Saturday, January 1, 2022

தலைமறைவான முன்னாள் அமைச்சர் சல்லடைபோட்டு தேடும் பொலிஸ்


 

திராவிட முன்னேற்றக் கழகத்துகு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆக்ரோஷமாக முழக்கமிட்டார். கடந்த 17 ஆம் திகதி தமிழகம் எங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகரில்  நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 17‍ம் திகதி தள்ளுபடி செய்தது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோதே முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவலை தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எந்த நேரத்திலும் கைது செய்யபடலாம  என வழக்கறிஞர்கள் எச்சரிக்க, ”சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் செய்யுங்கஎனச் சொல்லிவிட்டு விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டார்பொலிஸாரிடம் சிக்கிவிடக்கூடாது என முடிவெடுத்த ராஜேந்திர பாலாஜி, தான் வைத்திருந்த ஆண்டிராய்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்து அதை தனது உதவியாளர் ஒருவரிடம் கொடுத்து பேருந்தில் திருச்சிக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படும் கீ-போர்டு டைப் போன் ஒன்றில் புதிய சிம் கார்டு போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறார். தனது காரில் ஏறிய அவர், திருத்தங்கலில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லாமல், விருதுநகர் டு மதுரை சாலையில் சென்றிருக்கிறார்.

அன்று தலைமறைவான ராஜேந்திரபாலாஜியைக் கைதுசெய்வதற்காக ஏற்கெனவேஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேலும் இரண்டு  தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள். இக்கட்டுரை எழுதும் வரை அவர் கைது செய்யப்படவில்லை.

 எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜேந்திரபாலாஜி. எம்.ஜி.ஆரின் படங்கள் வெளியாகும்போது ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்வார். 


தனது செல்வாக்கு  உயரவேண்டும் என்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். டாஜேந்திரன் என்ற பெயரை எண்கணித முறைப்படி ராஜேந்திரபாலாஜி என மாற்றினார்.கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஜெயலலிதாவின்  பார்வையில் பட்டதால்  அமைச்சரானார். ஜெயலலிதாவின் கோபத்தால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ராஜேந்திரபாலாஜியின் வாய் எல்லை மீறியது. அதனால் பல பிரச்சினைகளைச்  சந்தித்தார்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வழக்கறிஞர் முத்துப்பாண்டி ஆகியோரிடம், அரசுத்துறை வேலை வாங்கித்தருவதற்காக, தான் பலரிடம் வசூலித்த ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல தவணைகளில் கொடுத்ததாகவும்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சாத்தூர் வந்தபோது நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும்   ரூ.1½ கோடி செலவு செய்ததாகவும், திருப்பித் தருவதாகச் சொன்ன அந்தப்  பணத்தையும் தராமல்,  மொத்தத்தில் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக, விஜய்நல்லதம்பி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவானது. விஜய்நல்லதம்பி மீதும் ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராஜேந்திரபாலாஜி தலைமறைவானதை அடுத்துஅவரின்  அக்கா மகன்களான ரமணா, வசந்தகுமார் மற்றும் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் காவல்நிலையம் அழைத்துச்சென்று, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையிலான தனிப்படை பொலிஸார் நள்ளிரவு கடந்தும் விசாரித்தனர்.

திருமணம் செய்யாத தனிக் கட்டையான பாலாஜி அடிக்கடி கோவில்களுக்குச் செல்வார். மஞ்சள் சட்டை அணிந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிப்பார்.அதேநேரத்தில், ராஜேந்திரபாலாஜியைமிஸ்டர் க்ளீன்என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், மந்திரி பதவியை வைத்து சொத்துகளைக் குவித்துவிட வேண்டுமென்று, மற்ற அமைச்சர்களைப் போல,  பணவெறி பிடித்துச் செயல்பட்டவர் அல்ல. மனைவி, மக்கள் என,  தனக்கென்று குடும்பம் இல்லாதவர் என்பதால், எந்த வழியில் பணம் வந்தாலும், அதனை கோவில் காரியங்களுக்கும், தன்னைத் தேடி வரும் எளிய மக்களுக்கும் வாரியிறைத்தார்

கலைஞர் குடும்பத்தினரை, குறிப்பாக இன்றைய முதலமைச்சர் மு..ஸ்டாலினை, தேர்தலுக்கு முன்பாக  அவர் மட்டமாக விமர்சித்தார். சொத்துகள் குவித்த அண்ணா திராவிட முன்னேற்றக் ழக அமைச்சர்களோடு ஒப்பிடும்போது, அளவில் ராஜேந்திரபாலாஜி வெறும் சுண்டைக்காய். ஆனாலும், கட்சியினரை திருப்திப்படுத்த வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுக்கு அறவே ஆகாத கலைஞர் குடும்பத்தைக் கடுமையாக விமர்சிப்பதுதான் சரியென்று, அதைச் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் தேவையற்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுமென்று,   மற்ற அதிமுக அமைச்சர்களெல்லாம் அடக்கி வாசித்தபோது, ராஜேந்திரபாலாஜி மட்டும் வெள்ளந்தியாக, இஷ்டத்துக்கு கடும் சொற்களை வீசினார்.  ஆனாலும், மு..ஸ்டாலினை விமர்சித்தது தவறு என்பதை உணர்ந்து,  அறிக்கை வாயிலாக வருத்தமும் தெரிவித்தார்.

அதிமுக அரசியலைப் பொறுத்தமட்டிலும், ராஜேந்திரபாலாஜியை ஒரு சுயநல அரசியல்வாதி என்று உறுதியாகச் சொல்லமுடியும். விருதுநகர் மாவட்டத்தில், தன்னைக் காட்டிலும் இன்னொருவர்  தலையெடுத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். இத்தகைய அரசியல் கணக்கை, ராஜேந்திரபாலாஜி கற்றுக்கொண்டது, அவருடைய அரசியல் ஆசான் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் இருந்துதான். ராஜேந்திரபாலாஜியின் வீழ்ச்சிக்கும், இதுவே காரணம். இத்தகைய சுயநலம், அனைத்துக் கட்சிகளிலும், அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோரிடம் உள்ளது.

அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தப் படும்போது அரசியல் பழிவாங்கல் சட்டப்படி சந்திப்போம் என சவால் விடுவார்கள். ஆனால்,ரஜேந்திரபாலாஜி தலை மறைவாகிவிட்டார். அவருக்காக கட்சியில் இருந்து எவரும் குரல் கொடுக்கவில்லை.

 அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சல்யூட் அடித்த பொலிஸ்படை அவரைத்தேடி அலைகிறது. சினிமா பட பாணியில் பொலிஸாரை சுற்றவிடுகிரார் ராஜேந்திர பாலாஜி

பண மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய தமிழக பொலிஸ் வலை வீசித் தேடி வருகிறது. தமிழக காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்தபடி பதுங்கியிருக்கிறார் அவர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடிவிடக்கூடாது என அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இன்றைக்கிருக்கும் டெக்னாலஜி வளர்ச்சியில் ஒருவர் எங்கிருக்கிறார் என்பதை சைபர் க்ரைம் பொலிஸாரால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

சோர்ஸ்களும் தொடர்புகளும் இல்லாத சாமானியர்களையே 24 மணி நேரத்தில் பிடித்து விடுகிற பொலிஸ், நிறையத் தொடர்புகளை வைத்திருக்கும் ராஜேந்திர பாலாஜியை ஏன் பிடிக்க முடியவில்லை? என்கிற கேள்விகள் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் மத்தியில் இப்போது பேசு பொருளாகி உள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு பொலிஸில்  பழைய நண்பர்கள் யாராவது உதவுகின்றனரா? என்ற சந்தேக கேள்விகளும் தமிழக அரசியல் வட்டாரங்கள் எதிரொலிக்கிறது. 

செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்குபொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 600 பேரின் மொபைல் எண்களையும் சைபர் கிரைம் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மொபைல் எண்களையும் நோட்டமிடத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு பொலிஸ் இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் அவரை தமிழ்நாடு பொலிஸ் நெருங்க முடியாமல் இருப்பதே பல்வேறு சந்தேகங்களையும் புது புது யூகங்களையும் கிளப்பியுள்ளது.

No comments: