Monday, March 16, 2015

உலகக்கோப்பையில் சதமழை

உலக கோப்பையில் சதம் விளாச வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப் பெரிய லட்சியக் கனவாகவே இருக்கும். மிக அரிதான சாதனையாக கருதப்பட்ட அந்த விஷயம் நடப்பு உலக கோப்பையில் சர்வ சாதாரணமாகி விட்டது. லீக் சுற்றில் நடந்த 42 ஆட்டங்களில் 35 சதம் விளாசப்பட்டுள்ளது. 1975ல் நடந்த முதல் உலக கோப்பையில் மொத்தம் 6 சதம் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சங்கக்கரா தொடர்ச்சியாக 4 சதம் விளாசி உலக கோப்பையில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஈடு இணையற்ற சாதனையை படைத்துள்ளார்.

தில்ஷன் (இலங்கை), தவான் (இந்தியா), பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), மகமதுல்லா (வங்கதேசம்) ஆகியோர் தலா 2 சதம் விளாசி உள்ளனர். 35 சதத்தில் இலங்கை 8, தென் ஆப்ரிக்கா 5, இந்தியா 4, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா கணக்கில் தலா 3 சதம். வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வேக்கு தலா 2. நியூசிலாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து சார்பில் தலா ஒரு சதம் விளாசப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 2வது உலக கோப்பையில் (இங்கிலாந்து, 1979) அடிக்கப்பட்டது 2 சதம் மட்டுமே. அதன் பிறகு 1983ல் 8 சதம், 1987ல் 11 என்று ஏறுமுகமாக இருந்தது 1992ல் 8ஆக சரிந்தது. 2003ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்திய தொடரில் 21 ஆக உயர்ந்த சத எண்ணிக்கை, 2007ல் (வெஸ்ட் இண்டீஸ்) 20 ஆனது. இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்திய கடந்த உலக கோப்பையில் 24 சதம் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் சுற்றில் மட்டுமே 35 சதமாக எகிறியிருக்கிறது. 

Sunday, March 8, 2015

கால் இறுதிக்கு கடும் போட்டி

  
உலகக்கிண்ண கிரிக்கெற்போட்டியின் கால் இறுதியில் விளையாடும் வாய்ப்பை நியூஸிலாந்தும் இந்தியாவும் உறுதிப்படுத்தி உள்ளன. அவுஸ்திரேலியாவும் தென். ஆபிரிக்காவும்  தமது பிரிவில் இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ள‌ன. மூன்றாவது    நான்காவது இடங்களுக்கான போட்டி மிககடுமையாக உ ள்ளது. இங்கிலாந்தைப்பின்னுக்குத்தள்ளி பங்களாதேஷும், மேற்கு இந்தியத்தீவுகளை விரட்டிவிட்டு அயர்லாந்தும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.  அயர்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் மீளமுடியாத நிலையில் உள்ளது.

பங்களாதேஸும் இங்கிலாந்தும் தலா நான்கு போட்டிகளில் விளையாடின.  ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து ஆகியவற்றை  வென்று  இலங்கையிடம் தோல்வியடைந்தது பங்களாதேஸ் புயல் காரணமாக அவுஸ்திரேலியாவுடனான போட்டி கைவிடப்பட்டதால் ஒருபுள்ளி கிடைத்தது. ஐந்து புள்ளிகளுடன்  நான்காவது இடத்தில் உள்ளது 

 நியூஸிலாந்து அவுஸ்திரேலியா,இலங்கை ஆகியவற்ரிடம் தோல்வியடைந்து   ஸ்கொட்லாந்தை மட்டும் வென்று இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து.  பலமான நாடுகளீடம் தோல்வியடைந்து பலம் குறைந்த நாட்டை மட்டும் வென்றுள்ளது இங்கிலாந்து.

 பங்களாட்தேஷ் இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே   இன்று நடைபெறும் போடியில் வெற்றிபெறும் நாடு கால் இறுதியில் விளையாடும் வாய்ப்பைப்பெறும். பங்களாதேஸ் வெற்றி பெற்றால் ஏழு புள்ளிகளுடன் முன்னேறிவிடும்.   அடுத்து நியூஸிலாந்துடனான போட்டி தோல்வியடைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெற் றி பெற்றால் கால் இறுதியில் விளையாடும் வாய்பபைப்பெறும். ஆப்கானிஸ்தானுடனான அடுத்தபோட்டியில் இலகுவாக வெற்ரிபெற்று ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறிவிடும்.

பாகிஸ்தான்,அயர்லாந்து ஆகியன தலா ஆறு புள்ளிகளுடனுன் முறையே மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளன. நான்கு புள்ளிகளுடன் மேற்று இந்தியத்தீவுகள் ஐந்தாவது இடத்திலுள்ளது.   நாளைமறுநாள் செவ்வாய்க்கிழமை இந்தியா அயர்லாந்து ஆகியன மோத உள்ளன. அயர்லாந்து வெற்றிபெற்றால் கால் இறுதி நம்பிக்கை பிரகாசமாக இருக்கும். இந்தப்போட்டியில் அயர்லாந்து தோல்வியடைந்தாலும15 ஆம்திகதி பாகிஸ்தானுடனான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேன்டும் பாகிஸ்தான் அயர்லாந்து ஆகிய  இரண்டு நாடுகளுக்கும் இறுதிச்சந்தர்ப்பம் தோல்வியடைந்தால் வெளியேற வேண்டி இருக்கும்.   இரண்டு நாடுகளுக்கும் இதுவே இறுதிச்சந்தர்ப்பம்.

நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் உள்ளது. அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சந்திக்கிறது. வெற்றி நிச்சயம்  என்றாலும் பாகிஸ்தான் அயர்லாந்து ஆகியவற்றின் தோல்வியை எதிர்பார்க்கிறது.

Friday, March 6, 2015

தடை தாண்டுமா பாகிஸ்தான்?

தென்.ஆபிரிக்கா
தென்.ஆபிரிக்காவுடன் நாளை மோத உள்ள பாகிஸ்தான் மிகப்பெரிய தடையைத்தாணட வேண்டிய நிலை உள்ளது.தென்.ஆபிரிக்கா வெற்றிபெற்றால் கால் இறுதியில் விளையாடுவது உறுதியாகி விடும் இந்தியா கால் இறுதிக்கு  தகுதிபெற்றுவிட்டது. பாகிஸ்தான் வெற்றிபெற்றால் கால் இறுதி வாய்ப்பு பிரகாசமாகும். 


சிம்பாப்வே,மேற்கு,இந்தியத்தீவுகள் .அயர்லாந்து ஆகியவற்றை வீழ்த்திய தென்.ஆபிரிக்கா இந்தியாவிடம் தோல்வியடைந்தது.இந்தியாவிடமும் மேற்கு.இந்தியத்தீவுகளிடமும் தோல்வியடைந்த பாகிஸ்தான்சிம்பாவ்வே,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை வெற்றி கொண்டு நம்பிக்கையுடன் இருக்கிறது.    

 இந்தியாவுக்கு  எதிரான போட்டியில்  தென் ஆபிரிக்காஅனைத்து விக்கெற்களையும் இழந்தது.மேற்கு இந்தியத்தீவுகள்,சிம்பாப்வே,அயர்லாந்து ஆகியவற்றின் அனைத்து விக்கெற்களையும் வீழ்த்தியது, இந்தியா,மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியவற்றுடனான போட்டியில் அனைத்து விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் ஐக்க்கிய அரபு இராச்சியத்தின் அனைத்து விக்கெற்களையும் வீழ்த்தியது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் மேற்கு இந்தியத்தீவுகளும் 300 ஓட்டங்கள் அடித்தன. பகிஸ்தான் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு எதிராக 339 ஓட்டங்கள் அடித்தது. தென்,ஆபிரிக்காவுக்கு எதிராக  இந்தியா  300 ஓட்டங்கள் அடித்தது மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக 417 ஓட்டங்கள் அடித்து சாதனை செய்தது. 

மில்லர்,டுமினி,அம்லா ,டுபிளசி டிவில்லியஸ் ஆகியோர் சதமடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் அஹமட் சிஷாட் அதிக பட்சமாக  93 ஓட்டங்கள் அடித்தார். தன் ஆபிரிக்கா அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சந்திக்கிறது. தை மிக எளிதாக வென்று விடும். பாகிஸ்தான் அடுத்த போட்டியில்  அயர்லாந்தை எதிர்நோக்குகிறது. கால் இறுதிக்கு தெரிவாகும் கடுமையான போட்டியாக இது இருக்கும்

Wednesday, March 4, 2015

துடுப்பாட்டமா?பந்து வீச்சா?

 இந்தியா
இந்தியா, மேற்கு. இந்தியத்தீவுகள் ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் போட்டி துடுப்பாட்டத்துக்கும் பந்து வீச்சுக்கும் இடையேயான போட்டியாக  இருக்கும் 

ரோஹித் சர்மா, தவான் கோஹ்லி ரெய்னா, ரஹானே,டோனி,ஜடேஜா என இந்திய துடுபாட்ட வரிசை மிக பலமாக உள்ளது. சிமித்,கைல்ஸ்,பிராவோ,சாமுவல்,ரம்டின்சிமன்ஸ் என் மேற்கு. இந்திய துடுப்பாட்ட வரிசையும் சளைத்தது அல்ல.
பலவீனமான பந்துவீச்சாளர்கள் என விமர்சிக்கப்பட்ட இந்திய வீரர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.அஸ்வின் 8, ஷமி 4, மோகித்சர்மா 5, உமேஷ்யாதவ் 4 விக்கெற்களை வீழ்த்தி தமது திறமையை நிரூபித்துள்ளனர். இந்திய வீரர்களின் களத்தடுப்பும் அபரிமிதமாக உள்ளது.

பாகிஸ்தான் தென்.ஆபிரிக்கா,ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் ஆகியவற்றி வெற்றி கொண்டு முதல் இடத்தில் உள்ளது இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக  300 ஓட்டங்களும் தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக 307 ஓட்டங்களும் அடித்து வெற்றிபெற்றது இந்தியா. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி  102 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா வெற்றிபெற்ற மூன்று போட்டிகளிலும் எதிரணியின் சகல விக்கெற்களையும் வீழ்த்தியது.இந்தியா சகல விக்கெற்களையும் இழக்கவில்லை.

மேற்கு இந்தியதீவுகள் 
யர்லாந்துடனான முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த மேற்கு.இந்தியத்தீவுகள் பாகிஸ்தானையும் சிம்பாப்வேயையும் வீழ்த்து உற்சாகமடைந்தது.தென். ஆபிரிக்காவுடனான தோல்வியால்  துவண்டது.

அயர்லாந்துக்கு எதிராக 304 ஓட்டங்கள் அடித்து மகிழ்ச்சியிலிருந்தபோது அயர்லாந்து 307 ஓட்டங்கள் அடித்து  அதிர்ச்சையளித்தது.பாகிஸ்தானுக்கு எதிராக 310, சிம்பாப்வேக்கு எதிராக 372 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் 300 ஓட்டங்க அடித்து மிரட்டிய மேற்கு. இந்தியத்தீவுகளிக்கு எதிராக தென்.ஆபிரிக்கா  408 ஓட்டங்கள் அடித்துமிரட்டியது.பாகிஸ்தான், சிம்பாப்வேஆகியவற்றின் சகல விக்கெற்களையும் மேற்கு இந்தியதீவுகள் வீழ்த்தியது. தென். ஆபிரிக்காவிடம் சகல விக்கெற்களையும் இழந்தது.அயர்லாந்தின் ஆறு விக்கெற்களை மட்டும்வீழ்த்தியது.

கிரிஸ் கைல்ஸ் இரட்டைச்சதமும்சாமுவல்,சிமன்ஸ் ஆகியோர் சதமும் அடித்தனர். மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக இரண்டு வீரர்கள் சத்ம், அடித்தனர்.கோஹ்லி,தவான் ஆகிய இந்திய வீரர்கள் சதம் அடித்தனர். இந்தியாவுக்கு எதிராக யாரும் சதம் அடிக்கவில்லை

வெற்றிக்கான விளையாட்டு

 பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து ஆகியவற்றுக் கிடையே நாளை நடைபெறும் போட்டி  பங்களாதேஷுக்கு மிக முக்கியமானதாகும்.ஆப்கானிஸ்தானை வென்று இலங்கையிடம் தோல்வியடைந்தது. வர்ணபகவானின் அருளினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. மூன்று  புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பங்களாதேஷைப்போன்றே மூன்று புள்ளிகளைப்  பெற்ற அவுஸ்திரேலியா நான்காம் இடத்தில் உள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்கள் பெற்றால் மூன்றாவது இடத்திலேயேஇருக்கலாம். அடுத்த  போட்டிகள் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் எதிரானவை இவை எமகண்டமாகவே இருக்கும். இன்றாலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிதான் பங்களாதேஷின் தலை விதியைத் தீர்மானிக்கும்.

நியூஸிலாந்து,இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிடம் தோல்வியடைந்த ஸ்கொட்லாந்து கடைநிலையில் உள்ளது.

Monday, March 2, 2015

தேவை ஒரு வெற்றி


பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கிடையே இன்று நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தானும்  அவுஸ்திரேலியாவும் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

பலம் குறைந்த நாடுகளாகக்கருதப்படும் அயர்லாந்து,சிம்பாப்வே ஆகியன பாகிஸ்தானுக்கு முன்னால் உள்ளன. நாளைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான். வெற்றி நிச்சயம் என்ற உறுதியில் பாகிஸ்தான் உள்ளது  அயர்லாந்தைச்சமாளீத்தாலும் தென்.ஆபிரிக்கா எமனாக நிற்கிறது.

ஆப்கானிஸ்தானை அவுஸ்திரேலியா அடித்து நொருக்கும். புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலுள்ள அவுஸ்திரேலியா  மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிடும் இலங்கையுடனான போட்டி சவாலானதாக இருக்கும்
  ஸ்கொட்லாந்தை இலகுவாக வென்று விடும்

சவாலே சமாளி



உலகக்கிண்ண கிரிக்கெற்றில் தொடர்ந்து அதிர்ச்சியைக்கொடுத்துவரும் அயர்லாந்தும் சிம்பாப்வேவும்நாளை சவாலை சந்திக்கப்போகின்றன.2007 ஆன் ஆண்டு பாகிஸ்தான். 2011 ஆம் ஆன்டு இங்கிலாந்து ஆகிஒயன அயர்லாந்தின்  அலையில் வீழ்ந்தன. 2015 ஆம் ஆண்டுமேற்கு இந்தியத்தீவுகள் சிக்கி சின்னாபின்னமாகியது.

அயர்லாந்து இரண்டு போட்டிகளிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. மேற்கு இந்தியத்தீவுகள் 304 ஓட்டங்கள் அடித்து வெற்றி என‌ இறுமாப்பில் இருந்தது. 307 ஓட்டங்கள் விரட்டி அடித்து வெற்றிபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 278ஓட்டங்கள் அடித்தபோதும் விரட்டி 279 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. கால் இறுதியில் கால் பதிக்கும் கனவில் உள்ளது அயர்லாந்து.

இந்தியாவிட‌ம் தோல்விய‌டைந்த‌பின்ன‌ர் எழுச்சி க‌ண்டு சிம்பாப்வேயையும் மேற்கு இந்திய‌த்தீவுக‌லையும் வீழ்த்தி த‌ன்து ப‌ல‌த்தை வெளிப்ப‌டுத்திய‌து தென்.ஆபிரிக்கா.மேறு .இந்திய‌த்தீவுக‌ளுக்கு எதிரான‌ போட்டி எதிர‌ணிக‌ளை க‌ல‌ங்க‌டித்த‌து. தென். ஆபிரிக்காவின் அதிர‌டியை ச‌மாளிக்கும்  அய‌ர்லாந்து.