பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வந்ததற்காக பாகிஸ்தானின் 3வது உயரிய சிவிலியன் விருதான சிதரா பாகிஸ்தான் விருதை மே.இ.தீவுகள் முன்னாள் கப்டன் டேரன் சமி கடந்த திங்களன்று பெற்றார், இதன் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் டேரன் சமி.
பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஆடிய ஒருசில சொற்ப வெளிநாட்டு வீரர்களில்
டேரன் சமியும் ஒருவர். 2009-ல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்
நடந்த பிறகே பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் பயணிக்கவில்லை.
இப்போதுதான் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானுக்குப் பயணித்தன. இருமுறை ரி20 உலகக் கிண்ணத்தி வென்ற கப்டனான டேரன் சமி, 2016 முதல் 2020 வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி20 கிரிக்கெட்டில் பெஷாவர் ஜால்மி அணிக்கு ஆடினார்.
No comments:
Post a Comment