நண்பன்' படத்துக்குத் தேவையானபாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பாடலைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. புதிதாகப்பாடலை சேர்க்க முடியாது என்று புரொடக்ஷன்மனேஜர் கூறினார்எம்.ஜி.ஆர். சமாதானமடையவில்லைதயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும்,இயக்குனர் ஸ்ரீதரையும் அழைத்து வரும்படிகூறினார். அவர்களிடம் கவிஞர் முத்துலிங்கத்தைக் காட்டி இவரது பாடல் ஒன்றைப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை
நெருங்கி விட்டது. தவிர பாடல் ஒன்றைஇணைக்கக் கூடிய சிற்றுவேசன் இல்லைஎன்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினார்கள்.கதைக் காட்சிக்கு சிற்றுவேசன் தேவையில்லை. இவருடைய பாடலை ஒலிப்பதிவுசெய்த பின்னர் கூறுங்கள் அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று எம்.ஜி.ஆர்.கண்டிப்பாகக் கூறி விட்டார் . எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் செய்வதறியாது திகைத்து நின்றார் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜிஆரின்கோபத்தால்உருவானபாடல்மிகப்பிரபலமானது"தங்கத்தில்முகமெடுத்துசந்தனத்தில் உடலெடுத்துமங்கையென்று வந்திருக்கும் மலரோ நீமாலை நேரம் பொன் மஞ்சள் நிலவோ'என்ற அப்பாடல் இன்று கேட்கும் போதும்இனிமையாக உள்ளது
.பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில்ஒன்று "கிழக்கே போகும் ரயில்' அப்படத்தில்இடம்பெறும் மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ, வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ' என்ற பாடலை ஒன்றரைமணி நேரத்தில் எழுதினார். அந்தப் பாட்டுக்காக1978 / 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைமிழகஅரசுஇவருக்குவழங்கியது"வயசுப்பொண்ணுஎன்றபடத்துக்கு பாடல்எழுத சந்தர்ப்பம் கிடைத்த போது,"காஞ்சிப்பட்டுடுத்தி' என்று ஆரம்பிக்கும்படி இயக்குனர் கே. சங்கர் அடியெடுத்துக்கொடுத்தார். இயக்குனர் சங்கரின் விருப்பப்படி"காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டுவைத்துதேவதைபோல்நீநடந்துவரவேண்டும்அந்ததிருமகளும்உன்அழகைப்பெறவேண்டும்'என்றபாடலைஇரண்டுமணித்தியாலயத்தில்எழுதினார்மெல்லிசைமன்னர்எம்.எஸ்விஸ்வநாதன்அப்பாடலுக்குமுக்கால்மணிநேரத்தில்இசையமைத்தார்பாடலின்இசைஎல்லோருக்கும்பிடித்துவிட்டதுஅப்படத்துக்குப்பணஉதவிசெய்தஅடையப்பவள்ளலுக்குபிடிக்கவில்லை.பாட்டில்வேகம்இல்லை. பாட்டை மாற்றுங்கள் எனக் கூறினார். மெல்லிசை மன்னர் விடாப் பிடியாகநின்றுபடத்தில்அப்பாடலைஇடம்பெறச்செய்தார்படம்படுதோல்வியடைந்தது. பாடல்பெரு பெற்றி பெற்றது. தவிர அந்தஆண்டும் தமிழக அரசு கவிஞர் முத்துலிங்கத்தை சிறந்த பாடலாசிரியர் எனத் தெரிவுசெய்து விருதுவழங்கியதுதமிழ்ரசிகர்களால்மறக்கப்பட்டபடம்"எங்கஊருராசாத்தி' அப்படத்தில்கவிஞர்முத்துலிங்கம்எழுதிய"பொன்மானைத்தேடிநானும்பூவோடுவந்தேன்நான்வந்தவேளைஅந்தமானங்குஇல்லை'என்றபாடல்சோகத்தின்ஒவொருகணத்தையும்வெளிப்படுத்துகிறது
எம்.ஜி.ஆர்.சிவாஜிபடங்களில்மட்டுமல்லகமல்,ரஜினிபடங்களிலும்கவிஞர்முத்துலிங்கத்தின்பாடல்கள்இடம்பெற்றுபெரும்புகழடைந்தனகமல்முதன்முதலாககதாநாயகனாகநடித்த"உணர்ச்சிகள்' என்றபடத்திலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றன'காக்கிச் சட்டையில்' பட்டுக் கன்னம்தொட்டுக் கொள்ள, 'காதல் பரிசில்' காதல்மகராணி கவிதை பூ விரித்தாள்"இராணுவ வீரன்'"மூன்று முகம்',"தங்கமகன்',"நல்லவனுக்குநல்லவன்'"நாட்டுக்குஒருநல்லவன்ஆகியபடங்களில்இவரின்பாடல்கள்இடம்பெற்றனதங்கமகன்படத்தில்இடம்பெற்றவாவாபக்கம்வாஎன்றபாடல்பெரும்வரவேற்பைப்பெற்றபாடல்கே.விமகாதேவன்எம்.எஸ்விஸ்வநாதன்எம்.எஸ்சுப்பையாநாயுடுடி.ஆர்.பாப்பா,சங்கர்கணேஷ்,இளையராஜாகங்கைஅமரன்தேவா,லட்சுமிகாந்தபியாரிலால்,மனோஜ்கியான்மரகதமணி, ஷயாம்போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இவரின் பாடல்களுக்குஇசையமைத்துள்ளனர்ஒரு இடத்தில்இருந்துகொண்டுபாடல்எழுதஇவருக்குசிந்தனைவராது. நடந்துகொண்டே சிந்திப்பார். 1100 பாடல்களுக்குமேல் எழுதியுள்ள இவர் அதிகமானபாடல்களைநடந்துகொண்டேசிந்திக்கிறார்நடந்துகொண்டும்சுருட்டுப்புகைத்துக்கொண்டும்இருந்தால்இவரது சிந்தனைவெள்ளோட்டமாக வெளிவரும்.மொழிமாற்றுப் படங்கள் பலவற்றுக்கும் இவர் பாடல்கள்எழுதியுள்ளார். உதட்டசைவைவைத்துக் கொண்டு அதற்குரிய சொற்களைத்தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது இலகுவானதல்லபுகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது கவியரசு கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா யார் எழுதிய பாடல்என்ற கேள்விஎழும்ஆனால் அப்பாடல்முத்துலிங்கம் என்ற கவிஞர் எழுதியது என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோமணி ஓசை கேட்டு எழுந்து, சங்கீத மேகம்தேன் சிந்தும் நேரம், கூட்டத்திலே கோயில்புறா, ராகவனே ரமணா ரகு நாதா, சின்னச்சின்ன ரோஜாப் பூவே, சின்னஞ்சிறு கிளியேசித்திரப் பூவிழியே, ஆறும் அது ஆழமில்லை, டாடி டாடி ஓமை டாடி, இதழில்கதை எழுதும் நேரமிது போன்ற ஹிட்டானபாடல்கள் கவிஞர் முத்து லிங்கத்தின் புகழைச்சொல்லும் ஆவணங்களாக உள்ளன.


ரமணிமித்திரன்27/09/2006
87