உலகின் பெரியண்ணன் என வர்ணிக்கப்படும்
அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் நாடுகளுக்கு எதிராக
"தடை" எனும் அரசியல் ஆயுதத்தை
பிரயோகித்து அடிபணிய வைப்பதில் கில்லடியாக விளங்குகுறது. அமெரிக்கா விதிகும் தடைகள் இரண்டு வகைப்படும். ஒன்று
பொருளாதரத்தடை. இரண்டாவது பயணத்தடை.
பொருளாதாரத்தடை விதிக்கப்படும்
நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கபப்டுவதால்
அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஏற்றுமதி இல்லை என்றால் வருமானம் பாதிக்கப்படும்.
இறக்குமதி இல்லை என்றால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உண்டாகும். இதனால்
அந்த நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். அந்த ந்ட்டு இறங்கி வந்து அமெரிக்காவுடன் சமரசம்
பேசி பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடும்.
ஒரு நாட்டின் செல்வாக்கு மிக்க
ஒருவருக்கு விதிக்கப்படும் பயணத்தடை அந்த நாட்டை தன் வசம் ஈர்க்கும் முதல் கட்ட வேலைத்திட்டம்.
மனித உரிமை நாள் அன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அரிக்கை
இலங்கைக்கு நெருக்கடியை ஏர்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு நாடுகளின் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகள் பன்னிரெண்டு பேருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டை நோக்கிய பயணத் தடைவிதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இராணுவ அரசியல் அதிகாரிகளுக்கு அப்பால் மேலும் சிலரையும் உள்ளடக்கி, மொத்தம் 15 பேருக்கும் 10 கட்டமைப்புகளுக்கும், திறை சேரி ஊடாகாவும் பயணத்தடை தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத்
தடை விதிக்கப்பட்ட பன்னிரெண்டு அதிகாரிகளும் முழுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்கள்
என்ற தகவல்களின் அடிப்படையில், அந்த நபர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை
மீறல்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கு ஏற்ற வகையில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையே
இந்த இரு இராணுவ அதிகாரிகளுக்கான பயணத் தடை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி
ஜே பிளிங்கென் அறிவித்திருக்கிறார்.
உகண்டாவைச் சேர்ந்த ஒருவர்,
சீனாவைச் சேர்ந்த நால்வர், வெள்ளை ரஷ்யா எனப்படும் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இருவர்,
பங்களாதேஸைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் இராணுவ லெப்ரினன்ட் கேணல் ஒருவரும் மெக்சிகோவில்
ஒருவருமாக மொத்தம் பன்னிருவருக்கு அமெரிக்காவுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள்
இன அழிப்புக்கு உள்ளாவதாக அமெரிக்க, மற்றும் கனடாத் தரப்புகள் பகிரங்கமாகவே குற்றஞ்சுமத்தும்
நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சீனாவின் மோசமான மனித உரிமை மீறல்
என்று மாத்திரமே குற்றம் சுமத்தப்பட்டுத் தடைப் பட்டியலில் சீன இராணுவ அதிகாரிகள் நால்வர்
உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் அல்லது
குறிப்பிடத்தக்க ஊழல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு
நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதனால், அந்த நபர்களும், அவர்களின் உறுப்பினர்களும்
அமெரிக்காவிற்குள் நுழைய தகுதி அற்றவர்கள் என அமெரிக்கா கூறியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும்
தண்டனை விதிக்கப்படுவது குறித்து தமது அக்கறை, பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தமது
ஆதரவு மனித உரிமைகளை ஊக்குவித்தல், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மனித உரிமைகளை ஊக்குவித்தல்,
பாதுகாப்புத்துறை சீர்திருத்தல், நீதி மற்றும் நல்லிணக்கம் மற்றும் அதன் பிற கடமைகளை
ஆதரித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்கின்றோம் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடனான தமது
கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடனான தாம் பகிர்ந்து கொள்ளும் நீண்ட கால ஜனநாயக பாரம்பரியத்தை
மதிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை
வலுப்படுத்துவதற்கும், வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும் அதன் பாதுகாப்பு
படைகளை மாற்றியமைப்பதற்கும் தாம் உறுதியுடன் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு,
பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமான மனித உரிமைக்கான மரியாதை குறித்து
தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர
சில்வா , அவரது குடும்பத்திற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா கடந்த ஆணு விதித்த தடையுத்தரவிற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை
வெளியிட்டுள்ளது. சவேந்திர சில்வாவுக்கு இலங்கையில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
போரின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியும் வகித்திருந்தார்.இலங்கை கடற்படை
புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி,
சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகாவும்ம்கு அமெரிக்கா அமெரிக்கா பல முறை விசா வழங்க மறுத்துவிட்டது.
மேஜர் ஜெனரல் உதய பெரேரா குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச்
செல்வதற்கு விமான நிலையத்துக்குச் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது
ம்னைவியும் மகனும் திட்டமிட்டபடி புறப்பட்டுச்
சென்றனர். இலங்கையின் பிரதிஉயர் ஸ்தானிகராக
மேஜர் ஜெனரல் உதய பெரேரா [2009/2011] கடமையாற்றினார். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சகி கால்லகே ஆகியோருக்கு நவுஸ்திரேலியா பயணத்தடை விதித்துள்ளது.
அமெரிக்காவால் பயணத்தடை வித்க்கப்பட்ட அனைவரும் ஜ்னாதிபதி கோத்தபாயவுக்கு நெருக்கமான
இராணுவ உயர் அதிகாரிகள். யுத்தகாலத்தில் இராணுவ
அதிகாரிகளை வழி நடத்தியவருக்கு எந்த நாடும் பயணத்தடை விதிக்கவில்லை.
அமெரிக்காவுடன் இணங்கிப் போனால்
இந்தப் பயணத்தடைகள் ஆனைத்தும் உடைக்கப்படும்.
அமெரிக்காவின் சொலுக்குக் கட்டுபடம் இலங்கை தயாராக இல்லை.
அமெரிக்காவின் பொருளாதாரத்தடைக்கு உலக நாடுகள் பல கீழ்ப்படிந்தன. கியூபா, வட. அமெரிக்கா, வெலுசுவேனியா ஆகிய குட்டி
நாடுகள் அடிபணியாது நிமிர்ந்து நிற்கின்றன.
அமெரிக்காவுக்கு 90 மைல் தூரத்துல் உள்ள கியூபா 60 ஆண்டுகால பொருளாதாரத் தடையை
மீறி தலை நிமிர்ந்து நிற்கிறது.. கியூபா என்றதுமே
நினைவுக்கு வருவது கம்யூனிசம்தான். அதற்கு அடையாளமாக இருந்தவர்கள் ஃபிடல் காஸ்ட்ரோவும்,
சே குவேராவும்.
1962-ம் ஆண்டு முதல் கியூபா
மீது பல்வேறு தடைகளைக் கொண்டுவந்தது அமெரிக்கா.
60 ஆண்டுகளைத் தாண்டியும் அமெரிக்காவின் பல்வேறு சதி வேலைகளைத் தகர்த்தெறிந்து தனி ஒரு நாடக நிலைத்து நிற்கிறது கியூபா. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கப்பலில் பல நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்தக் கப்பல் நுழைய எந்த நாட்டிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி, அவர்களுக்கு இடமும், மருத்துவ உதவியும் தந்தது கியூபா மட்டுமே. கல்வி, மருத்துவம் என்று பல்வேறு பிரிவுகளில் கியூபா தனித்துவம் மிக்க நாடக இருக்கிறது. `அந்த நாட்டில் எந்த சர்வாதிகாரமும் என்றுமே எடுபடாது’ என்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
No comments:
Post a Comment