ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் 2 நாட்கள் மெகா அளவில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தை நடத்துவதற்காக அனைத்து விதமான வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1214 வீரர்கள் போட்டிபோட உள்ளார்கள்.
இந்தியாவின் அண்டை
நாடான
பூட்டான்
நாட்டிலிருந்து
வரலாற்றிலேயே
முதல்
முறையாக
ஒரு
வீரர்
ஐபிஎல்
தொடரில்
பங்கேற்க
விண்ணப்பம்
செய்துள்ளார்.
பூட்டான்
நாட்டிலுருந்து
“மிக்யோ
டோர்ஜி”
எனும்
22 வயது
நிரம்பிய
இவர்
தற்போது
கிரிக்கெட்
ரசிகர்களிடையே
மிகப்பெரிய
கவனத்தை
ஈர்த்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல்
தொடருக்கான
ஏலத்தில்
விண்ணப்பம்
செய்ய
இந்தியாவின்
முன்னாள்
நட்சத்திர
வீரர்
மற்றும்
கப்டன்
எம்
எஸ்
டோனி
அளித்த
உற்சாகமே
காரணமென
மிக்யோ
டார்ஜி
உணர்ச்சியுடன்
தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
அவர்
வெளியிட்டுள்ள
ஒரு
வீடியோவில்
டோனி
அவருக்கு
ஒரு
சில
ஆலோசனைகளை
வழங்குவதுடன்
இறுதியில்
அவரின்
பூட்டான்
நாட்டு
கிரிக்கெட்
அணியின்
சீருடையில்
கையொப்பமிட்டு
தனது
வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார்.
பூட்டான் நாட்டில்
கிரிக்கெட்
என்பது
மிகவும்
பிரபலம்
அடையாத
ஒரு
விளையாட்டாகும்.
சொல்லப்போனால்
கடந்த
2019ஆம்
ஆண்டு
தான்
பூட்டான்
அணி
சர்வதேச
கிரிக்கெட்
வாரியத்தின்
ஒரு
துணை
உறுப்பு
நாடாக
சேர்த்து
கொள்ளப்பட்டது.
பூட்டான் அணிக்காக மிக்யோ டார்ஜி இதற்கு முன் நேபால் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் கடந்த வருடம் அந்நாட்டில் நடந்த எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் சாகித் அப்ரிடி போன்ற தரமான கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment