கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்குமே பொக்ஸிங் டே போட்டி என்பது ஒரு கௌரவ போட்டியாக பார்க்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டியை பொக்ஸிங் டெஸ்ட் என்று அழைப்பார்கள். அந்த டெஸ்டில் ஜெயிப்பதற்கு அனைத்து அணிகளுமே தங்களது உத்வேகத்தை காண்பிக்கும். அப்படி ஒரு முக்கியமான இந்த பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தான் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 305 ஓட்டங்களை அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி 191 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் பொக்ஸிங் டே வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசியாக இந்திய அணி விளையாடிய மூன்று பொக்ஸிங் டே போட்டிகளை பற்றிய தொகுப்பு
2018ஆம் ஆண்டு
:
கோலி தலைமையிலான
இந்திய
அணி
மெல்போர்ன்
மைதானத்தில்
பொக்ஸிங்
டே போட்டியில் அவுஸ்திரேலிய
அணியை
எதிர்த்து
விளையாடியது.
இந்த
போட்டியில்
புஜாராவின்
அபார
சதத்தின்
மூலம்
முதல்
இன்னிங்சில்
443 ஓட்டங்கள்
குவித்து
இருந்தது.
ஆனால்
அவுஸ்திரேலிய
அணி
151 ஓட்டங்களில்
சுருண்டது.
பின்னர்
2-வது
இன்னிங்சில்
இந்திய
அணி
106 ஓட்டங்கள்
எடுத்து
டிக்ளேர்
செய்ய
அவுஸ்திரேலிய
அணிக்கு
399 ஓட்டங்கள்
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால்
அதனை
துரத்தி
அவுஸ்திரேலிய
அணி
261 ரஓட்டங்களை
மட்டுமே
குவிக்க
137 ஓட்டங்கள்
வித்தியாசத்தில்
இந்திய
அணி
அந்த
போட்டியில்
வெற்றி
பெற்றது.
2020 ஆம் ஆண்டு
:
ரஹானே தலைமையில்
மீண்டும்
பொக்ஸிங்
டே
போட்டியில்
அதே
மெல்போர்ன்
மைதானத்தில்
இந்திய
அணி
அவுஸ்திரேலியாவை
எதிர்த்தது.
இந்த
போட்டியில்
அவுஸ்திரேலிய
அணி
முதல்
இன்னிங்சில்
195 ஓட்டங்களை
மட்டுமே
குவிக்க
இந்திய
அணியானது
ரஹானேவின்
சதம்
மூலமாக
326 ஓட்டங்கள்
குவித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 200 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு 70 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த பொக்ஸிங் டே போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து மூன்று பொக்ஸிங் டே போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment